கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பழைய ஓய்வூதிய திட்டம் - கருத்துகள் தவறாக திரிப்பு- தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (Old Pension Scheme - Misconceptions - TamilNadu Finance Minister Palanivel Thiyagarajan)...
பழைய ஓய்வூதிய திட்டம் - கருத்துகள் தவறாக திரிப்பு- தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (Old Pension Scheme - Misconceptions - TamilNadu Finance Minister Palanivel Thiyagarajan)...
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது - நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் (It is impossible to implement the Old Pension Scheme for Government Employees - Finance Minister P.T.R. Palanivel Thiagarajan)...
அகவிலைப்படி(Dearness Allowance) குறித்த கேள்விக்கு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் பதில்...
சட்டமன்ற அவையில் பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி அவர்கள் எழுப்பிய பள்ளிக்கல்வித்துறை சார்ந்த கேள்விகள் - மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் கூறிய நிதி சார்ந்த, அகவிலைப்படி சார்ந்த பதிலுரைகள்...
>>> அகவிலைப்படி குறித்த கேள்விக்கு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் பதில்(காணொளி)...
பழைய ஓய்வூதியத்துக்கு வாய்ப்பு இல்லை : சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்...
பழைய ஓய்வூதியத்துக்கு வாய்ப்பு இல்லை : சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்...
எல்லோருக்கும் எல்லாவற்றையும் இலவசமாக வழங்கினால் அரசு திவாலாகிவிடும். மாநிலத்தின் நிதி சூழ்நிலை இக்கட்டான நிலையில் இருப்பதால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முடிவு எடுக்க முடியவில்லை என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில், 2021-22 நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம்கடந்த 16ஆம் தேதி தொடங்கி நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, விவாதத்துக்கு பதில் அளித்து, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:
திராவிட இயக்க கொள்கைகளை பின்பற்றி, முதல்வர், ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்று கூறியுள்ளார். அதை கொஞ்சம் திருத்திக் கூற விரும்புகிறேன். சமூக, பொருளாதார நீதிக்கு ஏற்ப. எல்லோருக்கும் எல்லாவற்றையும் இலவசமாக வழங்க முடியாது. அப்படி செய்தால் அரசு திவாலாகிவிடும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற ஆட்சி, இந்த கொள்கையில் இருந்து விலகி, யாரெல்லாம் எதையெல்லாம் கைப்பற்ற முடியுமோ அதை எல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள் என்ற அடிப்படையில் நடந்துள்ளது. இது எங்கள் கருத்துக்கு விரோதமானது. இதை மாற்றியே ஆக வேண்டும்.
இன்றைய சூழலில், மாநிலத்துக்கான பல அதிகாரங்கள், மாநிலங்களிடம் இல்லை. எனவே, நம்மிடம் இருக்கும் அதிகாரத்தைக் கொண்டு சிறப்பான நிர்வாகத்தை கட்டமைக்க வேண்டும்.
5 திருத்தங்கள் அவசியம்
இதற்காக, 5 திருத்தங்களை சுட்டிக்காட்டியுள்ளோம். தகவல் அடிப்படையில் நிர்வாகம் என்பது முதலாவது. ஆக.13-ல் பேரவையில் பெட்ரோல் குறைப்பு அறிவிக்கப்பட்டது. உடனடியாக தகவல் திரட்ட தொடங்கினோம். இந்த தகவல்கள் மத்திய அரசிடம் உள்ளன.
பெட்ரோல் விற்பனையைப் பொருத்தவரை, ஆக.1 முதல் 13 வரை 91 லட்சம்லிட்டர் விற்பனையான நிலையில்,வரியை குறைத்த பிறகு 14 முதல் 16-ம்தேதி வரை 1.03 கோடி லிட்டர் விற்பனைஆனது. மக்கள் அதிக அளவில் பெட்ரோலை பயன்படுத்தியதால் விற்பனைஅதிகரித்துள்ளது. இந்த அளவுக்கு தகவல் இருந்தால் அரசை சிறப்பாக நடத்த முடியும்.
இரண்டாவது மத்திய - மாநில அரசு உறவு. இதை பயன்படுத்தி, மத்திய அரசிடம் இருந்து முதல்வர் மூலம், தரவு சேமிப்பை செய்யப் போகிறாம். அதாவது, வருமான வரி, பெட்ரோல் டீசல் பயன்பாடு, விற்பனை, தடுப்பூசி போடப்பட்ட விவரம் இவற்றைகேட்டுப் பெற சட்டம், விதிமுறைகள்உருவாக்கி முயற்சி எடுக்கப் போகிறோம். மக்களின் நலன், நிலம், பணத்தைபாதுகாப்பது, இடர் மேலாண்மை என்பது அடுத்த முக்கிய அம்சம். மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் மொழிபெயர்த்து, திட்டத்தின் தன்மை, பயன்களை மக்களிடம் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இது சீர்திருத்தத்தின் முதல்கட்டம் ஆகும். இன்னும் பல நடவடிக்கைகள் வர உள்ளன. ஆண்டு பொருளாதாரக் கணக்கெடுப்பு கடந்த 10 ஆண்டுகளாக பட்ஜெட்டுக்கு முன்னால் வெளியிடப்படவில்லை. இது அடுத்த ஆண்டு முதல் வெளியிடப்படும்.
110 விதியின் கீழ் அறிவிப்பு விவரம்
கடந்த 10 ஆண்டுகளில் 110 விதியின்கீழ் எத்தனை அறிவிப்புகள் வந்தன. எவை செயல்படுத்தப்பட்டன. கைவிடப்பட்டவை, நிதி பெற்ற விவரம், பட்ஜெட்டுக்கு உட்படாத நிதி எங்கிருந்து வந்தது,திட்டமிடப்படாத அறிவிப்புகள் அரசை எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்துஆய்வு செய்து, இந்த கூட்டத் தொடரிலேயே அவையில் சமர்ப்பிக்கப்படும்.
இன்னும் பல துறைகளில் பல காரணங்களுக்காக பல ஆய்வுகள் நடக்கஉள்ளன. இதை பழிவாங்கும் நடவடிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
நாம் இக்கட்டான சூழலில் உள்ளோம். அனைவருடைய ஒத்துழைப்புடன்தான் முன்னேற முடியும். அரசின் நிதிச்சூழலை மேம்படுத்தாமல், இன்று இருக்கும் அளவைவிட சிறப்பாக குடிநீர்,சாலை, மருத்துவமனை, வீடுகள் ஆகியவற்றை கட்டித் தர முடியாது. எனவே,இன்று உள்ள சூழலை திருத்தியே ஆக வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய், மத்திய அரசின் நிதி என ரூ.4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் எல்லா அரசுகளும் வேறு வழியின்றி, சில செலவுகளை ஒத்திவைக்கின்றன.
ஊதியக் குழு பரிந்துரைகள் தள்ளி அமல்படுத்தப்பட்டன, அகவிலைப்படி உயர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. நிதி இல்லாதபோது, திறமை இருந்தாலும் சமாளிக்க முடியாது. தேவைஉள்ள நேரத்தில் வரியை அதிகரிக்காவிட்டால், அரசை நடத்த முடியாது. முன்பு, மதிய உணவு திட்டத்தை செயல்படுத்த வணிக வரி உயர்த்தப்பட்டது.
மிக கடினமான சில பிரச்சினைகளை ஒத்திவைத்துக் கொண்டே வருகிறோம்.பழைய ஓய்வூதியத் திட்டம் கடந்த 18 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அதுபற்றி முடிவெடுக்காமல் 3, 4 முறைஅரசுகள் ஆட்சிக்கு வந்து சென்றுவிட்டன. நிதி சூழ்நிலை இக்கட்டான நிலையில் இருப்பதால், அதற்கானமுடிவை எடுக்க முடியவில்லை.
சில செலவுகள் பண வீக்கத்துக்கு ஏற்ப அதிகரிக்கப்படுகிறது. பொருட்கள் விலை அதிகரிப்பால் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. அகவிலைப்படி உயர்வின்போது, ஓய்வூதியம் அதிகரிக்கப்படுகிறது. ஆனால், விதவைகளுக்கான உதவித்தொகை அதிகரிக்கப்படுவது இல்லை. வரி உயர்த்தப்படுவது இல்லை. இதை மாற்றியாக வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் தனது பதில் உரையில் தெரிவித்தார்.
மாணவர்களை ஊக்குவிக்க ரூ.200 கோடியில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்...
மாணவர்களை ஊக்குவிக்க ரூ.200 கோடியில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஒன்றை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் திடீரென பள்ளிக்கு செல்வதால் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
மாலை நேரத்தில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
USA - Wildfires in California & Los Angeles - Hundreds of homes in ashes
அமெரிக்கா - கலிபோர்னியா & லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ - சாம்பலான நூற்றுக்கணக்கான வீடுகள் - காணொளி USA - Wildfires in California & Lo...