கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Government school teacher arrested in POCSO for sexually harassing female students

 

மாணவிகளிடம் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட அரசுப்பள்ளி கணித ஆசிரியர் கைது


Government school mathematics teacher arrested in POCSO for sexually harassing female students


வகுப்பறையில் ஒழுங்கீன செயல் -  கணித ஆசிரியர் மீது வழக்குப்பதிவு


வகுப்பறையில் ஒழுங்கீன செயல்


திருப்பூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் முன் ஒழுங்கீனமாக செயல்பட்ட கணித ஆசிரியர் சுந்தரவடிவேலு மீது மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு


அரசுப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.


திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் கணித ஆசிரியர் சுந்தர வடிவேலு என்பவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.


மேலும் மாணவர்களை செல்போனில் புகைப்படம் எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வகுப்பு மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இது குறித்து பெற்றோரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளியில் புகார் தெரிவித்தனர். இதற்கிடையில் திருப்பூர் தெற்கு போலீசாரும் விசாரணையைத் தொடங்கினார்கள்.


மேலும், 7-ம் வகுப்பு கணித ஆசிரியர் சுந்தரவடிவேலு என்பவர் சில மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக சைல்டு ஹெல்ப்லைன் எண் 1098-க்கு புகார் சென்றது.


இதையடுத்து, பள்ளி கல்வி துறையினர், மாவட்ட குழந்தைகள் நலக்குழு அலுவலர் ரியாஸ் அகமது பாட்ஷா, மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் ஆறுச்சாமி, திருப்பூர் தெற்கு போலீஸார் ஆகியோர் நேற்று மதியம் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். இதில் பெற்றோர் மற்றும் புகார் அளித்த வகுப்பு மாணவிகளிடம் தனித்தனியாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.


இதையடுத்து, செய்தியாளர்களிடம் மாவட்ட குழந்தைகள் நலக்குழு அலுவலர் ரியாஸ் அகமது பாட்ஷா கூறும் போது, “7-ம் வகுப்பு ஆசிரியர் ஒருவர், குழந்தைகளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக புகார் வந்தது. இது தொடர்பாக அனைவரிடமும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு, எழுத்துப்பூர்வமாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. இவை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார். இதனையடுத்து கணித ஆசிரியர் சுந்தரவடிவேலு மீது மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


அதிகாரிகள் தேடியபோது ஆசிரியரான சுந்தர வடிவேலு தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்றது உறுதி செய்யப்படவே, அவரை தேடிச் சென்ற அதிகாரிகள் அங்கு அவரை அதிரடியாக கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர். அவரிடம் தொடர்ந்து வீரபாண்டி காவல்நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுந்தர வடிவேலுவை போலீசார் கைது செய்துள்ளனர்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...