கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"Chief Minister M.K.Stalin is our Headmaster" - Minister Anbil Mahesh

 “எங்களுக்கு தலைமை ஆசிரியர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்” - கோவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சு


"Chief Minister M.K.Stalin is our Headmaster" - Minister Anbil Mahesh speech in Coimbatore


கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களிடையே உரையாற்றிய அவர், “நான் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தாலும், எங்களுக்கு தலைமை ஆசிரியர் முதலமைச்சர்தான். அவரை பார்க்கச் செல்லும்போது பரீட்சைக்குச் செல்ல தயாராகும் மாணவர்களை போல்தான் நானும் தயாராகிச் செல்வேன். ஆனாலும், எங்களை விட பல செய்திகளை அவர் முன்கூட்டியே தெரிந்து வைத்திருப்பார்” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.


விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:- முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுநகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது, அங்குள்ள பள்ளியின் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது அங்கிருந்த மாணவி ஒருவர் நாங்கள் இதுவரை உங்களை டி.வி.யில் மட்டுமே பார்த்து இருந்தோம். தற்போது நேரில் பார்த்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களை அப்பா என்று அழைத்து கொள்ளலாமா என கேட்டு அப்பா என்று அழைத்தது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த நாள் மிகவும் நிறைவான நாள் என்று குறிப்பிட்டுள்ளார். நான் சொல்கிறேன். ஒவ்வொரு நாளுமே நிறைவான நாள் தான். ஏனென்றால் நம்முடைய தி.மு.க. ஆட்சியே நிறைவான ஆட்சியாக தான் இருக்கிறது. மக்கள் அனைவரும் அதை தான் சொல்கிறார்கள். பாராட்டுகிறார்கள்.


தமிழக முதல்வர் பள்ளிக்கல்வித்துறைக்கு என்று அதிக நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கல்விக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம். கல்வியில் செய்யும் செலவானது நல்ல சமுதாயம் என்ற வட்டியை தரும். பிள்ளைகள் படித்தால் சமுதாயம் பயன்பெறும். பள்ளிகளுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்படும். மாணவர்கள் தங்கள் கவனம் முழுவதையும் படிப்பில் செலுத்த வேண்டும். படித்து முடித்து நல்ல நிலையை அடையும் போது மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியை மறந்து விடாதீர்கள். நீங்கள் படித்த பள்ளிக்கு ஏதாவது ஒரு வகையில் நீங்கள் உதவி செய்ய வேண்டும்.


தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படித்த பழைய மாணவர்கள் பலரை விழுதுகள் என்ற செயலியில் இணைத்துள்ளோம். அதில் 7 லட்சம் பழைய மாணவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை தங்கள் பள்ளிக்கு செய்து வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...