பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-02-2025 - School Morning Prayer Activities
திருக்குறள்:
பால்: பொருட்பால்
அதிகாரம்:பெருமை
குறள் எண் :975.
Pride goes before a fall.
இரண்டொழுக்க பண்புகள் :
* வெயில் காலத்தில் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்ப்பேன்.
*மோர், இளநீர், கம்பு, கேழ்வரகு கூழ் போன்ற இயற்கை குளிர்பானங்கள் குடித்து வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பேன்.
பொன்மொழி :
வேரை வெட்டுகிறவன் அந்த மரத்திற்கு எத்தனை கிளைகள் என்று பார்த்து வெட்ட வேண்டும்.
---திரு. ஹென்றி டேவிட் தேரோ
பொது அறிவு :
1. நறுமணப் பொருளாக பயன்படக்கூடிய பூ மொட்டு எது?
விடை: கிராம்பு.
2. மல்லிகைப்பூவுக்கு பெயர் பெற்ற ஊர் எது?
விடை: மதுரை
English words & meanings :
Farm - பண்ணை
Flyover - மேம்பாலம்
வேளாண்மையும் வாழ்வும் :
அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப் பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.
பிப்ரவரி 24
ஸ்டீவ் ஜொப்ஸ் அவர்களின் பிறந்தநாள்
ஸ்டீவ் ஜொப்ஸ் (தமிழக வழக்கு: ஸ்டீவ் ஜாப்ஸ்) (Steve Jobs, பிறப்பு பெப்ரவரி 24, 1955- அக்டோபர் 5, 2011) ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார்.
ஸ்டீவ் ஜொப்ஸ், 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். இவர் பிக்ஃசார் அசைபட நிறுவனத்தின் (Pixar Animation Studios) தலைமை ஆட்சியராகவும், வால்ட் டிசினி (Walt Disney) போன்ற பல நிறுவனங்களின் ஆட்சிப் பேராய இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். ஆகத்து 24, 2011 அன்று உடல்நிலை காரணமாக தலைவர் பதவியிலிருந்து விலகினார். இவரையடுத்து டிம் குக் பொறுப்பேற்றார்.2011 ஆம் ஆண்டு அக்டோபர் 06 ஆம் திங்கள் அதிகாலை அவர் உயிரிழந்தார்.
யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.
ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.
யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.
அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.
அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.
அதற்கு அந்த யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:
"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன்.பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன்.இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."
நீதி: தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
இன்றைய செய்திகள்
24.02.2025
* தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது.
* தமிழகத்தில் வரும் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* உலகின் மிகப் பெரிய அரசாங்க சுகாதார காப்பீட்டு திட்டமாக ஆயுஷ்மான் பாரத் திட்டம் விளங்குகிறது என்றும், இத்திட்டத்தின் அடையாள அட்டையை 75 கோடி பேர் பெற்றுள்ளனர் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
* இந்திய தேர்தலுக்கு உதவுவதற்காக முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் 18 மில்லியன் டாலர் வழங்கியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
* உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: மனு பாக்கர் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு.
* புரோ ஹாக்கி லீக்: அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா 4-வது வெற்றி.
Today's Headlines
* The Tamil Nadu government has begun the counseling of doctors to select 2,642 doctors tobe appointed in Tamilnadu government hospitals.
* The Chennai Meteorological Centre has announced that there is a possibility of rain in one or two places in Tamil Nadu from February 25 to 28.
* The Ayushman Bharat Yojana is the world's largest government-run health insurance program, and 75 crore people have received its identity cards, according to External Affairs Minister S. Jaishankar.
* Former US President Donald Trump has again alleged that the previous president Joe Biden's administration provided $18 million to aid Indian elections.
* The Indian team, led by Manu Bhaker, has been announced for the World Cup shooting competition.
* In the Pro Hockey League, India defeated Ireland to achieve their fourth victory.
Covai women ICT_போதிமரம்