தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 31 வரை அவகாசம்
The deadline to apply for the type writing test is January 31
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தொழில்நுட்ப கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தொழில்நுட்ப கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான டி.ஆபிரகாம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தொழில்நுட்ப கல்வித்துறையால் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் ஆகிய வணிகவியல் தேர்வுகள் வரும் பிப்ரவரி மாதம் நடத்தப்பட உள்ளன. இத்தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தில் பிப்ரவரி 2 முதல் 4-ம் தேதி வரை திருத்தம் செய்துகொள்ளலாம். இதற்கு எவ்வித அபராத கட்டணமும் செலுத்த தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.