அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் 8,691 தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடல் - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு...
பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை மேம்படுத்துதல், மாணவர்களின் இடைநிற்றல் குறித்த விவரங்கள், அதற்கான காரணங்கள், பொதுத் தேர்வில் அதிகப்படியான விழுக்காடு பெறுதல் போன்றவை குறித்து தலைமையாசிரியர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துரையாட முடிவெடுத்தோம்.
அதன்படி நவம்பர் 16 முதல் நேற்று (13.12.2023) வரையிலும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் 8,691 தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடியுள்ளோம்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வழிநடத்தும் தலைமையாசிரியர்கள் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் பல்வேறு நிலைகளில் உள்ள கல்வி அலுவலர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம்!