கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Deferred U.G.C. NET exam re-date notification

 ஒத்திவைக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் தேர்வுக்கான மறுதேதி அறிவிப்பு


Deferred U.G.C. NET exam re-date notification


நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வாகவும், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கான தகுதித் தேர்வாகவும், பி.எச்டி. படிப்புக்கான தகுதித் தேர்வாகவும் 'யு.ஜி.சி. நெட்' தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.


இந்த தேர்வானது, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும். அந்த வகையில் டிசம்பர் மாதத்துக்கான யு.ஜி.சி நெட் தேர்வு 2025-ம் ஆண்டு ஜனவரி 3-ந்தேதி தொடங்கி ஜனவரி 16-ந்தேதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, தேர்வு நடைபெற்று வருகிறது.


ஆனால் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால், அதற்கான விடுமுறை நாட்களில் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதினார். அதில், 'யு.ஜி.சி. நெட் தேர்வு மற்றும் பிற தேர்வுகளை ஜனவரி 13-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடத்துவதை தவிர்த்து, வேறு நாட்களில் மாற்றியமைக்க வேண்டும்' என வலியுறுத்தி இருந்தார். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை வைத்தனர்.


இதைத்தொடர்ந்து இன்று (ஜனவரி 15) நடைபெற இருந்த யு.ஜி.சி நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்தது. மேலும் நாளை (ஜனவரி 16) நடைபெறும் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவித்தது. இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் மறுதேதியை தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. அதன்படி இன்று நடைபெற இருந்த 17 பாடங்களுக்கான தேர்வுகள் வருகிற 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Airtel mobile சேவை பாதிப்பு

ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பு Airtel mobile service affected மாநிலம் முழுவதும் ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பு என வாடிக்கையாளர்கள் புகார் ஏர்டெல...