கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

விதிமுறைகளை மீறியதற்காக 4 வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி(RBI fines 4 banks for violating norms)...


விதிமுறைகளை மீறியதற்காக 4 வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி(RBI fines 4 banks for violating norms)...


இந்தியாவில் இருக்கும் வங்கிகளின் நடைமுறை மற்றும் பணப்பரிவர்த்தனைகளை மேற்பார்வையிடும் வேலையையும், வங்கிகளை கட்டுப்படுத்தும் பணிகளையும் இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது.


பணப்பரிவர்த்தனை, கடன் மற்றும் வைப்புநிதிகளுக்கான கட்டணம், வட்டி உள்ளிட்ட விதிகளை ரிசர்வ் வங்கி தான் வகுக்கிறது. அதே போல் வங்கிகளுக்கான நடைமுறை வழிகாட்டுதல்களையும் ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.


ரிசர்வ் வங்கியால் விதிக்கப்படும் வழிகாட்டுதல்கள் முறையாக கடைப்பிடிக்காத வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அபராதமும் விதிக்கிறது. அந்த வகையில் தற்போது நான்கு கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.


லால்பாக் கூட்டுறவு வங்கி, மெஹ்சானா கூட்டுறவு வங்கி, ஹரிஜ் நாக்ரிக் சஹகாரி வங்கி மற்றும் தேசிய கூட்டுறவு வங்கி ஆகியவை அபராதம் விதிக்கப்பட்ட வங்கிகளாகும்.


தேசிய கூட்டுறவு வங்கிக்கு 1 லட்சம் ரூபாயும், ஹரிஜ் நாக்ரிக் சஹகாரி வங்கிக்கு ரூ.3 லட்சமும், மெஹ்சானா கூட்டுறவு வங்கிக்கு ரூ.3.50 லட்சமும், லால்பாக் கூட்டுறவு வங்கிக்கு ரூ.5 லட்சமும் அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி. லால்பாக் கூட்டுறவு வங்கி வங்கிகளுக்கிடையிலான பணவர்த்தனை உச்ச வரம்பை மீறியது, முதிர்வு தேதியை எட்டிய பிறகும் தொடர் மற்றும் டெர்ம் டெபாசிட்டுகளுக்கான வட்டியை செலுத்த தவறியதற்காகவும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


இதே போல் மெஹ்சானா வங்கி கடன் வழங்கியதில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


வங்கியின் இயக்குநராக உள்ள ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் கடன் வழங்கப்பட்டுள்ளதால்  இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns