கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - வினாக்களும் விடைகளும் - CPS ஒழிப்பு இயக்கம்...


 பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - வினாக்களும் விடைகளும் - CPS ஒழிப்பு இயக்கம்...


🙏🙏🙏🙏🙏🙏

*CPS ஒழிப்பு இயக்கம்*

*மாநில மையம்*


*CPS யை  இரத்து செய்யக் கோரி 26.02.2024 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி:*


*சிபிஎஸ் இரத்து செய்ய முடியுமா ?*


*பதில் :*


*முடியும்..!*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி:*


*இந்தியாவில் சிபிஎஸ் திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள் உண்டா ?*


*பதில் :*


*உண்டு..!*


*மேற்கு வங்காளத்தில் இன்றுவரை CPS திட்டம் அமல்படுத்தப்பட வில்லை..!*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி:*


*Contributory Pension Scheme திட்டத்தை அமுல்படுத்தாமல் இருக்க மாநிலங்களுக்கு சட்டபூர்வமான உரிமை உண்டா ?*


*பதில் :* 


*சட்டபூர்வ உரிமை உண்டு..!*


*மத்திய அரசு அமல்படுத்திய சிபிஎஸ் சட்டத்தில்.....*


*புதிய ஓய்வூதியத் திட்டத்தை.... அமல்படுத்துவதும் அமல்படுத்தாமல் இருப்பதும் ஒரு மாநிலத்தின் உரிமை என குறிப்பிடப்பட்டுள்ளது.*


*மாநில உரிமை என்ற அடிப்படையில் மேற்கு வங்க மாநில அரசு சிபிஎஸ் திட்டத்தை அம்மாநில அரசு ஊழியருக்கு அமல்படுத்தவில்லை..!*


*ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், சிக்கிம், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி :*


*தமிழ்நாட்டில் அமல்படுத்தியுள்ள CPS திட்டத்திற்கும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள CPS திட்டத்திற்கும் வித்தியாசம் உண்டா ?*


*பதில் :*


*வித்தியாசம் உண்டு.* 


*மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிபிஎஸ் திட்டத்தில் ஒவ்வொரு மாநில அரசும், மத்திய அரசு அமைத்துள்ள ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்துடன்  (PFRDA ) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று சிபிஎஸ் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.* 


*தமிழ்நாடு அரசு 2003 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பென்சன் ஒழுங்குமுறை ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.*


*சிபிஎஸ் திட்டத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு பணிக் கொடை வழங்கப்படுகிறது.*


*மத்திய அரசு ஊழியர்கள் சிபிஎஸ் தொகையில் கடன் வாங்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.*


*தமிழ்நாடு அரசு பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை.*


*CPS.. ஐ அமல்படுத்திய மாநிலங்களில்...*


*PFRDA வுடன் கையெழுத்து இடாத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான்.*


 *தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றால் பணிக்கொடை கிடையாது*


*செலுத்திய தொகையில் முன்பணம் கோர முடியாது என்ற நிலைமை உள்ளது.*


*தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால்  சிபிஎஸ் இரத்து செய்வதற்கு மத்திய அரசு மற்றும் PFRDA விடம் அனுமதி பெற வேண்டிய அவசியமும் இல்லை.*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி:*


*முன் தேதியிட்டு PFRDAவுடன் தமிழ்நாடு அரசு கையெழுத்து இட முடியுமா?*


*பதில் :* 


*வாய்ப்பே இல்லை.*


*முன்தேதியிட்டு கையெழுத்திட விரும்பினால்...*


*1.4.2003 முதல் ஊழியர்கள் செலுத்திய பங்கீடு  10 % அரசு செலுத்த வேண்டிய 10%  என்று 20%*


*அதாவது Rs.42 ஆயிரம் கோடி தொகையை., தமிழ்நாடு அரசு PFRDA வில் செலுத்த வேண்டும்.*


*Rs 70,000 கோடியை PFRDA வில் செலுத்த இன்றும் சரி.. எதிர்காலத்திலும் சரி.. தமிழ்நாடு அரசுக்கு வாய்ப்பில்லை.*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி :*


*ஒரு வேளை தமிழக அரசு, அவ்வளவு தொகையை செலுத்த விரும்பினால்...*


*PFRDA... அந்தத் தொகையை...ஏற்றுக் கொள்ளுமா..?*


*பதில் :*


*PFRDA.. தமிழ்நாடு அரசு எவ்வளவு செலுத்தினாலும், அந்தத் தொகையை ஏற்றுக் கொள்ளும்.*


*ஆனால்.. தமிழ்நாடு அரசு எந்தத் தேதியில் தொகையினை செலுத்துகிறதோ..*


*அந்தத் தேதியிலிருந்து தான்.. CPS.. ஐ அமுல்படுத்த முடியும்.*


*ஏனெனில், PFRDA அத்தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்து..*


*அதில் கிடைக்கும் லாபத்தின் அடிப்படையில் தான் ஓய்வூதியம் வழங்கும்.*


*முன் தேதியிட்டு தொகை செலுத்தப்பட்டாலும்..*


*முன்தேதியிட்டு முதலீடு செய்ய வாய்ப்பில்லை அல்லவா..?*


*எனவே, முன் தேதியிட்டு ஓய்வூதியம் வழங்க வாய்ப்பே இல்லை.*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி:*


*PFRDA வுடன் கையெழுத்து போட இயலாத சூழ்நிலையில் தமிழ்நாடு அரசுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன ?*


*பதில் :*


*1). இதே நிலையில் தொடர்வது.*


*2). CPS திட்டத்தை இரத்து செய்வது.*


*இந்த இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளது.*


*இதே நிலையில் தொடர்வதற்கு சட்ட ரீதியான உரிமை.. அதிகாரம் அரசுக்கு இல்லை.*


*தமிழ்நாடு அரசு அமுல்படுத்தி வரும் இத்திட்டமானது... "அரசியலமைப்புச் சட்டத்திற்கு " எதிரானதாகும்.*


*எனவே, CPS திட்டத்தை ரத்து செய்து விட்டு, இதுவரை அரசு ஊழியர்களிடமிருந்து இதற்கென பிடித்தம் செய்த பங்குத் தொகையினை GPF.. ல் போடுவதைத் தவிர தமிழ்நாடு அரசுக்கு வேறு வழியில்லை என்பதே யதார்த்தமான நிலை.*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி :*


*CPS.. ஐ ஆட்சியாளர்கள் தானாக இரத்து செய்வார்களா ?*


*பதில் :*


*தானாக இரத்து செய்ய மாட்டார்கள்.*


*இரத்து செய்வதற்கான நிர்பந்தத்தை நாம் தான் உருவாக்க வேண்டும்.*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி :*


*நிர்பந்தம் கொடுத்தால் CPS இரத்து செய்ய முடியுமா?*


*பதில் :*


*நிச்சயம் முடியும்..!*


*CPS.ஐ தமிழகத்தில் 2003ல் அமுல்படுத்திய பின்பு 2006 மற்றும் 2011  ல் இரண்டு சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்றது.


*2006 மற்றும் 2011 சட்டமன்ற தேர்தல்களில் CPS.ஐ இரத்து செய்வோம் என திமுக மற்றும் அதிமுக  வாக்குறுதி அளிக்கவில்லை.*


*2016 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற 10 நாள் வேலை நிறுத்தத்தின் விளைவால்...*


*2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியாக...*


*CPS.. ஐ இரத்து செய்வோம் என்று திமுக மற்றும் அதிமுக வாக்குறுதி அளித்தன.*


*2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நாம் போராடியதால்..*


*CPSஐ இரத்து செய்திட வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.*


*"ஒன்றுபட்ட தொடர் போராட்டம் செய்தால் CPS.. ஐ நிச்சயம் இரத்து செய்ய முடியும்..!*


*CPS இரத்து செய்திட பங்கேற்பீர்.....*


*26.02.2024 மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்..*


🙏🙏🙏🙏🙏🙏


*CPS ஒழிப்பு இயக்கம்*


🙏🙏🙏🙏🙏🙏


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

State bearers Interview about the decisions taken at the JACTTO GEO High Level Committee meeting

ஜாக்டோஜியோ உயர் மட்டக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பொறுப்பாளர்கள் பேட்டி State bearers Interview about the decisions taken at t...