கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 15,672 மாணவர்கள் சேர்க்கை



 சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 15,672 மாணவர்கள் சேர்க்கை


சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த 2 மாதங்களில் 15,672 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.


சென்னை மாநகராட்சி கல்வி துறையின் கீழ், 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலை, 46 உயர்நிலை, 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் இயங்கி வருகின்றன.


இந்த பள்ளிகளில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.


சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் 15,672 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.


இதுதொடர்பாக மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சிப் பள்ளிகளில் ஆண்டுதோறும் 1.12 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் மார்ச் மாதத்துக்குப் பிறகு மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த ஆண்டு மே 23-ம் தேதிக்குள் 15,672 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மழலையர் வகுப்புகளில் மட்டும் 8 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 2 மாதங்களில் இவ்வளவு மாணவர்கள் சேர்ந்துள்ளது இதுவே முதல்முறை. விஜயதசமி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும்.


இந்த ஆண்டு 33 ஆயிரம் மாணவர்களைச் சேர்க்க ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். இதற்காக மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான சலுகைகள் குறித்தும், கல்வி தரம் மேம்பட்டிருப்பது குறித்தும், 45 ஆட்டோக்கள் வாயிலாக பொதுமக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


மழலையர் வகுப்புகளில் காற்றோட்டமான வகுப்பறைகள், பச்சை வண்ணப் பலகைகள், ஸ்மார்ட் போர்டு, விளையாட்டுடன் கல்வியில் ஆர்வத்தைத் தூண்டும் வண்ணமயமான புத்தகங்கள் உள்ளிட்டவை உள்ளன. புத்தகப் பைகள், காலணிகள், அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. பள்ளி சீருடைகள், எழுது பொருட்கள், பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், காலை சிற்றுண்டி, பள்ளிக்கு 100 சதவீதம் வருகை தந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, மாலை சிற்றுண்டியுடன், மாலைநேர சிறப்பு வகுப்புகள் உள்ளிட்டவை ஏற்படுத்தி தரப்படுகிறது.


மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், கல்வித் தரத்தை மேம்படுத்தவும், விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. போட்டித் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களை கல்வி சுற்றுலாவுக்கும் அழைத்து செல்கிறோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.3.1 - Updated on 18-07-2025

தற்போது TNSED Schools  App-ல் Break Fast & Noon Meal பதிவு செய்வதற்கான  புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: 0.3...