எங்கள் கொள்கையை யாரோ ஒருவர் நலனுக்காக ஏன் விடவேண்டும்? - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Why should we sacrifice our policy for someone else's benefit? - Minister Palanivel Thiagarajan
உத்திரப் பிரதேசம், பீகாரில் எத்தனை குழந்தைகளுக்கு மும்மொழிகள் தெரியும். அங்கெல்லாம் எத்தனை குழந்தைகளுக்கு இரு மொழிகள் நன்கு தெரியும்.
கல்வித்துறையில் இருமொழிக் கொள்கையால் தமிழ்நாடு அடைந்த வெற்றியை விட, அதிக வெற்றியை மும்மொழி கொள்கையால் பெற்ற ஒரு மாநிலத்தை குறிப்பிடுங்கள்.
நாங்கள் ஏன் எங்கள் கொள்கையை யாரோ ஒருவரின் நலனுக்காக கைவிட வேண்டும் என எடுத்துரையுங்கள் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
இந்தி மொழியை ஒருவர் ஏன் படிக்க வேண்டும். மும்மொழிக் கொள்கையால் உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்கள் என்ன வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. குறைந்தபட்சம் இரு மொழிக் கொள்கையையாவது அவர்கள் கடைபிடிக்கிறார்களா?. மும்மொழிக் கொள்கையை பின்பற்றி தமிழ்நாட்டின் கல்வியை விட சாதித்திருக்கிறோம் என ஒரே ஒரு எடுத்துக்காட்டை, ஒரு மாநிலத்தை எடுத்துக்காட்டாக கூறுங்கள். நாங்கள் அதன்பிறகு மும்மொழிக் கொள்கையை பற்றி சிந்திக்கிறோம். இரு மொழிக் கொள்கையை பின்பற்றும் தமிழ்நாடு கல்வி உள்ளிட்ட எல்லா துறைகளிலும் முன்னணியில் இருக்கும்போது, எங்கள் மீது ஏன் தேவையில்லாமல் மும்மொழிக் கொள்கையை திணிக்கிறீர்கள்.
மூன்று மொழிகளுக்கு பதிலாக அறிவியல் துறையில் இப்போது வந்திருக்கும் புதிய தொழில்நுட்பங்கள் சார்ந்த படிப்புகளை அறிமுகம் செய்யுங்கள். செயற்கை நுண்ணறிவு அபாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனைப் பற்றி பள்ளிக் கல்வியில் சேர்க்கலாமே. இது தான் மாணவர்களின் வளர்ச்சியில்செலுத்தும் உண்மையான அக்கறையாக இருக்க முடியும். இதைத் தவிர்த்து எந்தவொரு முன் எடுத்துக்காட்டும் இல்லாமல், சிறப்பாக செயல்படும் தமிழ்நாட்டை மத்திய அரசு நிதி உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து வஞ்சிப்பது எந்த வகையில் நியாயம்?" என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்