கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Summative Assessment லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Summative Assessment லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Term 3 – SA மதிப்பெண் பதிவு தொடர்பான அறிவிப்பு

 

 

SA Term 3 – மதிப்பெண் பதிவு தொடர்பான அறிவிப்பு:


 Term 3 Summative Assessment மதிப்பெண் பதிவு module, 06.04.2026 முதல் 20.04.2026 வரை  செயல்பாட்டில் இருக்கும்.


மதிப்பெண்களை பதிவு செய்வதற்கு முன், தயவுசெய்து உங்கள் App-ஐ play store-ல் TNSED Schools App update செய்து கொள்ளவும். மதிப்பெண்களை சரியாக, அனைவரும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.


App link :

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis


2025-2026 Term 3 / Annual Exam Question Papers - DEE Proceedings

 

2025-26ஆம் கல்வியாண்டு மூன்றாம் பருவம் தொகுத்தறி மதிப்பீடு / ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


2025-2026 Term 3 / Annual Exam Question  Papers - DEE Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 06.

ந.க. எண் : 003636/ஜெ2/2025, நாள் : 25.03.2026


பொருள் : தொடக்கக் கல்வி 2025-26ஆம் கல்வியாண்டு மூன்றாம் பருவம் தொகுத்தறி மதிப்பீடு / ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள் வழிகாட்டுதல்கள் - சார்ந்து


பார்வை : சென்னை 6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர். தனியார் பள்ளிகள் இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள், ந.க.எண். 048688 / எம்1 / இ1/2025. नं. 20.03.2026.


பார்வையில் காணும் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்ட கால அட்டவணையின்படி 2025-26ஆம் கல்வியாண்டிற்கான முழு ஆண்டுத் தேர்வு / மூன்றாம் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டினை நடத்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்பட்டது.


இத்தேர்விற்கான வினாத்தாள்களை அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் உரிய நேரத்தில் வழங்கி மதிப்பீட்டினை நடத்திடவும் நடுநிலைப் பள்ளிகளில் வினாத் தாள்களை பதிவிறக்கம் செய்து மதிப்பீட்டினை மேற்கொள்ளவும் பின்வரும் வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.


வகுப்பு 1 முதல் 5


மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் நிர்வாக எல்லைக்குட்பட்ட ஒன்றியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கும் மாணவர்களின் வகுப்பு பயிற்று மொழி மற்றும் பாடவாரியாக உரிய எண்ணிக்கையில் வினாத் தாள்களை நகலெடுத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக வழங்கிட வேண்டும்.


மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) தங்களின் EMIS உள்நுழைவின் வழியாக 25.03.2026 முதல் 30.03.2026 வரை வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இணைப்பு-1 இல் இதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. 


இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட வினாத்தாள்களை மாணவர்கள்  எண்ணிக்கைக்கு ஏற்ப நகலெடுத்தல் வேண்டும்.


நகலெடுக்கப்பட்ட வினாத்தாள்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக ஒவ்வொரு பள்ளிக்கும் வகுப்புவாரியாக, பாடவாரியாக மற்றும் பயிற்றுவழி வாரியாகப் பிரித்து, தனித்தனி A3 foolscap size உறைகளுக்குள் வைத்து அவ்வுறையின் மீது பின்வரும் விவரங்களை எழுதி ஒட்டுதல் வேண்டும்.


வகுப்பு:


பாடத்தின் பெயர்


பயிலும் வழி:


தேர்வு நாள்:


ஒரு பள்ளிக்குத் தேவைப்படும் உறைகளின் எண்ணிக்கை 19 ஆகும். (1ஆம் வகுப்புக்கு 3, 2ஆம் வகுப்புக்கு 3, 3ஆம் வகுப்புக்கு 3, 4ஆம் வகுப்புக்கு 5, 5ஆம் வகுப்புக்கு 5, மொத்தம் 19)


அனைத்துப் பள்ளிகளுக்கும் 3ஆம் பருவம் தொகுத்தறி மதிப்பீடு நடைபெறுவதற்கு 2


நாள்களுக்கு முன்னதாகவே வினாத்தாள்கள் வழங்கப்பட வேண்டும்.


+ அவ்வினாத்தாள்களை தலைமை ஆசிரியர்கள் பாதுகாப்பாக வைத்து தொகுத்தறி மதிப்பீடு கால அட்டவணையின்படி அன்று நடைபெறவிருக்கும் பாடத்திற்கு உரிய வினாத்தாளை மட்டும் பயன்படுத்தி அன்றைய மதிப்பீட்டினை நடத்திட அறிவுறுத்தப்பட வேண்டும்.


வகுப்பு 6 முதல் 8


வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக http://exam.tnschools.gov.in என்னும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும்.


+இணைப்பு -2இல் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


தேர்வு நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் காலை 9 மணி முதல் தேர்வு நாள் மதியம் 1.00 மணி வரை அனைத்து நடுநிலைப் பள்ளிகளும் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.


வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.


தேர்வு தொடங்கும் நாளுக்கு முன்னதாகவே, துறையின் சார்பில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அச்சுப்பொறியைப் பயன்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை ஆசிரியர்கள் அச்சிட்டு வைத்திருக்க வேண்டும்.


அனைத்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும் இணைப்பு 2இல் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை நன்கு அறிந்திருப்பதை மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.


தொடக்கக்கல்வி இயக்குநருக்காக


இணைப்பு:


1. பதிவிறக்க வழிமுறைகள் வகுப்பு 1-5 

2. பதிவிறக்க வழிமுறைகள் வகுப்பு 6-8


பெறுநர்


அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) நகள்


1. அரசு கூடுதல் முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வித் துறை. தலைமைச் செயலகம், சென்னை 09


பணிவுடன் அனுப்பலாகிறது.


2 மாநிலத் திட்ட இயக்குநர். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி. சென்னை - 06


3. இயக்குநர்.பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை 06.


தசுவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது


5. முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்டம்


தகவலுக்காக


இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை - 06


2025-26 - 1 to 9th Standard - Term 3 Summative Assessment / Annual Examination Timetables

 

 

2025-26 - 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மூன்றாம் பருவத் தொகுத்தறி மதிப்பீடு / முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணைகள்


2025-26 - Third Term Summative Assessment / Annual Examination Timetables for Students of Classes 1 to 9 - Joint Proceedings of DSE, DEE & DPS



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள், சென்னை-06


ந.க.எண்.048688/எம்1/இ1/2025, நாள்.20p3.2026.


பொருள் :


பள்ளிக் கல்வி -2025-2026 ஆம் கல்வியாண்டு -1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழுஆண்டுத் தேர்வு கால அட்டவணைகள் அனுப்புதல் சார்ந்து,


அரசு / அரசு உதவி பெறும்/ தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான முழுஆண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து வகை தொடக்க/ நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு இத்தேர்வு கால அட்டவணை குறித்த விவரத்தினை தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகை மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இணைப்பு - முழுஆண்டுத் தேர்வு கால அட்டவணைகள்


இயக்குநர் 

தனியார் பள்ளிகள் இயக்ககம்


இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம்


இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்ககம்


பெறுநர்


1. முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்டங்கள்.


2. மாவட்டக் கல்வி அலுவலர்கள்( தொடக்கக் கல்வி, இடைநிலை மற்றும் தனியார் பள்ளிகள்) அனைத்து மாவட்டங்கள்


நகல்


1. அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை.

தலைமைச் செயலகம், சென்னை-09,


2. இயக்குநர், அரசு தேர்வுகள் இயக்ககம், தகவலுக்காக அனுப்பப்படுகிறது.



வகுப்பு 1-5 மூன்றாம் பருவத் தொகுத்தறி மதிப்பீடு கால அட்டவணை 2025-26

1 முதல் 5 ஆம் வகுப்புகள் - தேர்வு கால அட்டவணை


வகுப்பு 1,2,3


* ஏப்ரல் 8 - தமிழ்


* ஏப்ரல் 13 - ஆங்கிலம்


* ஏப்ரல் 16 - கணிதம்


 4 & 5 ஆம் வகுப்பு


* ஏப்ரல் 6 - தமிழ்


* ஏப்ரல் 8 - ஆங்கிலம்


* ஏப்ரல் 9 - கணிதம்


* ஏப்ரல் 13 - அறிவியல்


* ஏப்ரல் 16 - சமூக அறிவியல்





வகுப்பு 6-9 மூன்றாம் பருவத் தொகுத்தறி மதிப்பீடு / முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை 2025-26

6 முதல் 9 ஆம் வகுப்புகள் - தேர்வு கால அட்டவணை




2ஆம் பருவ தொகுத்தறி மதிப்பீடு SA மதிப்பெண்களை TNSED Schools செயலியில் தற்போது பதிவு செய்யலாம்





தற்போது 2025-26ஆம் கல்வி ஆண்டின், இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு  Summative Assessment மதிப்பெண்களை TNSED செயலியில் தற்போது பதிவு செய்யலாம்

Open ஆகவில்லை என்றால் Log out செய்து பின் Login செய்தால் Open ஆகிறது


🛑 IMPORTANT NOTICE 🛑


Ennum Ezhuthum mark entry feature is now available in the TNSED Schools app. 


We kindly ask all teachers to log out and log back in to the app before entering marks.


 Please remember to do this each time you enter marks in the app. Thank you!


*_TNSED SCHOOLS APP UPDATE NEWS_*


*TNSED SCHOOLS செயலியில் எண்ணும் எழுத்தும் (Ennum Ezhuthum) பருவம் 2  ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் மதிப்பெண்களை பதிவிடும் வசதி தற்போது ENABLE செய்யப்பட்டுள்ளது.*


ஆசிரியர்கள் அனைவரும் மதிப்பெண்களைப் பதிவிடும் முன், செயலியை ஒருமுறை 'Logout' செய்துவிட்டு மீண்டும் 'Log in' செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். 


*_STATE EMIS TEAM_*



>>> TNSED Schools App Update செய்ய இங்கே சொடுக்கவும் 



NIVEA Soft Light Moisturizer, 300 ml | Instant Hydration with Vitamin E & Jojoba Oil | Non-Greasy Cream for Face, Body and Hands | For Smooth, Healthy Skin


https://amzn.to/4s5pHQV




முதல் பருவ தொகுத்தறி SA மதிப்பெண்களை TNSED செயலியில் தற்போது உள்ளீடு செய்யலாம்

முதல் பருவ தொகுத்தறி SA  மதிப்பெண்களை TNSED செயலியில் தற்போது உள்ளீடு செய்யலாம்


2025-26 ஆம் கல்வி ஆண்டின், முதல் பருவ தொகுத்தறி Summative Assessment Marks TNSED செயலியில் தற்போது பதிவு செய்ய முடிகிறது




Work bookல் உள்ள தொகுத்தறி மதிப்பீடு (SA) எழுத உத்தேச Time Table

 

Work bookல் உள்ள  தொகுத்தறி மதிப்பீடு (Summative Assessment) எழுத உத்தேச Time Table


வணக்கம். மதிப்பிற்குரிய HMs & Teachers,

Work bookல் உள்ள  தொகுத்தறி மதிப்பீடு (Summative Assessment) எழுத உத்தேச Time Table 👇


1, 2, 3 ஆம் வகுப்புகள்

11.4.25 பிற்பகல் *தமிழ்*

16.4.25 பிற்பகல் *English* 

17.4.25 பிற்பகல் *கணக்கு*


4, 5ஆம் வகுப்புகள் 

*Work bookல் SA* 👇

09.4.25 காலை *தமிழ்*

11.4.25 காலை *English* 

15.4.25 காலை *கணக்கு*

17.4.25 காலை *அறிவியல்*

21.4.25 காலை *சமூக அறிவியல்*

💐🙏



Term 3 - SA Timetable & Issue of Exam Question Papers - Guidelines - DEE Proceedings

 

 தொடக்கக்கல்வி - மூன்றாம் பருவம் - தொகுத்தறி மதிப்பீடு கால அட்டவணை மற்றும் மூன்றாம் பருவத் தேர்வு வினாத்தாள்கள் வழங்குதல் -  வழிகாட்டுதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 12-03-2025



Primary Education - Term 3 - Summative Assessment Timetable and Issue of Third Term Examination Question Papers - Guidelines - Proceedings of the Director of Elementary Education, Dated: 12-03-2025





Term 2 - SA Marks - 1 to 5th Std - Input in TNSED App - Guidelines - DEE Proceedings

 

  2024-25ஆம் கல்வி ஆண்டு - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பிற்கான இரண்டாம் பருவத் தொகுத்தறி மதிப்பெண்கள் - TNSED செயலியில் உள்ளீடு செய்தல் - வழிகாட்டி நெறிமுறைகள் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 24-12-2024...


Academic Year 2024-25 - Second Term Summative Assessment Marks for Class 1 to 5 in Government and Government Aided Schools - Input in TNSED App - Guidelines - Proceedings of Director of Elementary Education, Dated: 24-12-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் (ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை) - TN SED School app செயலியில் உள்ளீடு செய்தல் - சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்...



Term 2 Summative Assessment - Change in Exam Date Due to Heavy Rains Due to Cyclone Fengal - DEE Proceedings

 

தொடக்கக் கல்வி - இரண்டாம் பருவம் தொகுத்தறி மதிப்பீடு - பெஞ்சால் புயல் கனமழை காரணமாக தேர்வு தேதி மாற்றம் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Elementary Education - Term 2 Summative Assessment / Half Yearly Examination - Change in Exam Date Due to Heavy Rains Due to Cyclone Fengal - Proceedings of Director of Elementary Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை TNSED Schools Appல் உள்ளீடு செய்தல் - இயக்குநரின் செயல்முறைகள்...

 

முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை TNSED Schools Appல் உள்ளீடு செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 03-10-2024...



DEE - முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை TNSED Appல் உள்ளீடு செய்தல் - வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு...


2024-25ஆம் கல்வி ஆண்டு முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டு மதிப்பெண்களை TNSED செயலியில் உள்ளீடு செய்தல் சார்ந்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது .


 ✍️1. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான முதல் பருவத் தொகுத்தறி தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை TNSED செயலியில் ஆசிரியர்கள் உள்ளீடு செய்திடல் வேண்டும் .


✍️ 2. விடைத்தாள்களை திருத்திய பின்னர் தொகுத்தறி மதிப்பெண்களை ( 60 மதிப்பெண்கள் ) கேள்விவாரியாக அக்டோபர் 09 ஆம் தேதிக்குள் உள்ளீடு செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் இணைப்பில் கண்டுள்ளவாறு இணைக்கப்பட்டுள்ளது. 


✍️3. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இது சார்ந்த விவரத்தினை தெரிவிக்குமாறும் ஆசிரியர்கள் இப்பொருள் சார்ந்து தெளிவுற அறிந்திருப்பதை உறுதி செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேற்படி மதிப்பெண்களை உள்ளீடு செய்தல் சார்ந்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் ( தொடக்கக் கல்வி ) அறிவுறுத்தப்படுகிறார்கள் .


Dear team, please find the circular for entering SA Term 1 marks in TNSED App. Kindly share with teachers...


DEE Circular - SA Mark Entry - Term 1 - 2024-25 Proceedings 👇



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தொடக்கக் கல்வி 2024 - 2025 ஆம் கல்வியாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கான முதல் பருவ தொகுத்தறி மதிப்பெண்கள் TNSED SCHOOLS செயலி உள்ளீடு செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்...


தொகுத்தறி 60 மதிப்பெண்களை  கேள்வி வாரியாக அக்டோபர் 09.10.2024 தேதிக்குள் உள்ளீடு செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது....


1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவம் தொகுத்தறி மதிப்பீடு Summative Assessment - கால அட்டவணை (20.09.2024 முதல் 27.09.2024 வரை) மற்றும் வினாத்தாள் பதிவிறக்கம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் வழிகாட்டுதல்கள்...

 

 

தொடக்கக்கல்வித்துறை - முதல் பருவத் தேர்வு 2024-2025...


1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவம் தொகுத்தறி மதிப்பீடு - கால அட்டவணை (20.09.2024 முதல் 27.09.2024 வரை தொகுத்தறி மதிப்பீடு (SA 60) மற்றும் வினாத்தாள் பதிவிறக்கம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவம் தொகுத்தறி மதிப்பீடு Summative Assessment - கால அட்டவணை (20.09.2024 முதல் 27.09.2024 வரை) மற்றும் வினாத்தாள் பதிவிறக்கம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் வழிகாட்டுதல்கள்...


முதல் பருவத்தேர்வு வினாத்தாள் 1-5 வட்டாரக்கல்வி அலுவலர் வழியாக வழங்கப்படும்...


6-8 வகுப்புகளுக்கு tnexam வழியாக பதிவிறக்கம் செய்ய வேண்டும்..



>>> தொடக்கக் கல்வி இயக்குநரின் வழிகாட்டுதல்கள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️


*1 முதல் 3 வகுப்பு முதல் பருவ தேர்வு அட்டவணை*


 *காலை 10 மணி - 12 மணி வரை* 


 *20.09.24 வெள்ளி தமிழ்*


 *23.09.24 திங்கள் ஆங்கிலம்*


 *25.09.24 புதன் கணிதம்*



✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

*4 மற்றும் 5 வகுப்பு முதல் பருவ தேர்வு அட்டவணை*


 *மதியம் 2 மணி - 4 மணி வரை* 


 *20.09.24 வெள்ளி தமிழ்*


 *23.09.24 திங்கள் ஆங்கிலம்*


 *25.09.24 புதன் கணிதம்*


 *26.09.24 வியாழன் அறிவியல்* 


 *27.09.24 வெள்ளி சமூக அறிவியல்*



1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவம் தொகுத்தறி மதிப்பீடு - கால அட்டவணை (20.09.2024 முதல் 27.09.2024 வரை)...

 

1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவம் தொகுத்தறி மதிப்பீடு - கால அட்டவணை (20.09.2024 முதல் 27.09.2024 வரை)...


எண்ணும் எழுத்தும் முதல் பருவம் (1-5) வகுப்புகளுக்குரிய தொகுத்தறி தேர்வு கால அட்டவணை...



>>> தொடக்கக் கல்வி இயக்குநரின் வழிகாட்டுதல்கள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2023-2024ஆம் கல்வியாண்டு - 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவத் தேர்வு நடத்துதல் - தேர்வு கால அட்டவணை - தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 2411/ எஃப் 2/ 2021, நாள்: 08-12-2023 (Academic Year 2023-2024 - Conduct of Second Term Summative Examination for Class 1 to 5 Students - Time Table - Joint Proceedings of Director of Elementary Education and Director of SCERT Rc.No.2411/ F2/2021, Dated: 08-12-2023)...

 


2023-2024ஆம் கல்வியாண்டு - 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவத் தேர்வு  நடத்துதல் - தேர்வு கால அட்டவணை - தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 2411/ எஃப் 2/ 2021, நாள்: 08-12-2023 (Academic Year 2023-2024 - Conduct of Second Term Summative Examination for Class 1 to 5 Students - Time Table - Joint Proceedings of Director of Elementary Education and Director of SCERT Rc.No.2411/ F2/2021, Dated: 08-12-2023)...








🦋 *எண்ணும் எழுத்தும் தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள் கால அட்டவணையில் வழங்கியுள்ள படி தேர்விற்கு முந்தைய தினம் மதியம் 2 மணி முதல் டவுன்லோட் செய்வதற்கான வழிமுறை*

▪️ *வகுப்பு 1-3*

மொழிப் பாடம்
14-12-2023 *2 மணி முதல்* 

ஆங்கிலம்
18-12-2023 *2 மணி முதல்*

கணக்கு
20-12-2023 *2 மணி முதல்* 

▪️ *4 & 5 ஆம் வகுப்பு*

மொழிப் பாடம்
11-12-2023 *2 மணி முதல்* 

ஆங்கிலம்
13-12-2023 *2 மணி முதல்*

கணக்கு
15-12-2023 *2 மணி முதல்* 

அறிவியல் 
19-12-2023 *2 மணி முதல்* 

சமூக அறிவியல் 
21-12-2023 *2 மணி முதல்*

டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

எண்ணும் எழுத்தும் - இரண்டாம் பருவம் - வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பீடு (FA & SA) செய்ய வேண்டிய தேதிகள் - அலகு வாரியாக (Ennum Ezhuthum - Term 2 – Dates for Formative and Summative Assessment – Unit wise)...

 

எண்ணும் எழுத்தும் - இரண்டாம் பருவம் - வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பீடு (FA & SA) செய்ய வேண்டிய தேதிகள் - அலகு வாரியாக (Ennum Ezhuthum - Term 2 – Dates for Formative and Summative Assessment – Unit wise)...


>>> Click Here to Download...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய... 

“Assessment successfully saved” எனும் செய்தி தோன்றும் வரை காத்திருக்கவும் - TN EE MISSON...

 


“Assessment successfully saved” எனும் செய்தி தோன்றும் வரை காத்திருக்கவும் - TN EE MISSON...


மதிப்பீடுகளை நடத்தும் போது வெளியேறி மீண்டும் உள்நுழைய வேண்டாம்.  மதிப்பிடப்பட்ட மாணவர்களின் தரவு இழக்கப்படும். மாணவர் மதிப்பீடு செய்யப்பட்டவுடன், தரவு  (தொலைபேசியில்) சேமிக்கப்படும்.   “Data stored in local”  என்ற செய்தி காட்டப்படும். மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, தயவுசெய்து Menu பக்கத்திற்குச் செல்லவும்.  தரவு ஒத்திசைக்கப்படும் வரை காத்திருக்கவும் மற்றும் “Assessment successfully saved”
என்ற செய்தி  தோன்றும்.


>>> Click Here to Download PDF File - TN EE MISSON...



அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு வணக்கம், 


TN EE mission group இல்

இன்று வெளியிடப்பட்ட Pinned

Msgல்  1-3 Std


SA மதிப்பீடுகளை நடத்தும் போது, appஇல் இருந்து Log out செய்து  மீண்டும் login. செய்ய வேண்டாம் .  

அவ்வாறு செய்தால் மதிப்பிடப்பட்ட மாணவர்களின் தரவு இழக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது . 

மாணவர் மதிப்பீடு செய்யப்பட்டவுடன், தரவு  (தொலைபேசியில்) சேமிக்கப்படும்.   “Data stored in local”  என்ற செய்தி காட்டப்படும். மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, தயவுசெய்து Menu பக்கத்திற்குச் செல்லவும். 

 தரவு ஒத்திசைக்கப்படும் வரை காத்திருக்கவும் மற்றும் “Assessment successfully saved”

என்ற செய்தி  தோன்றும்.





Hello teachers,

All the issues for which the classroom details, username and password was given has been reported to EMIS teacher. For other kindly requesting you to share the concern in detail so we can forward to emis. So please requesting you to mention what is the classroom details issue that you are facing for conducting sa, username and password. Only if we know what issue we will be able to convey to emis what is the issue. So mention what is the issue.

For eg:
I am handling 1st and 2nd classes but only 2nd std sa questions are opening.
Username
Password

In this we can know what issue. If you only say classroom details issue we will not be able to know what exactly is the issue. Please help us to help you. Thank you.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

Summative Assessment-ல் மொட்டு நிலை மாணவர்களுக்கு மலர் நிலை கேள்விகள் - TN EE Misson Admin பதில் (Malar Level Questions for Mottu Level Students in Summative Assessment - TN EE Misson Admin Answer)...

 

Summative Assessment-ல் மொட்டு நிலை மாணவர்களுக்கு மலர் நிலை கேள்விகள் - TN EE Misson Admin பதில் (Malar Level Questions for Mottu Level Students in Summative Assessment - TN EE Misson Admin Answer)...


இரண்டாம் பருவத்திற்கான கணிதத்திற்கான R.P Training-ல் DIET - ல் மாணவர்களுக்கு மாதத் தேர்வு நடத்தும் பொழுது அந்த நிலைக்குரிய கேள்விகளை மட்டும் மதிப்பிட்டால் போதும் என்று கூறினார்கள். பயிற்சிப் புத்தகத்திலும் அந்த மாணவர் எந்த நிலையில் உள்ளாரோ அந்த பயிற்சிகளை மட்டும் செய்ய வைத்தால் போதும் என்று கூறினார்கள். ஆனால் தற்பொழுது Summative assessment-ல் மொட்டு நிலை மாணவர்களுக்கு 10 கேள்விகள் விடையளித்தப் பின் அடுத்ததாக மலர் நிலை கேள்விகளும் இடம் பெற்றுள்ளன ஏன் இந்த முரண்பாடு?


மாணவர்கள் தங்கள் நிலைக்குரிய வினாக்களுக்கு பதில் அளிக்கும் விதத்தை பொறுத்து அதற்கடுத்த நிலைகளுக்கு உண்டான வினாக்கள் தோன்றலாம்.

மூன்றாம் வகுப்பில் மொட்டு நிலையில் ஒரு மாணவர் இருந்தால் அந்நிலைக்குரிய வினாக்களுக்கு அவர் விடை அளித்த பிறகு மலர் நிலைக்குறிய வினாக்கள் தோன்றும்.




 பயிற்சிப்புத்தகத்தில் அந்தந்த நிலைக்குரிய பயிற்சிகளை மட்டும் செய்யும் பொழுது மாணவர்கள் எவ்வாறு மலர் நிலைக்கான கேள்விகளுக்கு விடையளிக்க முடியும் சார்?


நீங்கள் இதில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். பயிற்சி நூலைப் பொருத்தமட்டில் மாணவர்கள் அவர்களின் கற்றல் நிலைக்குரிய செயல்பாடுகளை மட்டும் செய்தால் போதுமானது. அதேசமயம் மாணவர் அவருடைய நிலைக்கு அடுத்த நிலைக்கு உண்டான செயல்பாடுகளை பயிற்சி நூலில் செய்ய முன்வந்தால் அவர்களை ஊக்குவிக்க வேண்டியது நம்முடைய கடமையும் கூட.


அதேபோல் தான் மதிப்பீடும் அவருடைய நிலைக்குண்டான கேள்விகளுக்கு முதலில் பதில் அளிப்பார்.அதுதான் மதிப்பெண் கணக்ககீட்டிற்கும்  எடுத்துக் கொள்ளப்படும்.அவருடைய நிலைக்கு உண்டான வினாக்களுக்கு அவர் பதில் அளிக்கும் விதத்தை பொறுத்து அதற்கு அடுத்த நிலைக்கு உண்டான வினாக்கள் தோன்றும் அதற்கு அவர் பதில் அளிப்பதை நீங்கள் பதிவு செய்தால் போதும்.



எண்ணும் எழுத்தும் - பருவம் 1 - நான்காம் வகுப்பு - தொகுத்தறி மதிப்பீடு - வினாத்தாள்கள் (Ennum Ezhuthum - Term 1 - Class 4 - Summative Assessment - Question Papers)...

 


எண்ணும் எழுத்தும் - பருவம் 1 - நான்காம் வகுப்பு - தொகுத்தறி மதிப்பீடு - வினாத்தாள்கள் (Ennum Ezhuthum - Term 1 - Class 4 - Summative Assessment - Question Papers)...


>>> தமிழ்...


>>> ஆங்கிலம்...


>>> கணக்கு (தமிழ் வழி)...


>>> Mathematics (English Medium)...


>>> அறிவியல் (தமிழ் வழி)...


>>> Science (English Medium)...


>>> சமூக அறிவியல் (தமிழ் வழி)...


>>> Social Science (English Medium)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

 

4 & 5ஆம் வகுப்புகள் - தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள் தரவிறக்கம் செய்யும் முறை - செப்டம்பர் 20 காலை 10 மணி முதல் தரவிறக்கம் செய்யலாம்(4th & 5th Class – Summative Assessment Question Paper Download Procedure – September 20th 10 AM onwards)...

தொகுத்தறி மதிப்பீடு செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 27 வரை நடத்தப்படும். 6 வேலை நாட்கள் இருப்பதால், பிரிண்ட் அவுட் எடுப்பது போன்ற ஆயத்த பணிகளை நாளை (செப்டம்பர் 20) செய்யலாம். ஆசிரியர்கள் அடுத்த 5 வேலை நாட்களில் அனைத்து பாடங்களுக்கும் மதிப்பீடுகளை நடத்தி செப்டம்பர் 27 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். (The Summative Assessment can be conducted from 20th September to 27th September. Since, there are 6 working days, preparatory work such as taking printouts can be done tomorrow (20th September). The teacher shall conduct assessments for all subjects in the next 5 working days and complete it by 27th September.)...


4 & 5ஆம் வகுப்புகள் - தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள் தரவிறக்கம் செய்யும் முறை - செப்டம்பர் 20 காலை 10 மணி முதல் தரவிறக்கம் செய்யலாம்(4th & 5th Class – Summative Assessment Question Paper Download Procedure – September 20th 10 AM onwards)...


>>> Click Here to Download - 4th & 5th Class – Summative Assessment Question Paper Download Procedure...









>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


🌟 Instruction about Download 4,5th Std Question paper:



The Summative Assessment can be conducted from 20th September to 27th September. Since, there are 6 working days, preparatory work such as taking printouts can be done tomorrow (20th September). The teacher shall conduct assessments for all subjects in the next 5 working days and complete it by 27th September.



நாளை காலை 10.00 மணிக்கு வினாத்தாள் TNSED அப்ளிகேசனில் வெளியிடப்படும். நாளை ப்ரிண்ட் அவுட் எடுத்து நாளை மறுநாள் முதல் 21,22,25,26,27 என தினம் ஒரு தேர்வு வைக்கவேண்டும். 27 கடைசி நாள்.



தமிழ் ஆங்கிலம் கணிதப்பாடங்களுக்கு அரும்பு மொட்டு மலர் வகுப்புநிலை வினாத்தாள். அறிவியல் சமூக அறிவியலுக்கு ஒரேவினாத்தாள். விடைகளைத் திருத்தி மதிப்பெண்களை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.


🍁 _*4-5 வகுப்பு வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்:*_


🔅 நாளை 20.09.2023 காலை 10.00 மணி அளவில் TNSED Schools App ல் வகுப்பு ஆசிரியர் தங்களுடைய Login ID & Password பயன்படுத்தி Login செய்து Download செய்து கொள்ள வேண்டும்.


🔅 Click EE Module & Summative 


🔅 Click 4 Summative or 5 Summative 


🔅 Zip file ஆக Download செய்யப்படும்.


🔅 My file மூலம் Open செய்து Extract கொடுத்து Print எடுத்துக் கொள்ளலாம்.


🔅 Tamil Medium & English medium வினாத்தாள்கள் அனைத்தும் இடம்பெறும்.


🔅 தமிழ், ஆங்கிலம் & கணிதம் பொறுத்தவரையில் மாணவர்களின் நிலையை (அரும்பு , மொட்டு & மலர்) பொறுத்து Print செய்து கொடுக்க வேண்டும்.


🔅 அறிவியல் & சமூக அறிவியல்  பொறுத்தவரையில் அனைத்து மாணவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.


*-- TN EE MISSION*

1-5ஆம் வகுப்பு - எண்ணும் எழுத்தும் - பருவம் 1 - தொகுத்தறி மதிப்பீடு - திருத்தப்பட்ட கால அட்டவணை (1-5th Std - 1st Term - Summative Assessment - Revised Time Table - Ennum Ezhuthum)...

 

 1-5ஆம் வகுப்பு - எண்ணும் எழுத்தும் - பருவம் 1 - தொகுத்தறி மதிப்பீடு - திருத்தப்பட்ட கால அட்டவணை (1-5th Std - 1st Term - Summative Assessment - Revised Time Table - Ennum Ezhuthum)...


>>> Click Here to Download...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TAPS இடைக்கால நிவாரணம் ரூ.10000 மட்டுமே - கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு

 18 ஆண்டுகள் பணியாற்றினால் தான் 50% ஓய்வூதியம் என்று ஆசிரியர்களை ஏமாற்றுவதா? - ஆசிரியர் சங்கம் கண்டனம் TAPS இடைக்கால நிவாரணம்  ரூ.10000 மட்ட...