கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.10.2023 - School Morning Prayer Activities...

 

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.10.2023 - School Morning Prayer Activities...

  


திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்


அதிகாரம் : கல்வி


குறள் :392


எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு..   (392) 


விளக்கம்:


எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர். .



பழமொழி :

All that glitters is not gold

மின்னுவதெல்லாம் பொன்னல்ல 



இரண்டொழுக்க பண்புகள் :


1. அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்ல நாம் ஆழ்ந்து சிந்திக்க நம்மை தூண்டும்.



2. எனவே தேவையில்லாத பேச்சை குறைத்து அமைதி காக்க முயல்வேன்.


பொன்மொழி :


ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு. பாரதியார்


பொது அறிவு :


உலகில் அதிக அளவு சிலை வடிக்கப்பட்ட மனிதர் யார் ?

லெனின்


மில்லினியம் டோன் எங்குள்ளது ?

கிரீன்விச்


உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?

கரையான்


பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?

சலவைக்கல்


English words & meanings :


 Anomalies - முரண்பாடுகள்

Assault - தாக்குதல்



ஆரோக்ய வாழ்வு : 


நார்ச்சத்து, ஃபோலேட், இரும்பு மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, உங்கள் உணவில் பெர்ரிகளை சேர்க்க வேண்டும். இது தவிர, பெர்ரி ஆன்டிஆக்ஸிடன்ட்களின் நல்ல மூலமாகும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து இதயத்தைப் பாதுகாக்கின்றன. மேலும், பெர்ரிகளில் கொழுப்பு குறைவாக உள்ளது, இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே, பெர்ரிகளை உட்கொள்வது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நன்மை பயக்கும்.


நீதிக்கதை


 "நாம் எவ்வழியோ மக்களும் அவ்வழி" 


அது ஓர் அழகிய நகரம். அந்த நகரத்தின்  நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர்  அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார். ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான். 


அப்போது அங்கிருந்த வயதான காவலாளியிடம் "ஐயா பெரியவரே, இந்த ஊர் மக்கள் எப்படி?"என்று கேட்டான்.


அதற்குக் காவலாளி "ஏன் கேக்குற தம்பி ? இந்த ஊருக்கு குடிவரப் போறியா?" என்று சந்தேகத்துடன் கேட்டார்.


"ஆமாம் பெரியவரே. நான் முன்னாடி இருந்த ஊர் ரொம்ப மோசம். எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு வருவாங்க. ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் தப்பா பேசிக்கிட்டும் திட்டிக்கிட்டும் , எப்படா அந்த ஊரை விட்டு வருவோம்னு இருந்தது. அதான் கேட்டேன் இந்த ஊர் எப்படி?" என்று கேட்டான்.


''நீ வேற தம்பி, இந்த ஊர் உன்னுடைய ஊரைவிட ரொம்ப  மோசம். போட்டி, பொறாமை, ஜாதிச் சண்டை, கலவரம்ன்னு ஏதாவது ஒரு பிரச்னை இருந்துக்கிட்டே இருக்கும். நீயே நிம்மதியைத் தேடி வர, உனக்கு இந்த ஊரு சரிப்படாது தம்பி " என்று கூறி அந்த வாலிபனை  வெளியே வழியனுப்பி வைத்தார். 


சிறிது நேரம் கழித்து,


அவ்வழியாக  வந்த வேறொரு ஆள் காவலாளியிடம் அதே கேள்வியைக் கேட்டான்.


"ஐயா, இந்த ஊரில் தங்கி வியாபாரம் பண்ணலாம்ன்னு இருக்கேன். இந்த ஊர் மக்கள் எப்படி?"


பெரியவர் சிரித்துக்கொண்டே , "ஏன் தம்பி, உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சா ?"என்று கேட்டார்.


"ரெண்டு குழந்தையே இருக்குதுங்க ஐயா" என்றான்."அப்புறம் ஏன்? இந்த ஊருக்கு வர்ற? உங்க ஊர்லயே வியாபாரம் பண்ணலாம்ல? " என்றார் காவலர்.


"எங்க ஊர் மாதிரி வராதுங்க.. அந்த ஊர் மக்கள் ரொம்பப் பாசக்காரங்க. என் குடும்பம் இப்போ வறுமையில இருக்கு. சம்பாதிக்கத்தான் இந்த ஊருக்கு வந்தேன். நல்லா  சம்பாதிச்சிட்டு மறுபடியும் அங்கேயே போயிடுவேன்" என்று கண் கலங்கியபடியே கூறினான்.


"அழாதே தம்பி, இந்த ஊர் மக்களும் ரொம்ப நல்லவங்க. தைரியமா நீ வியாபாரம் பண்ணலாம்" என்று கூறி கதவுகளைத் திறந்து உள்ளே அனுப்பி வைத்தார்.


காவலாளியின் அருகில் இருந்த ஒருவர் இந்த இரண்டு சம்பவங்களையும் கவனித்துக்கொண்டிருந்தார்.


உடனே அவரிடம் "முதலில் வந்தவர்கிட்ட இந்த ஊர் பொல்லாததுன்னு சொன்னீங்க, இவர்கிட்ட மட்டும் நல்ல ஊர்ன்னு சொல்லுறீங்களே ஏன்?" என்று சந்தேகத்துடன் கேட்டார்.


அதற்குப் பெரியவர்  "இந்த உலகம் கண்ணாடி மாதிரி. நாம எப்பிடி இருக்கிறோமோ அப்படித்தான் கண்ணாடி நம்மைக் காட்டும்'' என்றார்.


சமயோசித புத்தி 


நாய், சிறுத்தை, குரங்கு

ஒரு காட்டில் காட்டுநாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு சிறுத்தைப்புலி தன்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்ததை அந்த காட்டுநாய் பார்த்தது.


நாயை பிடித்து தின்ன வேண்டும் என்பதுதான் சிறுத்தைப்புலியின் நோக்கம். எப்படி அதனிடம் இருந்து தப்பி செல்வது என்பது காட்டு நாயின் கவலை.


ஓடிச்செல்வதால் பயனில்லை. ஏனென்றால் எவ்வளவு வேகமாக ஓடினாலும் சிறுத்தைப்புலியின் அளவுக்கு காட்டு நாயால் வேகமாக ஓட முடியாது.



எனவே காட்டு நாய் உடனே மிக வேகமாக யோசிக்க தொடங்கியது. அருகில் சில எலும்புகள் கிடந்தன. அவற்றை பார்த்தும் உடனே அந்த காட்டு நாய்க்கு ஒரு யோசனை பிறந்தது.


சிறுத்தைப்புலியின் பக்கம் தன் முதுகை திருப்பிக்கொண்டு கீழே அமர்ந்து அந்த எலும்புகளை மென்று தின்பதுபோல் கடிக்க ஆரம்பித்தது. சிறுத்தைப்புலி அருகில் வந்து தன் மீது பாய்வதற்கு தயாரானபோது காட்டு நாய் உரத்த குரலில் சொன்னது….



”இப்போது நான் தின்று முடித்த சிறுத்தைப்புலி மிகவும் சுவையாக இருந்தது. அக்கம் பக்கத்தில் வேறு சிறுத்தைப்புலி கிடைக்குமா? என்று தேடிபார்க்க வேண்டும்” என்றது.


இதைக் கேட்டதும் பயந்து போய் சிறுத்தைப்புலி அப்படியே ஸ்தம்பித்து சிலைபோல் நின்று விட்டது.


இந்த காட்டு நாய் சிறுத்தைப்புலிகளையே கொன்று தின்று விடுகிறதே. அப்படியானால் எவ்வளவு பலம் வாய்ந்ததாய் இருக்க வேண்டும். இதனிடம் அகப்படாமல் தப்பி சென்றுவிட வேண்டும் என்று நினைத்து ஓசைப்படாமல் பின்னோக்கி சென்று அந்த சிறுத்தைப்புலி புதருக்குள் மறைந்துவிட்டது.


அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து இருந்த ஒரு குரங்கு நடந்ததை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தது. தனக்கு தெரிந்த தகவலை சிறுத்தைப்புலியுடன் பகிர்ந்து கொண்டு சிறுத்தைப்புலியுடன் பேரம் பேசி தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ளலாம் என்று அந்தக் குரங்கு கருதியது.


எனவே சிறுத்தைப்புலியை பின் தொடர்ந்து அந்தக்குரங்கு வேகமாக ஓடிச்சென்றது. காட்டு நாயும் இதை கவனித்தது. ஏதோ சதி நடக்கிறது என்பதை புரிந்துக்கொண்டது.


குரங்கு, சிறுத்தைப்புலியிடம் சென்று காட்டு நாய், சிறுத்தைப்புலியை எப்படி ஏமாற்றியது என்ற முழு விவரத்தையும் சொன்னது. சிறுத்தைப்புலிக்கு தாங்க முடியாத கோபமும், ஆத்திரமும் வந்தது.


அந்த காட்டு நாய் என்னையே ஏமாற்றலாம் என்று நினைக்கிறதா? அதற்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுகிறேன்.


”இந்த காட்டில் யார் யாரை கொன்று தின்பார்கள் என்பதை காட்டுகிறேன்” என்று சொல்லிவிட்டு, “”குரங்கே வா. என் முதுகில் ஏறி உட்கார். 2 பேரும் அந்த காட்டு நாயை பிடிக்கலாம்” என்றது. குரங்கு, சிறுத்தைப்புலியின் முதுகில் ஏறி உட்கார்ந்தது.


இரண்டும் நாயை நோக்கி சென்றன. சிறுத்தையும், குரங்கும் சேர்ந்து வருவதை காட்டு நாய் பார்த்தது. இந்த திருட்டு குரங்கு என்னை இப்படி ஆபத்தில் மாட்டி விட்டதே இப்போது என்ன செய்வது? என்று அந்த காட்டு நாய் யோசித்தது. அப்படி யோசித்ததே தவிர, அதற்காக அந்த காட்டு நாய் பயந்து ஓடவில்லை.


அந்த சிறுத்தையையும், குரங்கையும் பார்க்காத மாதிரி நடித்து அவைகளுக்கு தன் முதுகை காட்டிக்கொண்டு தரையில் அமர்ந்தது. அவை அருகில் நெருங்கியதும் அந்த காட்டு நாய் உரத்த குரலில் சொன்னது.


”அந்த போக்கிரி குரங்கு எங்கேபோய் தொலைந்தது. அதனை நம்பவே முடியாது. நான் இன்னொரு சிறுத்தைப்புலியை சாப்பிடுவதற்கு பிடித்துக்கொண்டுவா என்று சொல்லி அனுப்பி அரை மணிநேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் அந்த குரங்கை காணோமே?” என்றது.


காட்டு நாய் சொன்னதை கேட்ட சிறுத்தைப்புலி தன் கோபம் முழுவதையும் குரங்கின் மீது திருப்பியது. அதனை கடித்துக் குதறி கொன்று தின்றுவிட்டது.


நீதி: வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வரலாம். ஆபத்துக்கள் வரலாம். பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்தியுங்கள். வெல்லலாம்



இன்றைய செய்திகள்


28.10.2023


கல்வியாண்டின் நடுப்பகுதியில் உள்ள வெளியேற்றம் குழந்தைகளின் கல்வியை பாதிக்கும் என்று என்ஜிஓ அறிக்கை கூறுகிறது.


தென்னிந்தியாவில் முதலீடு செய்வதற்கு தமிழ்நாடு முதன்மையான தேர்வாக உள்ளது: டிஆர்பி ராஜா.


மாலத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க ஜெய்சங்கர் தலையிட வேண்டும் என்று கனிமொழி, அண்ணாமலை கோரிக்கை.


உத்தரகாண்ட் அரசு சென்னை ரோட்ஷோவில் ₹10,150 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.


பெலகாவியில் லஞ்சம் வாங்கிய வணிக வரி இணை ஆணையரை லோக் ஆயுக்தா கையும் களவுமாக பிடித்தது.


கத்தாரில் 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


நாய்களில் வெறிநாய்க்கடியின் வழக்குகள், மோசமான விலங்கு பிறப்பு கட்டுப்பாடு செயல்படுத்தல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்துகின்றன.


தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 6.11 கோடி என வரைவு வாக்கெடுப்பு பட்டியல் தெரிவிக்கிறது.


MGNREGSக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு தலைவர் முர்மு ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் உதவிப் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா. இந்தியா வாக்களிக்காமல் புறக்கணிக்கிறது.


Today's Headlines


An NGO report says mid-year expulsions affect children's education. 


Tamil Nadu is top choice for investment in South India: TRP Raja 


Kanimozhi, Annamalai demand that Jaishankar should intervene to release Tamil Nadu fishermen detained in Maldives.


The Uttarakhand government signed MoUs worth ₹10,150 crore at the Chennai Roadshow. 


Lokayukta nabs Commercial Tax Joint Commissioner for taking bribe in Belagavi 


8 former Indian Navy officers sentenced to death in Qatar 


Cases of rabies in dogs are causing concern among poor animal birth control enforcement activists.


The draft poll list shows that the number of voters in Tamil Nadu is 6.11 crore. 


Tamil Nadu Chief Minister Stalin has urged the central government to release funds for MGNREGS. 


Tamil Nadu Chief Minister Stalin has urged President Murmu to approve the bill against NEET examination. 


UN calls for aid ceasefire between Israel and Hamas India abstains by not voting.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...