கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teacher arrested for giving alcohol to female students and violating

 


மாணவிகளுக்கு மது கொடுத்து அத்துமீறல் - போக்சோ (POCSO) சட்டத்தில் ஆசிரியர் கைது


உடன்குடியில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த மாணவிகளை உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங், மண்டல அளவிலான விளையாட்டு போட்டிக்கு அழைத்து சென்றபோது அவர்களுக்கு மதுகொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.


குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் கோவையில் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.


மாணவிகளை மது அருந்த வைத்து பாலியல் அத்துமீறல்... உடற்கல்வி ஆசிரியர் கைது


உடற்கல்வி ஆசிரியர் கடந்த மாதம் 22-ம் தேதி மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்காக பள்ளி மாணவிகள் 5 பேரை தூத்துக்குடி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த அறையில் மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்து அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.


தூத்துக்குடியில் மாணவிகளை விளையாட்டு போட்டிக்கு அழைத்துச் சென்ற இடத்தில், கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட விவகாரத்தில் உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உடன்குடியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.


இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் அதே பகுதியைச் சேர்ந்த பொன்சிங்.


இவர் கடந்த மாதம் 22-ம் தேதி மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்காக பள்ளி மாணவிகள் 5 பேரை தூத்துக்குடி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த அறையில் மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்து அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.


மேலும் இதுகுறித்து யாரிடமும் தகவல் தெரிவிக்கக் கூடாது என்று மிரட்டியுள்ளதாகவும் தெரிகிறது.


இந்த நிலையில் இதுகுறித்து மாணவிகள் பெற்றோர்களிடம் கூறியுள்ளார். பெற்றோர்கள் பள்ளியில் முறையிட்டுள்ளனர்.


ஆனால் பள்ளி நிர்வாகம் முறையாக பதில் அளிக்கவில்லை என்பதால், இன்று மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


மாவட்ட கல்வி அலுவலர் உள்பட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ், வட்டாட்சியர் பாலசுந்தரம் உள்பட அதிகாரிகள் வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



இதற்கிடையே பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் தலைமறைவானார்.


பெற்றோர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, கல்வி அதிகாரிகள் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கோவையில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. போலீசார் அங்கு விரைந்துள்ளனர். அவரை விரைவில் அங்கிருந்து பிடித்து வர நடவடிக்கை எடுத்து வருவதாக உறுதி அளித்தனர்.


இதையடுத்து பெற்றோர்கள் சமாதானம் அடைந்து பள்ளி வாசலில் காத்திருந்தனர்.


இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் கோவை மாவட்ட காவல்துறையினர் இணைந்து உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்ஸோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


போலீசார் விசாரணைக்காக உடற்கல்வி ஆசிரியரை திருச்செந்தூர் அழைத்து வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2025 ஆம் ஆண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு நாள்கள்

Tamil Nadu RL List 2025 - RH leave List 2025 - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் 2025 - Restricted Leave Days 2025 (RL / RH List 2025)... 202...