கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மின்சார வாரியம் EB தொடர்பான சேவைகளைப் பெறவும், புகார்களைத் தெரிவிக்கவும் வலைதளம் அறிமுகம்...


மின்சார வாரியம் EB தொடர்பான புகார்களை வீட்டில் இருந்தே தெரிவிக்க மின்சார வாரியம் வலைதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது...


தமிழ்நாடு முழுவதும் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மின்சாரம் வழங்கி வருகிறது.


 அதுமட்டுமன்றி மின்தடை, மீட்டர் பழுது, கூடுதல் கட்டணம் வசூல் உள்ளிட்ட புகார்களையும் கண்காணித்து வருகிறது.


இதுவரை நேரில் சென்றோ அல்லது தொலைபேசி மூலமாகவோ புகார் அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


இதன் மூலமாக மின்சார வாரியம் சார்ந்த அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று கூறப்பட்டுள்ளது.


குறிப்பாக மின்சார கட்டணம், புதிய மின்சார இணைப்பு, ஏற்கனவே இருக்கும் மின் இணைப்பின் பெயரை மாற்றுவது, தற்காலிக மின் இணைப்பு, விவசாய மின் இணைப்பு என அனைத்து வகையான சேவைகளையும் பொதுமக்கள் இந்த வலைதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.


புதிய மின் இணைப்பு கோரி விண்ணப்பிப்பது, அதற்கான தொகையை செலுத்துவது மட்டுமன்றி நமது விண்ணப்பத்தின் நிலை என்ன என்பதையும் இந்த மூலம் அறிந்துக்கொள்ளலாம்,  எனவே மின்சார வாரியம் குறித்த தகவல்கள் அல்லது புகார் அளிக்க https://nsc.tnebltd.gov.in/nsconline/index.xhtml   லிங்கை கிளிக் செய்து  வலைத்தளத்தை பயன்படுத்தலாம். 



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

27-01-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் குறள் எண்:956 அதிகாரம...