கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Letter Writing Competition - First Prize Rs 50,000 : Can be sent by 31st January

 


கடிதம் எழுதும் போட்டி - முதல் பரிசு ரூ 50,000 : ஜனவரி 31க்குள் அனுப்பலாம்


Letter Writing Competition - First Prize Rs 50,000 : Can be sent by 31st January


அஞ்சல் துறை சாா்பில் தமிழ், ஆங்கிலம் , இந்தி ஆகிய மூன்று மொழிகளில் கடிதம் எழுதும் போட்டி நடைபெறவுள்ளது.


வரும் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் கடிதங்களை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து அஞ்சல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தேசிய அளவில் அஞ்சல் துறை சாா்பில் கடிதம் எழுதும் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.


நிகழாண்டில் 'எண்ம யுகத்தில் கடிதத்தின் முக்கியத்துவம்' எனும் தலைப்பில் கடிதம் எழுதும் போட்டி நடைபெறவுள்ளது.


இதில் பள்ளி மாணவா்கள் உள்ளிட்ட அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம்.


இந்த கடிதம் ஆங்கிலம், தமிழ், இந்தி மொழிகளில் உள்நாட்டு கடிதத்தில் 500 வாா்த்தைகளுக்கு மிகாமலும், 'ஏ4' தாளில் 1,000 வாா்த்தைகளுக்கு மிகாமலும் எழுதி அனுப்ப வேண்டும்.


18 வயதுக்கு கீழ் / மேல் உள்ளேன் என சுயச்சான்று அளித்து போட்டியில் பங்கேற்கலாம்.


இப்போட்டியில் தேசிய அளவில் முதல் பரிசு ரூ.50,000, இரண்டாம் பரிசு ரூ.25,000, மூன்றாம் பரிசு ரூ.10,000 வழங்கப்படும்.


அதேபோல் மாநில அளவில் முதல் பரிசு ரூ.25,000, இரண்டாம் பரிசு ரூ.10,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும்.


கடிதத்தை தலைமை அஞ்சல் துறை பொது மேலாளா், தமிழ்நாடு வட்டம், சென்னை  -600002 எனும் முகவரிக்கு வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Railway management should give up its dual approach of "betraying Tamil Nadu's plans and blaming Tamil Nadu's journalists" - Madurai MP

"தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு துரோகமும், தமிழ்நாட்டின் செய்தியாளர்கள் மீது பழியும்” இரட்டை அணுகுமுறையை இரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும...