கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Chief Minister's 'Breakfast' program improves memory in over 90% children


 முதலமைச்சரின் காலை உணவு' திட்டத்தால் 90% மேற்பட்ட குழந்தைகளிடம் நினைவாற்றல் அதிகரிப்பு


Chief Minister's 'Breakfast' program improves memory in over 90% children


முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் நினைவாற்றல் அதிகரிப்பு: மாநில திட்டக்குழு ஆய்வறிக்கை வெளியீடு


முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் 90% மேற்பட்ட குழந்தைகளிடம் நினைவாற்றல் அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில திட்டக்குழு, முதல்வர் செயல்படுத்தியுள்ள “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் முதலான சீரிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. இந்த அறிக்கையின் மூலம், முதல்வரின சீரிய திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

காலை உணவுத் திட்டம் முதன்முதலில் – மதுரை மாநகரில் ஆதிமூலம் நகராட்சிப் பள்ளியில் 2022ம் ஆண்டில் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட்டது. அன்றைய நாளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் 1,545 அரசுத் தொடக்கப் பள்ளிகளைச் பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர். இத்திட்டத்திற்கு மக்களிடையே ஏற்பட்ட வரவேற்பினையும், மாணவ மாணவியர் இடையே ஏற்பட்ட எழுச்சியினையும் கருத்தில் கொண்டு 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி கலைஞர் பிறந்த ஊராகிய திருக்குவளை மண்ணில் இத்திட்டம் அனைத்து 30 ஆயிரத்து 992 அரசுத் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு 18 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர்.


அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளும் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், காமராஜர் பிறந்த நாளான 2024ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி முதல் விரிவுபடுத்தப்பட்டது. அதன் மூலம் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழுந்தைகள் கூடுதலாகப் பயன்பெற்றனர்.


அந்நாள் முதல் 34 ஆயிரத்து 987 அரசுத் தொடக்கப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் 20 லட்சத்து 73 ஆயிரத்து 536 குழந்தைகள் நாள்தோறும் காலை உணவைச் சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்திப் படித்து வந்தனர். மாநிலத் திட்டக் குழுவின் மூலம் காலை உணவுத் திட்டம் குறித்து தமிழ்நாடு முழுவதும் நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலுமாக 5,410 குழந்தைகள் கொண்ட 100 பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.


முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினால், பள்ளிகளுக்கு குழந்தைகள் குறித்த நேரத்தில் வருவது அதிகரித்துள்ளது. குழந்தைகளிடம் கற்றல் ஆர்வம், வகுப்பறைக் கவனிப்பு, விளையாட்டில் ஈடுபாடு முதலியவற்றில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் முந்தைய பாடங்களை நினைவுகூரும் திறன் அதிகரித்துள்ளது. குழந்தைகளிடம் கையெழுத்து, வாசித்தல், பேசும் திறன் ஆகியவை மேம்பட்டுள்ளன என்ற விவரங்கள் தெரியவந்துள்ளன.


தாய்மார்கள் தங்கள் வீட்டில் காலை உணவைத் தவிர்த்து வந்த தங்கள் குழந்தைகள் பள்ளிகளில் காலை உணவை விரும்பி உண்பதால் தங்களுடைய கவலை அகன்றதாகத் தெரிவித்துள்ளனர். 



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

21-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...