கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிய கல்விக் கொள்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதிய கல்விக் கொள்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2 admissions per year henceforth in higher education – UGC

 

 உயர்கல்வியில் இனி 2 முறை மாணவர் சேர்க்கை.


உயர்கல்வியில் இனிமேல் ஆண்டுதோறும் 2 முறை மாணவர் சேர்க்கை.


ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.


புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் புதிய நடைமுறைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது பல்கலைக்கழக மானியக் குழு.


உயர் கல்வியில் இனி 2 முறை மாணவர் சேர்க்கை - UGC வெளியிட்ட அறிக்கை

இனி உயர் கல்வியில் இரு முறை மாணவர் சேர்க்கை, எப்போது வேண்டுமானாலும் துறை மாறலாம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.


நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கையில் இனி பின்பற்றப்படும் நடைமுறைக்கான வரைவு அறிக்கையை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் இந்த முறையை பின்பற்றப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய விதிமுறைப்படி இனி ஆண்டிற்கு இரு முறை மாணவர் சேர்க்கை இளநிலை மற்றும் முதுகலை வகுப்புகளில் மேற்கொள்ளப்படும். அதன்படி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களிலும் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படும் என வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பன்னிரெண்டாம் வகுப்பில் எந்தப் பிரிவை தேர்ந்தெடுத்துப் படித்தாலும் மாணவர்கள் விரும்பும் இளநிலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேரலாம். அதற்கேற்ற வகையில் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு மற்றும் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய குறிப்பிட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.


பட்டப்படிப்பில் பயில்கின்ற போது எந்த ஆண்டில் வேண்டுமானாலும் சேரலாம் என்றும் அதேபோல் எந்த ஆண்டில் வேண்டுமானாலும் அதிலிருந்து வெளியேறி வேறு படிப்பில் சேர்வதற்கான “multiple entry and exit” முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இளநிலை படிப்புகளை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் முடிக்கக்கூடிய வகையிலும் முதுகலை படிப்புகளை இரண்டு அல்லது ஓராண்டில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


அதேபோல் இளநிலை, முதுகலை படிப்புகளை ஓராண்டுக்கு முன்னதாகவே முடிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், படித்த ஆண்டுகளுக்கு ஏற்ப சான்றிதழ் படிப்பாகவோ, பட்டயமாகவோ, பட்டமாகவோ கருத்தி சான்றிதழ்கள் வழங்கப்படும். யுஜிசியின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றத் தவறும் கல்வி நிறுவனங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அதேபோல், பொதுமக்களின் கருத்துக்களுக்காக தனது இணையதளத்தில் வரைவு விதிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.




புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்...



புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்...


New Education Policy - Important Aspects 


மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகளைத் தவிர அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் ஒரே கட்டுப்பாட்டாளரால் நிர்வகிக்கப்படும்.

எம்ஃபில் படிப்புகள் இப்போது நிறுத்தப்படும்.

வாரியத் தேர்வுகள் இப்போது அதிக பயன்பாடு மற்றும் அறிவு சார்ந்ததாக இருக்கும்.

அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் இரண்டும் ஒரே விதிமுறைகளின் கீழ் நிர்வகிக்கப்படும்.

பிராந்திய மொழி/தாய்மொழியை ஊக்குவிக்கவும், அதிக முக்கியத்துவம் கொடுக்கவும், 5 ஆம் வகுப்பு வரையிலான பயிற்றுமொழி உள்ளூர்/வீட்டு மொழிகளில் இருக்கும்.

உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான அனைத்து நுழைவுத் தேர்வுகளும் பொதுவாக நடைபெறும்.

முக்கிய கருத்துகளில் அதிக கவனம் செலுத்த பள்ளி பாடத்திட்டம்.

6ம் வகுப்பு முதல் தொழிற்கல்வியும் கற்பிக்கப்படும்.

3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயதுடையவர்களுக்கு உட்பட்டு, 10+2 படிப்பு கலாச்சாரம் நிறுத்தப்பட்டு, 5+3+3+4 என்ற புதிய அமைப்பு பின்பற்றப்படும்.



 தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்...


National Education Policy 


_34 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கல்விக் கொள்கை வகுக்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:_


_5 வருட அடிப்படைக் கல்வி._


_*1. நர்சரி: 4 வயது.*_


_*2. ஜூனியர் கேஜி: @ 5 வயதில்.*_


_*3. மூத்த கேஜி:  @ 6 வயதில்.*_


_*4. முதல் வகுப்பு: @ 7 வயதில்.*_


_*5. 2 ஆம் வகுப்பு: @ 8 வயதில்.*_

_(3 வருட தயாரிப்பு)_


_*6. 3வது வகுப்பு: @ 9 வயதில்.*_


_*7. 4 ஆம் வகுப்பு: @ 10 வயதில்.*_


_*8. 5 ஆம் வகுப்பு: @ 11 வயதில்.*_

_(3 ஆண்டுகள் நடுத்தர.)_


_*9. 6 ஆம் வகுப்பு: @ 12 வயதில்.*_


_*10. 7 ஆம் வகுப்பு: @ 13 வயதில்.*_


_*11. 8 ஆம் வகுப்பு @ 14 வயதில்.*_

_(4 ஆண்டுகள் இரண்டாம் நிலை)_


_*12. வகுப்பு IX: @ 15 வயதில்.*_


_*13. எஸ்எஸ்எல்சி: @ 16 வயதில்.*_


_*14. வகுப்பு F.Y.J.C: @ 17 வயதில்.*_


_*15. வகுப்பு S.Y.J.C: @ 18 வயதில்.*_


_முக்கிய புள்ளிகள்:_


_*பன்னிரண்டாம் வகுப்பில் மட்டுமே வாரியத் தேர்வு இருக்கும்.*_


_*கல்லூரி பட்டப்படிப்பு 4 ஆண்டுகள்.*_


_*பத்தாம் வகுப்பில் போர்டு எக்ஸாம் கிடையாது.*_


_*எம்ஃபில் ஒழிக்கப்படும்.*_

_(JNU போன்ற கல்வி நிறுவனங்களில் 45 முதல் 50 வயது வரை உள்ள மாணவர்கள் எம்ஃபில் என்ற பெயரில் ஆண்டுக்கணக்கில் தங்கி கல்வி முறையையே நலிவடையச் செய்யும் அவலத்தை இது நீக்கும்.)_


_*இனிமேல் ஐந்து வரையிலான மாணவர்களுக்கு தாய்மொழி, பிராந்திய மொழி மற்றும் தேசிய மொழியில் மட்டுமே கற்பிக்கப்படும்*._


_மீதமுள்ள பாடங்கள் ஆங்கிலமாக இருந்தாலும் ஒரு பாடமாகவே கற்பிக்கப்படும்._


_*இனி பன்னிரண்டாம் வகுப்பில் போர்டு எக்ஸாம் எழுதினால் போதும். முன்பெல்லாம் 10ம் வகுப்பில் போர்டு எக்ஸாம் எழுதுவது கட்டாயம், இனி இல்லை.*_


_தேர்வு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான செமஸ்டர் முறையில் நடைபெறும்.


பள்ளிக் கல்வி _*5 + 3 + 3 + 4 என்ற சூத்திரத்தின்படி நடத்தப்படும்.*_ _(*


 _*கல்லூரி பட்டப்படிப்பு 3 அல்லது 4 ஆண்டுகள் இருக்கும்...அதாவது பட்டப்படிப்பில் 1ஆம் ஆண்டு சான்றிதழ், 2ஆம் ஆண்டில் டிப்ளமோ மற்றும் 3ஆம் ஆண்டில் பட்டம்.*_


உயர்கல்வியை நாடாத மாணவர்களுக்கு _3 ஆண்டு பட்டம். இதற்கிடையில், உயர் கல்வியைத் தொடரும் மாணவர்கள் 4 வருட பட்டப்படிப்பை முடிக்க வேண்டும். 4 வருட பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் ஒரு வருடத்தில் முதுகலைப் பட்டம் பெறலாம்._


_*இனிமேல் மாணவர்கள் M.Phil செய்யத் தேவையில்லை. மாறாக மாணவர்கள் இப்போது நேரடியாக Ph.D.*_


_இதற்கிடையில் மாணவர்கள் மற்ற படிப்புகளை செய்யலாம். 2035ஆம் ஆண்டுக்குள் உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 50 சதவீதமாக இருக்கும். இதற்கிடையில், புதிய கல்விக் கொள்கையின்படி, ஒரு மாணவர் ஒரு பாடத்தின் நடுவில் மற்றொரு பாடத்தை செய்ய விரும்பினால், அவர் முதல் படிப்பில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்கு ஓய்வு எடுத்துவிட்டு இரண்டாவது பாடத்தை எடுக்கலாம்._


_*உயர்கல்வியிலும் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மேம்பாடுகளில் தரப்படுத்தப்பட்ட கல்வி, நிர்வாக மற்றும் நிதி சுயாட்சி ஆகியவை அடங்கும். இது தவிர, உள்ளூர் மொழிகளில் இ- படிப்புகள் தொடங்கப்படும். மெய்நிகர் ஆய்வகங்கள் உருவாக்கப்படும். தேசிய கல்வி அறிவியல் மன்றம் (NETF) தொடங்கப்படும். நாட்டில் நாற்பத்தைந்தாயிரம் கல்லூரிகள் உள்ளன.*_


_அனைத்து அரசு, தனியார் மற்றும் SIMD நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான விதிகள் இருக்கும்._

_இந்த விதியின்படி, புதிய கல்வி அமர்வை தொடங்கலாம்..._


_*அனைத்து மாணவர்களும் பெற்றோர்களும் இந்த செய்தியை கவனமாக படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*_

சமக்ரா சிக்ஷா அபியான் - தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது ஏன்?


சமக்ரா சிக்ஷா அபியான் - தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது ஏன்?


‘தேசியக் கல்விக் கொள்கை தமிழ் சமுதாயத்தையும், தமிழ் கல்வியையும் குழிதோண்டிப் புதைத்துவிடும்’ என்கிறார் தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு.


‘சமக்ரா சிக்ஷா அபியான்' என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு தராதது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.


மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கு சமக்ரா சிக்ஷயா அபியான் திட்டத்தின் கீழ் நிதி வழங்க மத்திய அரசு மறுக்கிறது என்று சொல்லப்படும் காரணம்தான் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.


மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதற்கான காரணங்களை முதல்வர் ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் தெரிவித்திருக்கிறார்கள்.


தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை விளக்கி 2022-ம் ஆண்டு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘அனைவருக்கும் கல்வி என்ற தமிழகத்தின் நிலைப்பாட்டை தேசிய கல்விக்கொள்கை சீர்குலைக்கும் வகையில் இருப்பதால், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அதை தொடர்ந்து எதிர்த்துவருகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.


கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப் படிப்பு படிப்பதற்கு நுழைவுத்தேர்வு கட்டாயம் என்பதை தி.மு.க எதிர்க்கிறது. தேசியக் கல்விக் கொள்கையின்படி, மூன்று ஆண்டு பட்டப்படிப்பை முதலாம் ஆண்டுடன் நிறுத்தினால் சான்றிதழ், இரண்டாம் ஆண்டுடன் நிறுத்தினால் பட்டயம், மூன்று ஆண்டுகள் முடித்தால் பட்டம் என்ற முறை தேசியக் கல்விக்கொள்கையில் இடம்பெற்றிருக்கிறது. இத்தகைய முறையால் மாணவர்கள் பாதியிலேயே படிப்பை விடுவதற்கு வழிவகுக்கும் என்பதால், தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது.


நீட் தேர்வை தமிழக அரசு கடுமையாக எதிர்த்துவருகிறது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசு தொடர்ந்து போராடிவருகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் தேசியக் கல்வி முறை, நீட் தேர்வு முறையைவிடக் கொடுமையானது. நூறு ஆண்டுகாலமாக உழைத்து உருவாக்கிய கல்வி அமைப்பையே இது சீர்குலைத்துவிடும்’ என்பது தமிழக அரசின் நிலைப்பாடாக இருக்கிறது.


இந்த நிலையில், மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கு சமக்ரா சிக்ஷயா அபியான் திட்டத்தின் கீழ் நிதி வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது’ என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்திருக்கிறது. 'சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய முதல் தவணையான ரூ.573 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்’ என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.


இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாகி இருக்கும் தற்போதைய சூழலில், பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, தேசியக் கல்விக் கொள்கையை விமர்சித்துப் பேசியிருக்கிறார். ‘இந்தியாவில் கல்வியில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடுதான். சமக்ரா சிக்ஷா அபியான் திட்ட நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது.


தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட்டால் தான் நிதி வழங்குவோம் என்று மத்திய அரசு சொல்வது நியாயமா? 5-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடையவில்லை என்றால், உன் தந்தை செய்யும் தொழிலுக்கு நீ சென்றுவிடு என்று சொல்லும் குலக்கல்வித் திட்டத்தைத்தான் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கிறார்’ என்று சபாநாயகர் அப்பாவு பேசினார்.


மேலும், ‘தேசியக் கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்படுகிறது. தன்னாட்சிக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருக்கும் இதுபோன்ற அம்சங்களையும் தமிழக அரசு எதிர்க்கிறது. எனவேதான், தேசியக் கல்விக் கொள்கை வேண்டாம் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது’ என்கிறார்கள்.



தமிழ்நாடு மாநில புதிய கல்விக் கொள்கை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 542, நாள்: 05-04-2022 (Tamil Nadu Chief Minister Mr. MK Stalin has ordered the formation of a 12 member panel headed by retired Justice Murugesan to formulate a New Education Policy for the State of Tamil Nadu - Government of Tamil Nadu Press Release No: 542, Date: 05-04-2022)...



>>> தமிழ்நாடு மாநில புதிய கல்விக் கொள்கை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 542, நாள்: 05-04-2022 (Tamil Nadu Chief Minister Mr. MK Stalin has ordered the formation of a 12 member panel headed by retired Justice Murugesan to formulate a New Education Policy for the State of Tamil Nadu - Government of Tamil Nadu Press Release No: 542, Date: 05-04-2022)...

தற்போதைய கல்வி முறையை மாற்றக்கூடாது. தேசிய கல்விக் கொள்கை நீட் தேர்வை விடக் கொடுமையானது - உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்கள் அறிக்கை (The current Education system should not be changed. National Education Policy is worse than NEET - Higher Education Minister Mr. K. Ponmudi's statement)...



>>> தற்போதைய கல்வி முறையை மாற்றக்கூடாது. தேசிய கல்விக் கொள்கை நீட் தேர்வை விடக் கொடுமையானது -  உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்கள் அறிக்கை (The current Education system should not be changed. National Education Policy is worse than NEET - Higher Education Minister Mr. K. Ponmudi's statement)...

புதிய கல்வி கொள்கையால் நாட்டின் தலைவிதி மாறும்: பிரதமர் மோடி நம்பிக்கை...

 


நமது நாட்டின் தலைவிதியை புதிய கல்விக் கொள்கை மாற்றி அமைக்கும்,’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான புதிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு கடந்தாண்டு கொண்டு வந்தது. இதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி மூலமாக கலந்துரையாடினார். 


பின்னர், உயர் கல்வியை சர்வதேச மயமாக்குவதற்கான, ‘கல்வி கடன் வங்கி’யை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: 

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு ஏராளமானோர்  கடுமையாக பணியாற்றி உள்ளனர். மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்றப்படிதான், புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது. இது மிகப்பெரிய தொலைநோக்கு திட்டம் மட்டுமின்றி, நாட்டையும் அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும்.


நமது இளைஞர்கள் மாற்றத்திற்காக முழு அளவில் தயாராக உள்ளனர். கல்வியை பொறுத்தே நமது எதிர்காலம் அமையும். நமது நாட்டின் தலைவிதியை மாற்றும் கொள்கையாக இது அமையும். நமது நாட்டின் விடுதலைக்கு முன்பாக,  சிறந்த கல்வியை பெறுவதற்காக வெளிநாடுகள்  சென்றோம். தற்போது, வெளிநாட்டினர் நமது நாட்டிற்கு வந்து படிக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.


தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவ சேர்க்கை- மத்திய அரசின் கூட்டத்தில் தமிழக அரசு உறுதி...

 


புதிய கல்விக் கொள்கை ஏற்கமுடியாது - தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை...

 புதிய கல்விக் கொள்கை ஏற்கமுடியாது - தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை...



புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுக்க நடவடிக்கை - அமைச்சர் பொன்முடி...

 புதிய கல்வி கொள்கை என்பது மாநில உரிமைகளில் தலையிடுவது ஆகவே புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி...




புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அமைச்சரின் ஆலோசனைக் கூட்டம்: தமிழகம் புறக்கணிப்பு...

 மத்திய அரசு 2020ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதில் உள்ள பல்வேறு அம்சங்களைத் தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்தன. தமிழகத்தில் கல்வியாளர்கள் கடுமையாக எதிர்த்தனர். திமுக அதன் தோழமைக் கட்சிகளுடன் கடுமையாக எதிர்த்து இயக்கங்களை நடத்தியது.



3,5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தினால் பள்ளியில் இடை நிற்றல் அதிகரிக்கும், மன்மோகன் சிங் கொண்டு வந்த 8ஆம் வகுப்பு வரை அனைவரும் பாஸ் என்பதிலிருந்து பின்வாங்குவதால் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கல்வி எட்டாக்கனியாகிவிடும் என எதிர்த்தனர். அதேபோன்று இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிப்பதையும் எதிர்த்தனர்.


தொழில்கள் பயில்வது குறித்த கல்விக் கொள்கையின் திட்டத்தையும் எதிர்த்தனர். கல்வி என்பது சாதாரண மக்களை மேம்படுத்தும் வண்ணம் இல்லாததும், ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் அம்சங்கள் இருப்பதாகவும் கூறி எதிர்த்தனர். மத்திய அரசு கூட்டிய கூட்டங்களில் கடந்த அதிமுக ஆட்சியில் துறைச் செயலர்கள் கலந்துகொண்டனர்.


திமுக அரசு அமைந்ததும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பேற்றார். புதிய கல்விக் கொள்கை, இணையவழிக் கல்வி, கரோனா தொற்றுப் பரவல் தொடர்பாக மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் அனைத்து மாநிலக் கல்விச் செயலாளர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.


இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்தியக் கல்வி அமைச்சருக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில், இக்கூட்டத்தை அமைச்சர்கள் நிலையில் நடத்த வேண்டும் என்று கேட்டிருந்தார். அமைச்சர்கள் நிலையில் கூட்டத்தை நடத்தும்போது புதிய கல்விக் கொள்கை தொடர்பான தனது கருத்துகளையும், பரிந்துரைகளையும் தெரிவிக்க தாம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.


ஆனால், தமிழக அரசின் இந்தக் கருத்துக்கு மத்திய அரசு பதிலேதும் அளிக்காமல் கூட்டத்தை திட்டமிட்டபடி இன்று நடத்தியது. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்தியக் கல்வித்துறை அமைச்சகம் மாநிலக் கல்வித்துறைச் செயலாளர்களுடன் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழக அரசு புறக்கணித்தது.


ஏற்கெனவே புதிய கல்விக் கொள்கையை எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டில் அமல்படுத்த முடியாது என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை மத்திய அரசு ஏற்காத நிலையில், தற்போது மத்திய அமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதிய கல்வி கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்...

 புதிய கல்வி கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தது தமிழக அரசு.


கல்வித்துறை அமைச்சரை விட்டுவிட்டு, செயலாளருடன் மட்டும் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டதால், கூட்டத்தை புறக்கணித்தது தமிழக அரசு.



புறக்கணிப்பு ஏன்? பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விளக்கம்


மாநில கல்வி அமைச்சர்கள் உடன் ஆலோசிக்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேற்று வலியுறுத்தி இருந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதால் தமிழக அரசு புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனையை புறக்கணிக்கிறது. கல்வி அமைச்சருடன் முதலில் ஆலோசனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை என்பதால் புறக்கணிப்பு. புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி செயல்படுவோம்.


- தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி





>>> புதிய கல்வி கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? - அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி விளக்கம் (காணொளி)...


புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி செயல்படுவோம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...

 



கல்வி அமைச்சருடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை எனவே இன்றைய ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துவிட்டது.



 புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி செயல்படுவோம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்

தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக மாநில அரசின் கருத்துக்களை எடுத்துரைக்க தயாராக உள்ளோம். அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதே ஏற்புடையதாக இருக்கும் - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி...

 புதிய கல்விக் கொள்கை அமலாக்கம் குறித்த மத்தியக் கல்வி அமைச்சருடனான ஆலோசனைக் கூட்டத்தில் கல்வித் துறைச் செயலருக்குப் பதிலாக மாநிலக் கல்வி அமைச்சர் விவாதிப்பதே ஏற்புடையதாக இருக்கும் என்று தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.




இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு வடிவமைத்த 'தேசிய கல்விக் கொள்கை- 2020'-க்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல்அளித்தது. கரோனா பரவல் சூழல் கருதி 2021-ம் ஆண்டுக்குள் கல்விக் கொள்கையை அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. அதன்படி நாடு முழுவதும் கல்விக்கொள்கையின் சாராம்சங்கள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.



இதற்கிடையே நாடு முழுவதும் கரோனா தீவிரம் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு இணையதள வழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.




இந்நிலையில் புதிய கல்விக்கொள்கையை அமல் செய்வது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் காணொலிக் காட்சி வழியாக நாளை (மே.17) நடைபெறவுள்ளது. 




இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலக் கல்வித் துறைச் செயலர்களும் பங்கேற்பார்கள் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.



இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் கல்வித் துறைச் செயலருக்குப் பதிலாக மாநிலக் கல்வி அமைச்சர் விவாதிப்பதே ஏற்புடையதாக இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:



''மத்திய கல்வி அமைச்சர் அனைத்து மாநிலங்களின் கல்வித் துறைச் செயலாளர்கள் கூட்டம் வாயிலாக கோவிட் நோய்த் தொற்றுக் காலத்தில் கல்வி அமைப்பு மேலாண்மை, பள்ளிகளில் இணைய வழிக் கல்வியைத் தொடர்வதற்கான வழிமுறைகள், புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்துதலின் நிலை போன்றவை குறித்து மே 17ஆம் தேதி உரையாட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.



 

இந்நிலையில் தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அமைச்சர், மத்தியக் கல்வி அமைச்சருக்கு நேற்று (மே.15) எழுதியுள்ள கடிதத்தில் 'இந்த கலந்துரையாடல் கூட்டத்தை, தமிழ்நாடு அரசின் கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நடத்துவதே ஏற்புடையதாக இருக்கும். 




அக்கூட்டத்தில் மாநில அரசின் சார்பாக மிக முக்கியமான பொருண்மைகளான புதிய தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்துதலின் நிலை போன்றவற்றின் மீதான கருத்துகளையும் பரிந்துரைகளையும் தெரிவிக்க நான் தயாராக உள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்''.



இவ்வாறு மாநிலக் கல்வித்துறை அமைச்சர் சார்பில் மத்தியக் கல்வி அமைச்சருக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.



 >>> செய்தி வெளியீடு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழையவே முடியாது: அமைச்சர் பொன்முடி உறுதி...

 புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழையவே முடியாது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  உறுதிபடத் தெரிவித்துள்ளார்.



ஆன்லைன் பொறியியல் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்துள்ளதாகக் கூறியிருந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இதுதொடர்பாக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். சென்னை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்வித்துறை உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


இதையடுத்து நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ''அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கூட மதிப்பெண் குறைந்துள்ளதாகப் புகார் அளித்துள்ளனர். அவர்கள் உள்ளிட்ட 4 லட்சம் மாணவர்களும் விருப்பப்பட்டால் தேர்வை எழுதலாம். முன்பு ஆன்லைன் தேர்வு ஒரு மணி நேரமாக இருந்தது. தற்போது மூன்று மணி நேரம் தேர்வு நடத்தப்பட உள்ளது. மற்ற பல்கலைக்கழகங்களில் தேர்வு நடத்தப்படுவது போல அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும். எனினும் இத்தேர்வை எழுதுவதற்கு தேர்வு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை



தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்டு, மாணவர்கள் மேற்படிப்புக்கு அல்லது வேலைக்குச் செல்லலாம். இந்த மறு தேர்வுகள் நடந்து முடிந்த பிறகு, வழக்கமான தேர்வுகளும் விரைவில் நடைபெறும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். நீதிமன்றம் அறிவித்தது போல நாங்கள் தேர்வை முறையாக நடத்துகிறோம். தேர்வைப் புறக்கணிக்கவில்லை.



எனினும் ஏற்கெனவே தேர்வு கட்டணம் செலுத்தாதவர்கள் இந்த முறை தேர்வுக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு தேர்வை எழுத வேண்டும். மீண்டும் தேர்வு எழுதினாலும் எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதுவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.



உயர் கல்வித்துறைச் செயலாளர் புதிய கல்விக் கொள்கை, அதில் உள்ள குறைகள் பற்றியும் புதிய கல்விக் கொள்கையை எப்படிச் செயல்படுத்த முடியும் என்பது குறித்தும் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார் அவை அனைத்தையும் நாங்கள் ஆலோசித்து, நிச்சயமாக மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் செயல்படுவோம். புதிய கல்விக்கொள்கை நிச்சயம் தமிழ்நாட்டில் நுழையவே முடியாது  என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது'' என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

🍁🍁🍁 புதிய கல்வி கொள்கைக் குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர் இருமொழிக் கொள்கை தான் வேண்டுமென தெரிவித்துள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது...

புதிய கல்வி கொள்கைக் குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர் இருமொழிக் கொள்கை தான் வேண்டுமென தெரிவித்துள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

உயர்கல்வித்துறை சார்பில் புதியக் கல்விக்கொள்கை தொடர்பாக, கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்பு கூட்டம் இணைய வழியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், தமிழக அரசு அறிவித்துள்ள இருமொழிக் கொள்கை தான் வேண்டுமென்று தெரிவித்தாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதே போன்று, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நுழைத்தேர்வு வேண்டாம் என்றும் பெற்றோர் மற்றும் மாணவர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டதாக உயர்கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது. இந்த கருத்துகளின் அடிப்படையில், தலைமைச் செயலாளர் சண்முகம், மத்திய கல்வித்துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...