மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தமிழ்நாடு -
ஃபெங்கள் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
1. குறுகிய காலத்தில் பிரசவ தேதி எதிர்பார்க்கப்படும் தாய்மார்கள் (EDD Mother's) முன்னரே மருத்துவமனையில் தாமதமின்றி அனுமதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
2. தகுந்த மருந்து மாத்திரைகள் பாம்பு கடி விஷமுறிவு ஊசி ASV மற்றும் ப்ளீச்சிங் பவுடர் ஆகிவற்ற இருப்பு வைக்க உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
3. மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ள சுகாதார நிலையங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
4. தகுந்த மருத்துவ நிவாரண முகாம்கள் தேவைப்படின் அமைத்திட உத்தரவிடப்பட்டுள்ளது
5. மேலும் தற்பொழுது நடைபெற்று வரும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை தேவைக்கேற்ப அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
6. அரசின் வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு அவசர மருத்துவ சேவைகளுக்காக எண் 108 தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.