கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Anura Kumara Dissanayake Becomes President of Sri Lanka...



 இலங்கை அதிபராகிறார் அனுர குமார திசநாயக...


Anura Kumara Dissanayake Becomes President of Sri Lanka...


இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை.


இதுவரை எண்ணப்பட்டவற்றில் 53.84% வாக்குகளைப் பெற்றார் அனுர குமார திசநாயக.


மொத்தம் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் 16 மாவட்டங்களின் முடிவுகள் அறிவிப்பு.


16 மாவட்ட தேர்தல் முடிவுகளில் அனுர குமார திசநாயக அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை.


இலங்கையின் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயக அதிபராகிறார்.


இலங்கை அதிபராகிறார் அனுர குமார திசநாயக.. தமிழர் - சிங்களர் ஒற்றுமை குறித்து முதல் வாக்குறுதி!


இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்றதும் முதல் அறைகூவலாக சிங்களர் - தமிழர் ஒற்றுமை குறித்து வாக்குறுதி அளித்துள்ளார்.



இலங்கை அதிபர் தேர்தல் - இடதுசாரி தலைவர் அனுர குமார திசநாயக்க வெற்றி - நாளை காலை பதவியேற்பு...


இந்தியாவின் மிக நெருக்கமான அண்டை நாடாக இருந்து வரும் இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. மொத்தமுள்ள மக்கள் தொகையில் 75 சதவிகிதம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு 38 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிட்டனர்.


குறிப்பாக சுயேட்சை வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க, தேசிய மக்கள் சக்தி கட்சியின் அநுரா குமார திஸநாயக, ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச, தமிழர்கள் தரப்பு வேட்பாளர் அரியநேத்திரன் உள்ளிட்டோர் இடையே போட்டி நிலவி வந்தது. எனினும், யாரும் எதிர்பார்க்காத விதமாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் அநுரா குமார திஸநாயக அதிபர் தேர்தலில் முன்னிலை வகிக்க ஆரம்பித்தார்.


வாக்கு எண்ணிக்கை முடிவில் அநுரா குமார திஸநாயக 39.52 சதவிகித வாக்குகளும், சஜித் பிரேமதாச 34.28 சதவிகித வாக்குகளும் பெற்றிருந்தனர். தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் 2ஆம் விருப்ப வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முடிவில் அநுரா குமார திஸநாயக வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. நாளை காலை 9 மணிக்கு அவர் அதிபராக பதவி ஏற்க உள்ளார்.


இதனையடுத்து அநுரா குமார திஸநாயக வெளியிட்ட அறிவிப்பில், “நாம் ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமையே இந்த புதிய தொடக்கத்தின் அடித்தளம் ஆகும். நாம் தேடும் புதிய மறுமலர்ச்சி இந்த பகிரப்பட்ட வலிமை மற்றும் பார்வையில் இருந்து எழும். ஒன்றிணைந்து இலங்கையின் வரலாற்றை மீண்டும் எழுத தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.



அனுர குமார திசநாயக்க இலங்கையின் அனுராதபுரத்தில் 1968-ல் எளிய குடும்பத்தில் பிறந்தவர். இலங்கையில் மாற்றம் தேவை என்று கூறி ஊழல் ஒழிப்பு கொள்கைகளை முன்னெடுத்தார். ஏகேடி என அழைக்கப்படும் இவர், 1987ஆம் ஆண்டு முதல் ஜனதா விமுக்தி பெருமுனாவில் இணைந்து தற்போது அதன் தலைவராக உள்ளார்.



2019 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் 3.16 சதவிகித வாக்குகளை பெற்றார். கடந்த 2022ல் இலங்கையில் பெரிய பொருளாதார சிக்கல் ஏற்பட்டபோது மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து ...