1-12ஆம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்கள் LMS இணைய வழி பயிற்சியை மேற்கொள்ள காலக்கெடு நிர்ணயம் - SCERT இணை இயக்குநரின் செயல்முறைகள்
Timeline Fixing for LMS Online Training for Teachers Teaching Classes 1-12 - Proceedings of SCERT Joint Director
LMS இணைய வழி பயிற்சியை 1-12ஆம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்கள் 10-01-2025க்குள் முடிக்க அறிவுறுத்தல் - SCERT (JD)
Baseline & Endline Assessment - 10.01.2025க்குள் மேற்கொள்ள SCERT இணை இயக்குநர் உத்தரவு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநரின் (பயிற்சி) செயல்முறைகள், சென்னை-06.
நக.எண்:1068093 / எஃப்-4/ 2024, நாள். 16-12-2024.
பொருள்: மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் உள்ளடக்கிய கல்வி பயிற்சியினை 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு Baseline & Endline Assessment மூலமாக மதிப்பீடு செய்து அதனை LMS தளம் வாயிலாக பதிவேற்றம் மேற்கொண்டும் இணையவழியில் பயிற்சியானது மாவட்டங்களில் 14.12.2024 முதல் காணொலி மூலம் வழங்குதல் - பயிற்சி முடிவுற்ற பின்னர் முன்னேற்ற அறிக்கை விவரம் தெரிவிக்க கோருதல் - தொடர்பாக.
பார்வை : 1 தமிழ்நாடு மாநிலத்திட்ட இயக்குநர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் கடித ந.க.எண்.170/ ஆ3/ 1E/ ஒபக/ 2024, நாள்: 03:12.2024.
2. இந்நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.1068093/எஃப்-4/2024 நாள்.05:12.2024.
பார்வையில் காணும் வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளின்படி, 2024 - 2025ஆம் கல்வியாண்டில் சிறப்பு தேவையுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வியின் மூலம் முறையான கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கட்டகம் உருவாக்கப்பட்டும், அதனை மதிப்பீடு செய்தும் (Assessment) உள்ளடக்கிய கல்வி பற்றி ஆசிரியர்கள். அறிந்திடும் வகையில் LMS தளத்தின் மூலம் பதிவேற்றம் மேற்கொள்ளப்பட்டு, இணைய வழி வாயிலாக EMIS தளத்தின் வழியே 14.12.2024 முதல் அனைத்து மாவட்டங்களில் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் காணொலி மூலம் இ- பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேற்படி இக்காணொலிப்பயிற்சியினை ஆசிரியர்கள் 10.01.2025-க்குள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
எனவே, மாநிலம் முழுவதும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கையாளும் அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களுக்கு LMS வழியாக பயிற்சி அளிக்கப்படும் நிலையில், இப்பயிற்சியினை உரிய காலத்தில் மேற்கொள்ள அறிவுறுத்திடுமாறும், இப்பயிற்சி முடிவுற்ற பின்னர் முன்னேற்ற அறிக்கை விவரத்தினை இந்நிறுவன tnscertjd3@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இணை இயக்குநர் (பயிற்சி)
பெறுநர்
1 அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்
2. முதல்வர்கள், அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,