கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை TNSED Schools Appல் உள்ளீடு செய்தல் - இயக்குநரின் செயல்முறைகள்...

 

முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை TNSED Schools Appல் உள்ளீடு செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 03-10-2024...



DEE - முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை TNSED Appல் உள்ளீடு செய்தல் - வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு...


2024-25ஆம் கல்வி ஆண்டு முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டு மதிப்பெண்களை TNSED செயலியில் உள்ளீடு செய்தல் சார்ந்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது .


 ✍️1. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான முதல் பருவத் தொகுத்தறி தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை TNSED செயலியில் ஆசிரியர்கள் உள்ளீடு செய்திடல் வேண்டும் .


✍️ 2. விடைத்தாள்களை திருத்திய பின்னர் தொகுத்தறி மதிப்பெண்களை ( 60 மதிப்பெண்கள் ) கேள்விவாரியாக அக்டோபர் 09 ஆம் தேதிக்குள் உள்ளீடு செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் இணைப்பில் கண்டுள்ளவாறு இணைக்கப்பட்டுள்ளது. 


✍️3. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இது சார்ந்த விவரத்தினை தெரிவிக்குமாறும் ஆசிரியர்கள் இப்பொருள் சார்ந்து தெளிவுற அறிந்திருப்பதை உறுதி செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேற்படி மதிப்பெண்களை உள்ளீடு செய்தல் சார்ந்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் ( தொடக்கக் கல்வி ) அறிவுறுத்தப்படுகிறார்கள் .


Dear team, please find the circular for entering SA Term 1 marks in TNSED App. Kindly share with teachers...


DEE Circular - SA Mark Entry - Term 1 - 2024-25 Proceedings 👇



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தொடக்கக் கல்வி 2024 - 2025 ஆம் கல்வியாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கான முதல் பருவ தொகுத்தறி மதிப்பெண்கள் TNSED SCHOOLS செயலி உள்ளீடு செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்...


தொகுத்தறி 60 மதிப்பெண்களை  கேள்வி வாரியாக அக்டோபர் 09.10.2024 தேதிக்குள் உள்ளீடு செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது....


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Even words or actions that cause discomfort to women in the workplace are sexual harassment – ​​Madras High Court explains

   பெண்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் சொல் அல்லது செயல் கூட பாலியல் துன்புறுத்தல்தான் - சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் Even words or acti...