விவசாயிகளின் கவனத்திற்கு : பட்டா மாறுதல் மேல் முறையீடு குறித்த தகவல்
வருவாய் துறையில் பட்டா மாறுதலுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு சிலருக்கு சில காரணங்களுக்காக பட்டா வழங்க மனதளவில் விருப்பம் இல்லாமல் அதிகாரிகள் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி நீக்கம் செய்கிறார்கள். சில அதிகாரிகள் மிகவும் சாதுருத்தியமாக கடைசி பெயரை நீக்கம் செய்து மீண்டும் அதே பெயரை வைத்து பட்டா வழங்கி விண்ணப்பதாரருக்கு உங்கள் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது எனவும் பட்டா வழங்கப்பட்டது எனவும் குறுஞ்செய்தி வரும் ஆனால் விண்ணப்பதாரர் பெயர் பட்டாவில் இருக்காது. அல்லது நமக்கு முழுமையாக விற்றவர் பெயர் நீக்கப்பட்டு இருக்காது எனவே இது போன்ற குறைபாடுகள் இருப்பவர்கள் இதற்கு அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் மண்டல துணை வட்டாட்சியரால் பட்டா வழங்க மறுக்கும் பட்சத்தில் அல்லது தவறாக வழங்கும் பட்சத்தில் அதற்கு எதிராக நாம் மேல்முறையீடு செய்ய வேண்டும் யாரிடம் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றால் வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்ய வேண்டும் அதற்கு மண்டல துணை வட்டாட்சியர் அவர்களால் தள்ளுபடி செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் இணைத்து பதிவு தபாலில் அனுப்பி மேல்முறையீடு செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.