கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.08.2024 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.08.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்: 445

சூல்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

பொருள்: தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரை ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும்.


பழமொழி :
அரைக் காசுக்கு போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வாராது

One cloud is enough to hide all the sun


இரண்டொழுக்க பண்புகள் :

*ஆபத்தில் இருப்பவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.

*துன்பப்படுபவர்களைக் கண்டால் அவர்களுக்கு ஆறுதல் கூறுவேன்.


பொன்மொழி :

"உன் வேதனை பலரைச் சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு யாரையும் வேதனைப்பட வைக்கக்கூடாது.---சார்லி சாப்ளின்


பொது அறிவு :

1.  ஓர் உடலின் வேதிச் செயல்களை செய்வது எது ?

என்சைம் .

2. அகில வானொலி ஒலி பரப்பு முதன் முதலில் தொடங்கப்பட்ட இடம் எது.?

விடை : கொல்கத்தா மற்றும் மும்பை


English words & meanings :

trivial-அற்புதமான,

short- குறுகிய


வேளாண்மையும் வாழ்வும் :

இந்த மாதத்தில், சூரியனின் ஒளிக்கதிர்கள் சரியான அளவிலான அதிர்வலை கொண்ட சக்தியோடு வெளிப்பட்டு, பூமியை வந்தடையும். அதோடு பிராணவாயுவும், ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் ஆடி மாதம் விளங்குகிறது.


நீதிக்கதை

காக்கை நண்பன்

ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி  தன்னுடைய நிலத்தில் நெல் விவசாயம் செய்து வந்தார்.

அவரது நிலத்திற்கு பக்கத்தில் இருந்த பெரிய மரத்தில் அதிக காகங்கள் வாழ்ந்து வந்தன.

எப்போதும் தன் வீட்டை சுற்றியே வரும்  காகங்களை அவருக்கு மிகவும் பிடிக்கும்.காகங்களுக்கு தன் வீட்டில் இருக்கும் உணவையும் தானியங்களையும் கொடுத்து மகிழ்வார்.

ஒரு நாள் அவருடைய விவசாய நிலத்திற்கு அதிகமான வெட்டுக் கிளிகள் வந்தன. வந்த வெட்டுக்கிளிகள் அவருடைய தானியத்தை மட்டும் இல்லாமல் பயிர்களையே வீணாக்கின. அதைப் பார்த்த விவசாயி மிகவும் வருத்தப்பட்டார்.

விவசாயி மிகவும் கஷ்டப்பட்டு  வெட்டுக் கிளிகளை விரட்ட முயற்சி செய்தார். ஆனால் வெட்டுக்கிளிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்ததால் அவரால் அனைத்தையும் விரட்ட முடியவில்லை.

தன்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்ற வருத்தத்துடன் நெல் பயிர்களை பார்த்துக் கொண்டே   அமர்ந்திருந்தார்.

விவசாயியை வருத்தத்துடன்  பார்த்த காகங்கள் உடனடியாக அவருக்கு உதவ வயலில் சென்று வெட்டுக் கிளிகளைப் பிடித்து சாப்பிட ஆரம்பித்தன.

தனது பயிர்களை வெட்டுக்கிளிகளிடமிருந்து காப்பாற்றிய காக நண்பர்களை பார்த்து விவசாயி மகிழ்ச்சி அடைந்தார்.


இன்றைய செய்திகள்

06.08.2024

🍂சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களின் நெரிசலுக்கு தீர்வு காண சாலை, பாலம் திட்டங்கள்: அமைச்சர்கள் ஆய்வு.

🍂அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 4,970 தற்காலிக ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு 2028-ம் ஆண்டு வரை தொடர் பணி நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

🍂திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மழை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 577 கன அடி நீர்வரத்து.

🍂இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள் வோரில் 10 சதவீதம் பேர் வெளிநாட்டினர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

🍂வெப்ப அலைகளால் ஆந்திராவில் அதிக உயிரிழப்பு, தமிழகத்தில் குறைவு: மக்களவையில் தகவல்.

🍂நியூராலிங்க் நிறுவனம் தனது மூளை சிப்பினை வெற்றிகரமாக இரண்டாவது நபருக்கு பொருத்தி உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

🍂வங்கதேச பயணத்தை தவிர்க்க இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை: உதவி எண்கள் அறிவிப்பு.

🍂பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: தங்கப்பதக்கத்தை தட்டி சென்றார் ஜோகோவிச்.

🍂ஐ.சி.சி. ஜூலை மாத சிறந்த வீரர் விருது; பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார்


Today's Headlines

🍂Road, Bridge Projects to Solve Congestion in Tamil Nadu Cities Including Chennai: Ministerial Review.

🍂The Department of School Education has ordered to extend the work of 4,970 temporary teachers and staff working in government schools till 2028.

🍂Rain in Tiruvallur, Kanchipuram: 577 cubic feet per second inflow to Chembarambakkam lake.

🍂A study has revealed that 10 percent of transplant recipients in India are foreigners.

🍂Death toll high in Andhra due to heat wave, less in Tamil Nadu: Information in Lok Sabha.

🍂Elon Musk has announced that Neuralink has successfully implanted its brain chip into a second person.

🍂External Affairs Ministry warns Indians to avoid travel to Bangladesh: helpline alert.

🍂Paris Olympics Tennis: Djokovic wins gold.

🍂ICC  July Player of the Month Award;  Indian all-rounder Washington Sundar is on the shortlist.

Prepared by

Covai women ICT_போதிமரம்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns