கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வேலை வாய்ப்பகங்கள்‌ வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில்‌ முதல்‌ தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குதல்‌- முதல்‌ தலைமுறை பட்டதாரி சான்றிதழ்‌ வழங்குவது குறித்து விரிவான நெறிமுறைகள்‌ - வருவாய்‌ நிருவாக ஆணையரின் கடிதம் ந.௧.எண்‌.வ.நி.5(3)/ 01/ 329 /2021, நாள்‌: 05.09.2023 (Giving preference to First Generation Graduates in Government posts filled through Employment Offices- Detailed norms regarding issuance of First Generation Graduate Certificate - Revenue Administration Commissioner's Letter Rc.No.R.A.5(3)/ 01/ 329 /2021, Dated: 05.09.2023)...



வேலை வாய்ப்பகங்கள்‌ வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில்‌ முதல்‌ தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குதல்‌- முதல்‌ தலைமுறை பட்டதாரி சான்றிதழ்‌ வழங்குவது குறித்து விரிவான நெறிமுறைகள்‌ - வருவாய்‌ நிருவாக ஆணையரின் கடிதம் ந.௧.எண்‌.வ.நி.5(3)/ 01/ 329 /2021, நாள்‌: 05.09.2023 (Giving preference to First Generation Graduates in Government posts filled through Employment Offices- Detailed norms regarding issuance of First Generation Graduate Certificate - Revenue Administration Commissioner's Letter Rc.No.R.A.5(3)/ 01/ 329 /2021, Dated: 05.09.2023)...


வருவாய் நிர்வாகம்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மை ஆணையரகம்.


அனுப்புநர்‌ 


கூடுதல்‌ தலைமைச்‌ செயலர்‌ / 

வருவாய்‌ நிருவாக ஆணையர்‌, 

எழிலகம்‌, சேப்பாக்கம்‌,

சென்னை-5.


பெறுநர்‌

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்‌

(இணைப்புடன்‌),


ந.௧.எண்‌.வ.நி.5(3)/ 01/ 329 /2021, நாள்‌: 05.09.2023


அய்யா / அம்மையீர்‌,


பொருள்‌ :- பொதுப்பணிகள்‌ - வேலை வாய்ப்பகங்கள்‌ வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில்‌ முதல்‌ தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குதல்‌- முதல்‌ தலைமுறை பட்டதாரி சான்றிதழ்‌ வழங்குவது குறித்து விரிவான நெறிமுறைகள்‌ வழங்குதல்‌ -தொடர்பாக.


பார்வை :- 1. அரசாணை(நிலை) எண்‌.85, உயர்கல்வித்துறை, நாள்‌: 16.04.2010.


2. அரசு கடிதம்‌ (நிலை) எண்‌ 315, உயர்கல்வித்‌ (ஜே.2)துறை, நாள்‌ 13.11.2017.


3. அரசாணை(நிலை) எண்‌.122, மனிதவள மேலாண்மை (கே2)துறை, நாள்‌: 02.11.2021.


4. அரசுக்‌ கடிதம் எண்‌.4745/வ.நி.2(1)/2022, வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்துறை, நாள்‌: 17.05.2022 மற்றும்‌ 14.02.2023


5. இவ்வலுவலக கடித எண்‌ வ.நி.5(3)/01/329/2021, நாள்‌ 21.09.2022 மற்றும்‌ 13.03.2023.


6. அரசாணை(நிலை) எண்‌.296, வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை வருவாய்‌ நிருவாக அலகு, வ.நி. 3(2) பிரிவு நாள்‌: 19.06.2023.


*****


பார்வையில்‌ காணும்‌ கடிதங்களின்‌ மீது கவனத்தை ஈர்க்க விழைகிறேன்‌.


2. பார்வை 3-ல்‌ காணும்‌ அரசாணையில்‌, வேலைவாய்ப்பகங்கள்‌ வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில்‌ முதல்‌ தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதற்காக அரசாணை வெளியிடப்பட்டது. மேலும்‌, மேற்குறிப்பிட்ட அரசாணையின்‌ அடிப்படையில்‌, முன்னுரிமை பெற்றுள்ள பிரிவினராக வேலைவாய்ப்பு அலுவலகங்களில்‌ பதிவு செய்து கொள்வதற்கும்‌, முன்னுரிமை முறை பின்பற்றப்படும்‌ பணியாளர்‌ தெரிவுகளுக்கு விண்ணப்பிக்கும்‌ பொருட்டும்‌, வேலைவாய்ப்பில்‌ முன்னுரிமை சான்றிதழ்‌ கோரி விண்ணப்பிக்கும்‌ முதல்‌ தலைமுறை பட்டதாரி என்பதற்கான சான்றிதழ்‌ வழங்கிடும்‌ வகையில்‌முதல்‌ தலைமுறை பட்டதாரி சான்றிதழ்‌ வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்‌ பின்வருமாறு பார்வை 4-ல்‌ காணும்‌ அரசாணையில்‌ அரசு ஆணை பிறப்பித்துள்ளது.


வேலை வாய்ப்பகங்கள்‌ வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில்‌ முதல்‌ தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குதல்‌- முதல்‌ தலைமுறை பட்டதாரி சான்றிதழ்‌ வழங்குவது குறித்து விரிவான நெறிமுறைகள்‌ 


அரசாணை(நிலை) எண்‌.296, வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை வருவாய்‌ நிருவாக அலகு, வ.நி. 3(2) பிரிவு நாள்‌: 19.06.2023.


>>> வேலை வாய்ப்பகங்கள்‌ வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில்‌ முதல்‌ தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குதல்‌- முதல்‌ தலைமுறை பட்டதாரி சான்றிதழ்‌ வழங்குவது குறித்து விரிவான நெறிமுறைகள்‌ - வருவாய்‌ நிருவாக ஆணையரின் கடிதம் ந.௧.எண்‌.வ.நி.5(3)/ 01/ 329 /2021, நாள்‌: 05.09.2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...