கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாவட்டக் கல்வி அலுவலர்கள் மேல்முறையீடு - தேர்வு பட்டியல் முடிவு வெளியிட உயர்நீதிமன்றம் தடை...

 


மாவட்டக் கல்வி அலுவலர்கள் மேல்முறையீடு - தேர்வு பட்டியல் முடிவு வெளியிட உயர்நீதிமன்றம் தடை...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



18 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடம்: தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு...


சென்னை: 18 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கான திருத்திய தேர்வு பட்டியலை தயாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இறுதி முடிவுகளை வெளியிடக் கூடாது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற பிற விண்ணப்பதாரர்களின் நியமன வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேர்வு பட்டியலை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து பணியில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரிகள் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஆணையிட்டு, வழக்கின் விசாரணையை ஐகோர்ட் ஜூன் 10-க்கு ஒத்திவைத்தது...


முழுமையான விவரம் : 

 மாவட்ட கல்வி அதிகாரிகள் 18 பேரின் தேர்வு பட்டியலை ரத்து செய்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் தேர்வு பட்டியலை தயாரிக்க அனுமதித்த உயர்நீதிமன்றம், இறுதி முடிவை வெளியிட தடை விதித்துள்ளது.


மாவட்ட கல்வி அதிகாரி பதவிக்கான 18 காலியிடங்களை நிரப்ப, விண்ணப்பங்களை வரவேற்று, 2018 டிசம்பரில், அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது.


தேர்வுகள் நடந்து முடிந்து, 2020 டிசம்பரில் வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது; நியமனங்களும் நடந்து முடிந்தன. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், நிர்மல்குமார் என்பவர் உள்ளிட்டோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.


மனுக்களை விசாரித்த நீதிபதி மஞ்சுளா பிறப்பித்த உத்தரவு:


இடஒதுக்கீட்டு முறையையும், பிரிவு வாரியான ஒதுக்கீட்டையும் பின்பற்றாமல், ஒழுங்கற்ற முறையில் தேர்வு நடந்துள்ளது. எனவே, மாவட்ட கல்வி அதிகாரிகள் நியமனம் ரத்து செய்யப்படுகிறது.


காலியிடங்களின் அடிப்படையில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி, பொதுப் பிரிவினருக்கு எனவும், ஆசிரியர் பிரிவினருக்கு எனவும் தனித்தனியே தேர்வு பட்டியலை வெளியிடும் வகையில், மீண்டும் தேர்வு பட்டியலை தயாரிக்க உத்தரவிடப்படுகிறது.


நான்கு வாரங்களில் இந்தப் பணிகளை முடித்து, திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை வெளியிட வேண்டும்.


இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.


இந்த உத்தரவை எதிர்த்து, தற்போது பணியில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரிகள் தரப்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது.


இம்மனு, நீதிபதிகள் சுவாமிநாதன், பாலாஜி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜூன் 10க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


திருத்திய தேர்வு பட்டியலை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள, தேர்வாணையத்துக்கு அனுமதி அளித்த நீதிபதிகள், இறுதி முடிவுகளை வெளியிட தடை விதித்தும், வழக்கு விசாரணை முடியும் வரை தற்போது பணியில் உள்ள அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

08-01-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்:மருந்து குறள...