கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தட்டச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தட்டச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் - பிப்ரவரி 2023 - சுருக்கெழுத்து, கணக்கியல் மற்றும் தட்டச்சு பாடங்களின் தேர்வு முடிவுகள் வெளியீடு - அறிவிக்கை (Government Technical Examinations – February 2023 – Shorthand, Accountancy and Typing Subjects Result Release – Notification)...


>>> அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் - பிப்ரவரி 2023 - சுருக்கெழுத்து, கணக்கியல் மற்றும் தட்டச்சு பாடங்களின் தேர்வு முடிவுகள் வெளியீடு - அறிவிக்கை (Government Technical Examinations – February 2023 – Shorthand, Accountancy and Typing Subjects Result Release – Notification)... 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆன்லைனில் தட்டச்சு பயிற்சி: அரசு உத்தரவு...

 அனைத்து பயிற்சி நிறுவனங்களுக்கும், தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:



கொரோனா பரவலை கட்டுப்படுத்த, இரவு நேர ஊரடங்கும், கல்வி நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, கல்லுாரிகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில், நேரடி வகுப்புகள் நடத்தக்கூடாது. எனவே, தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், நேரடி கற்பித்தல் வகுப்புகளை நடத்தக்கூடாது. 'ஆன்லைன்' வழியில் மட்டுமே, வகுப்புகளை நடத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு மார்ச் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் -தொழில்நுட்ப கல்வி இயக்ககம்...



 தமிழகத்தில் தட்டச்சு (Type Writing), சுருக்கெழுத்து (Short Hand) தேர்வுகளுக்கு மார்ச் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் -தொழில்நுட்ப கல்வி இயக்ககம்...

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கு மார்ச் 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரும் தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான கே.விவேகானந்தன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டுக்கான தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பப் படிவத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


விண்ணப்பக் கட்டணம் ரூ.20.  தேர்வுக் கட்டணம் ஜுனியர் தேர்வுக்கு ரூ.65, சீனியர் தேர்வுக்கு ரூ.85. இண்டர் தேர்வுக்கு ரூ.80, ஹைஸ்பீடு தேர்வுக்கு ரூ.130.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய கட்டணத்துக்கான செலான் மற்றும் இதர ஆவணங்களுடன் மார்ச் 26-ஆம் தேதிக்குள் நேரில் அல்லது தபால் மூலம் 

தலைவர்,
தேர்வு வாரியம், 
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், 
கிண்டி, சென்னை

என்ற முகவரியில்  சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் 30 வரை அபராதக் கட்டணம் ரூ.5 செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 044-22351018, 22351014 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...