அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு இல்லாததால் சம்பளம் பெறுவதில் சிக்கல் - நாளிதழ் செய்தி
Government aided schools face problem in getting salaries due to lack of allocation of funds - Daily News
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களின் ஜனவரி மாத சம்பள பட்டியலை பதிவேற்றும்போது 'நிதி ஒதுக்கீடு இல்லை' என வருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9000 அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு மாதந்தோறும் சம்பளப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வட்டார கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் கருவூலத்துறைக்கு அனுப்பப்படும்.
அங்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை இணையதளம் IFHRMS Website மூலம் சம்பள பட்டியல் தயார் செய்து பதிவேற்றம் செய்யப்படுகிறது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாதந்தோறும் சம்பள பட்டியல் பள்ளி தாளாளர், செயலாளர் கையெழுத்து பெற்று அந்தந்த வட்டார கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அங்கிருந்து மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகங்களில் சரி பார்க்கப்பட்டு கருவூலத்துறையின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதிக்குள் சம்பள பில்லை பதிவேற்றம் செய்வார்கள்.
சம்பள பட்டியலை பதிவேற்றம் செய்யும் போது 'சம்பள மானியம்' என்ற பகுதியில் உள்ளீடு செய்யும் போது 'நிதி ஒதுக்கீடு இல்லை' என்று தகவல் வருகிறது.
இதனால் ஜனவரி மாத சம்பளம் கிடைக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.