கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வருமான வரி செலுத்துவோர் அறிய வேண்டிய விழிப்புணர்வு தகவல்கள்

 

 

வருமான வரி செலுத்துவோர் அறிய வேண்டிய விழிப்புணர்வு தகவல்கள்


2025-26 நிதியாண்டு Income Tax கணக்கிடும்போது Marginal Relief மற்றும் Conveyance Allowance பற்றி விழிப்புடன் இருங்கள். 


இங்கே சொல்லப்படும் விளக்கங்கள் New Regimeக்கு மட்டுமே பொருந்தும்.


Marginal Relief பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இந்த நிதியாண்டில் எனக்கு தெரிந்த ஒருவர் Rs.58000 வருமான வரி கணக்கிட வேண்டிய நிலையில் Rs.71,000 என கணக்கிட்டிருந்தார்.


Conveyance Allowance பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் மற்றொருவர் சென்ற நிதியாண்டில் Rs.75,000 வருமான வரி கட்ட வேண்டிய நிலையில் ரூ.80,000 வருமானவரி கட்டி இருக்கிறார்.


* Salary Income

12 மாத சம்பளம், DA Arrears, Bonus, EL Surrender மற்றும் இதர நிலுவைத்தொகை ஆகியவைகளின் கூட்டுத்தொகை என்பது Total Salary Income. 


* Standard Deduction

இதில் Standard Deduction 75000 கழிக்க வேண்டும்.  (Permanant Disabled ஆசிரியர்களாக இருந்தால் அவர்கள் சம்பளத்தில் மாதா மாதம் பெறும் Conveyance Allowance ரூ.2500 மொத்தம் ரூ.30,000 கழிக்கலாம்).


* Taxable Income

இந்த இரண்டையும் கழித்துவிட்டு வரும் தொகை Taxable Income ஆகும். இந்த தொகைக்கு தான் வருமான வரி கணக்கிடப்படுகிறது.


* Income Tax Slab

Upto 4,00,000   - Nil Tax

4,00,001 to 8,00,000 – 5% tax (ie) Rs.20,000.

8,00,001 to 12,00,000 – 10% tax (ie) Rs.40,000.

12,00,001 to 16,00,000 – 15% tax (ie) Rs.60,000.

16,00,001 to 20,00,000 – 20% tax (ie) Rs.80,000.

20,00,001 to 24,00,000 – 25% tax (ie) Rs.1,00,000

Exeeding 24,00,000 – 30% tax 


 Tax Rebate U/s 87A

Taxable Income 12,00,000 இருப்பவர்கள் Income Tax Slab இன் படி வருமான வரி ரூ.60,000 வருமான வரி கட்ட வேண்டும். ஆனால் Taxable Income 12,00,000 இருப்பவர்களுக்கு வருமான வரிச் சட்டம் U/s 87A வின் படி முழு வருமானவரி தொகையும் தள்ளுபடி செய்யப்படும். எனவே தான் Taxable Income 12,00,000 இருப்பவர்கள் வருமான வரி கட்ட தேவை இல்லை.


* Marginal Relief

Taxable Income 12,00,001 முதல் 12,75,000 வரை இருப்பவர்களுக்கு வருமான வரிச் சட்டம் Marginal Relief என்ற சலுகை அளிக்கிறது.


* Example 1

உதாரணமாக Taxable Income 12,00,200 இருந்தால் Tax Rebate U/s 87A இன் படி வரி தள்ளுபடி கிடையாது. 

Income Tax Slab இன் படி இவர்களுக்கு Rs.60,030 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்ட வேண்டி வரும் வரும். ஆனால் இவருக்கு Marginal Relief சலுகை இவருக்கு கிடைக்கிறது. Marginal Relief Rs.59,830 கழித்துவிட்டு  இவர் வருமான வரி Rs.200ம் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து வருமான வரி செலுத்தினால் போதும்.


இவர் Marginal Relief பற்றி அறியவில்லை என்றால் Rs.60,030 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்டுவார். இது, மிகப்பெரிய இழப்பாக அமையும்.


* Example 2

உதாரணமாக Taxable Income 12,50,00 இருந்தால் Tax Rebate U/s 87A இன் படி வரி தள்ளுபடி கிடையாது. 

Income Tax Slab இன் படி இவர்களுக்கு Rs.67,500 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்ட வேண்டி வரும் வரும். ஆனால் Marginal Relief சலுகை இவர்களுக்கு கிடைக்கிறது. இவர் Marginal Relief Rs.17,500 கழித்துவிட்டு வருமான வரி Rs.50,000ம் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து வருமான வரி செலுத்தினால் போதும்.


இவர் Marginal Relief பற்றி அறியவில்லை என்றால் Rs.67,500 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்டுவார். இது, இழப்பாக அமையும்.


* Conveyance Allowance

Disabled Persons தம் சம்பளத்தில் பெறும் Conveyance Allowance தொகை முழுதையும் Standard Deduction இல் கழித்துகொள்ளலாம். 


* Example 1

மாதா மாதம் ரூ.2500 Conveyance Allowance பெறும் ஒருவர் Salary Income ரூ.13,00,000 பெற்றிருந்தால் Standard Deduction இல் ரூ.75000 மற்றும் ரூ.30000 என மொத்தம் ரூ.1,05,000 கழித்துக்கொள்ளலாம். எனவே, அவருடைய Taxable Income Rs.11,95,000. வருமான வரிச் சட்டம் U/s 87A வின் படி இவருக்கு Nil Tax.


இவர் Conveyance Allowance பற்றி அறியவில்லை என்றால் Standard Deduction ரூ.75000 மட்டும் கழித்து Taxable Income Rs.12,25,000 என தவறாக கணக்கீடு செய்து Marginal Relief இன் படி Rs.25,000 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்டுவார். இது, இழப்பாக அமையும்.


* Example 2

மாதா மாதம் ரூ.2500 Conveyance Allowance பெறும் ஒருவர் Salary Income ரூ.13,40,000 பெற்றிருந்தால் Standard Deduction இல் ரூ.75000 மற்றும் ரூ.30000 என மொத்தம் ரூ.1,05,000 கழித்துக்கொள்ளலாம். எனவே, அவருடைய Taxable Income Rs.12,35,000. Marginal Relief ன் படி இவருக்கு Tax 35,000 + 4% CESS.


இவர் Conveyance Allowance பற்றி அறியவில்லை என்றால் Standard Deduction ரூ.75000 மட்டும் கழித்து Taxable Income Rs.12,65,000 என தவறாக கணக்கீடு செய்து Marginal Relief இன் படி Rs.65,000 வருமான வரியும் அதற்குரிய 4% CESS ம் சேர்த்து கட்டுவார். இது, இழப்பாக அமையும்.

.


* விழிப்புடன் இருக்கவே...

மீண்டும் சொல்கிறேன்.... Marginal Relief பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இந்த நிதியாண்டில் எனக்கு தெரிந்த ஒருவர் Rs.58000 வருமான வரி கணக்கிட வேண்டிய நிலையில் Rs.71,000 என கணக்கிட்டிருந்தார்.


Conveyance Allowance பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் மற்றொருவர் சென்ற நிதியாண்டில் Rs.75,000 வருமான வரி கட்ட வேண்டிய நிலையில் ரூ.80,000 வருமானவரி கட்டி இருக்கிறார்.


விழிப்புடன் இருங்கள்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வருமான வரி செலுத்துவோர் அறிய வேண்டிய விழிப்புணர்வு தகவல்கள்

    வருமான வரி செலுத்துவோர் அறிய வேண்டிய விழிப்புணர்வு தகவல்கள் 2025-26 நிதியாண்டு Income Tax கணக்கிடும்போது Marginal Relief மற்றும் Conveya...