கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுக - தமிழ்நாடு முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம்...



தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுக - தமிழ்நாடு முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம்...


அரசாணை 243ஐ ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம்...


தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றி வரும் சில லட்சம் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை தங்களது கவனத்திற்கு கொண்டு வருவதுடன் இவற்றின் மீது தீர்வு காண வேண்டுமென வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


தொடக்கக் கல்வி துறையில் உள்ள 12 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து டிட்டோ - ஜாக் என்ற அமைப்பினை உருவாக்கி கடந்த ஓராண்டுக்கும் மேலாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்வி அமைச்சர் மற்றும் கல்வித்துறை செயலாளர் அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடைசியாக 12.10.2023ஆம் தேதி உடன்பாடு கண்ட கோரிக்கைகளை அமல்படுத்திட இதுகாறும் உத்தரவு வெளியிடாத நிலையில், ஆசிரியப் பெருமக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருவதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.


*மேலும், பல பத்தாண்டுகளாக நடைமுறையில் இருந்த ஒன்றிய அளவிலான முன்னுரிமையினை மாநில அளவிலான முன்னுரிமையாக மாற்றி பதவி உயர்வு பெறும் தகுதியினையும், முன்னர் இருந்த  முன்னுரிமையை மாற்றி அரசாணை எண் 243 / 21.12.2023 வெளியிடப்பட்டதானது ஒட்டுமொத்த பள்ளிக்கல்வி ஆசிரியர்களின், குறிப்பாக பெண் ஆசிரியர்களின் மனநிலையை பாதித்து, கொதிப்படைய செய்துள்ளதை சமீப காலமாக ஆசிரியர் பெருமக்கள் நடத்தி வரும் போராட்ட இயக்கத்தின் மூலம் அறிய முடிகிறது.


நீண்டகாலமாக தீர்க்கப்படாத தங்களது கோரிக்கையினை வலியுறுத்தி ஆசிரியர்கள் அமைதியான வழியில் போராட்டங்கள் நடத்த முனையும் போது சென்னையில் காவல்துறை அவர்களிடம் மோசமாக நடந்து கொள்வதும், கைது செய்வதும்,  குறிப்பாக பெண் ஆசிரியர்களை ஆண் காவலர்கள் பிடித்து தள்ளி கைது செய்வது போன்ற நடைமுறைகளால் ஆசிரியர்கள் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகும் நிலையுள்ளதை தாங்கள் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.


எனவே, 1) தமிழக அரசு மேற்படி அரசாணை எண் 243 / 21.12.2023-ஐ உடனடியாக திரும்பப் பெற்று, ஏற்கனவே பேச்சு வார்த்தையின்போது ஒப்புக் கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் மீதான அரசாணை வெளியிடவும், 

2) தவிர்க்க முடியாத நிகழ்வுகளில் ஆசிரியர்கள் போராட்டங்கள் நடத்த முன்வரும்போது அவர்களை காவல்துறை உரிய மரியாதையுடன் நடத்திட வேண்டுமென காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns