கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக்‌ கல்வித்‌ துறை - ஊதிய முரண்பாடு - மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாடு களைதல்‌ - பள்ளிக்கல்வி இயக்ககத்தின்‌ கீழ்‌ வரும்‌ அனைத்து நிலை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியரல்லாத பணியாளர்களின்‌ மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாட்டினை சரிசெய்தல்‌ சார்பான கருத்துருக்கள்‌ - பின்பற்ற வேண்டிய தெளிவுரைகள்‌ - தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ சுற்றறிக்கை, ந.க.எண்‌.34750/எல்‌/இ3/2023-1, நாள்‌: 25.10.2023(Department of School Education - Pay Anamolies - Eliminating Senior-Junior Pay Discrepancy - Proposals for Redressal of Senior - Junior Pay Anamolies of all levels of teachers and non-teaching staff under Directorate of School Education - Clarifications to be followed - Circular of the Director of School Education, Tamil Nadu, Rc.No.34750/ L/E3/2023-1, Dated: 25.10.2023)...

தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ சுற்றறிக்கை, சென்னை-06.

ந.க.எண்‌.34750/எல்‌/இ3/2023-1, நாள்‌: 25.10.2023

பொருள்‌ : பள்ளிக்‌ கல்வித்‌ துறை - ஊதிய முரண்பாடு - மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாடு களைதல்‌ - பள்ளிக்கல்வி இயக்ககத்தின்‌ கீழ்‌ வரும்‌ அனைத்து நிலை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியரல்லாத பணியாளர்களின்‌ மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாட்டினை சரிசெய்தல்‌ சார்பான கருத்துருக்கள்‌ - பின்பற்ற வேண்டிய தெளிவுரைகள்‌ - தொடர்பாக.

பார்வை : 1. அரசாணை (நிலை) எண்‌.1400, நிதி(ஊ.கு)த்துறை, நாள்‌.21.12.1998.

2. அரசாணை (நிலை) எண்‌.25, பணியாளர்‌ (மற்றும்‌) நிர்வாக சீர்திருத்தத்‌ துறை, நாள்‌.22.03.2015.

3. அரசு கடித எண்‌.22508, பணியாளர்‌ (மற்றும்‌) நிர்வாக சீர்திருத்தத்‌ துறை. நாள்‌.03.09.2019...

4. அரசாணை எண்‌.151, பள்ளிக்‌ கல்வி பக(1(1)) துறை, நாள்‌.09.09.2022.

5. தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, சென்னை-06, ந.க.எண்‌. 34750 / எம்‌ / 2023, நாள்‌.26.06.2023.

(((())))

பார்வை-4 மற்றும்‌ 5-இல்‌ கண்டுள்ள அரசாணை மற்றும்‌ செயல்முறைகளின்படி, பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ நிருவாக சீரமைப்பின்‌ காரணமாக பள்ளிக்கல்வி இயக்ககத்தின்‌ கீழ்‌ வரும்‌ அனைத்து நிலை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியரல்லாத பணியாளர்களின்‌ மூத்தோர்‌ இளையோர்‌ ஊதிய முரண்பாட்டினை சரிசெய்தல்‌ தொடர்பான ஆணை வழங்கும்‌ நிருவாக அதிகாரம்‌ பெற்ற அலுவலராக பள்ளிக்கல்வி இயக்கக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர்‌ செயல்பட்டு வருகிறார்‌.

2. அதனைத்‌ தொடர்ந்து, மூத்தோர்‌-இளையோர்‌ ஊதிய முரண்பாடுகள்‌ சார்ந்த கோரிக்கைகள்‌ மற்றும்‌ ஊதிய முரண்பாடுகளை சரிசெய்தல்‌ சார்பான கருத்துருக்களை இவ்வியக்ககத்திற்கு பரிந்துரை செய்து அனுப்பப்படும்போது. கீழ்க்காணும்‌ காரணிகளின்‌ அடிப்படையில்‌ ஆய்வு செய்து அனுப்புமாறு அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களும்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

1) பணியில்‌ மூத்தவரின் ஊதிய முரண்பாடு சரிசெய்ய சார்ந்த அலுவலர்‌ நிலையிலேயே ஆய்வு செய்து உரிய விதிகளின்படி சரியாகயிருப்பின்‌ மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்‌.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...