கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சமக்ரா சிக்ஷா அபியான் - தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது ஏன்?


சமக்ரா சிக்ஷா அபியான் - தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது ஏன்?


‘தேசியக் கல்விக் கொள்கை தமிழ் சமுதாயத்தையும், தமிழ் கல்வியையும் குழிதோண்டிப் புதைத்துவிடும்’ என்கிறார் தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு.


‘சமக்ரா சிக்ஷா அபியான்' என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு தராதது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.


மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கு சமக்ரா சிக்ஷயா அபியான் திட்டத்தின் கீழ் நிதி வழங்க மத்திய அரசு மறுக்கிறது என்று சொல்லப்படும் காரணம்தான் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.


மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதற்கான காரணங்களை முதல்வர் ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் தெரிவித்திருக்கிறார்கள்.


தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை விளக்கி 2022-ம் ஆண்டு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘அனைவருக்கும் கல்வி என்ற தமிழகத்தின் நிலைப்பாட்டை தேசிய கல்விக்கொள்கை சீர்குலைக்கும் வகையில் இருப்பதால், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அதை தொடர்ந்து எதிர்த்துவருகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.


கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப் படிப்பு படிப்பதற்கு நுழைவுத்தேர்வு கட்டாயம் என்பதை தி.மு.க எதிர்க்கிறது. தேசியக் கல்விக் கொள்கையின்படி, மூன்று ஆண்டு பட்டப்படிப்பை முதலாம் ஆண்டுடன் நிறுத்தினால் சான்றிதழ், இரண்டாம் ஆண்டுடன் நிறுத்தினால் பட்டயம், மூன்று ஆண்டுகள் முடித்தால் பட்டம் என்ற முறை தேசியக் கல்விக்கொள்கையில் இடம்பெற்றிருக்கிறது. இத்தகைய முறையால் மாணவர்கள் பாதியிலேயே படிப்பை விடுவதற்கு வழிவகுக்கும் என்பதால், தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது.


நீட் தேர்வை தமிழக அரசு கடுமையாக எதிர்த்துவருகிறது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசு தொடர்ந்து போராடிவருகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் தேசியக் கல்வி முறை, நீட் தேர்வு முறையைவிடக் கொடுமையானது. நூறு ஆண்டுகாலமாக உழைத்து உருவாக்கிய கல்வி அமைப்பையே இது சீர்குலைத்துவிடும்’ என்பது தமிழக அரசின் நிலைப்பாடாக இருக்கிறது.


இந்த நிலையில், மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கு சமக்ரா சிக்ஷயா அபியான் திட்டத்தின் கீழ் நிதி வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது’ என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்திருக்கிறது. 'சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய முதல் தவணையான ரூ.573 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்’ என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.


இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாகி இருக்கும் தற்போதைய சூழலில், பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, தேசியக் கல்விக் கொள்கையை விமர்சித்துப் பேசியிருக்கிறார். ‘இந்தியாவில் கல்வியில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடுதான். சமக்ரா சிக்ஷா அபியான் திட்ட நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது.


தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட்டால் தான் நிதி வழங்குவோம் என்று மத்திய அரசு சொல்வது நியாயமா? 5-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடையவில்லை என்றால், உன் தந்தை செய்யும் தொழிலுக்கு நீ சென்றுவிடு என்று சொல்லும் குலக்கல்வித் திட்டத்தைத்தான் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கிறார்’ என்று சபாநாயகர் அப்பாவு பேசினார்.


மேலும், ‘தேசியக் கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்படுகிறது. தன்னாட்சிக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருக்கும் இதுபோன்ற அம்சங்களையும் தமிழக அரசு எதிர்க்கிறது. எனவேதான், தேசியக் கல்விக் கொள்கை வேண்டாம் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது’ என்கிறார்கள்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹ 1.1 lakh compensation for insect bite while traveling in bus - Court orders

 பேருந்தில் பயணித்தபோது பூச்சி கடித்ததால் ₹ 1.1 லட்சம் இழப்பீடு - நீதிமன்றம் உத்தரவு ₹ 1.1 lakh compensation for insect bite while traveling...