கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Patta லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Patta லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆன்லைன் பட்டா விண்ணப்பம் - உயர்நீதிமன்றம் உத்தரவு



 ஆன்லைன் பட்டா விண்ணப்பம் - உயர்நீதிமன்றம் உத்தரவு


பட்டா கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நபர்களை நேரில் அழைத்து விசாரிக்காமல் கோரிக்கையை நிராகரிக்க கூடாது - நீதிபதி


ஆவணங்களை பரிசீலிக்காமல் கோரிக்கையை நிராகரிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு


உத்தரவு நகலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்ப உயர்நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி உத்தரவு


Online Patta Transfer Service - Stopped till 31.12.2024 - TN Government Press Release


 இணையவழி பட்டா மாறுதல் சேவை - 31.12.2024 வரை தற்காலிகமாக நிறுத்திவைப்பு - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு



Online Patta Exchange Service - Temporarily Suspended till 31.12.2024 - Tamil Nadu Government Press Release



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Online Patta change service - Report of the Director of Land Surveys and Topography


இணையவழி பட்டா மாறுதல் சேவை தொடர்பாக நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநரின் அறிக்கை - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1896, நாள் : 09-11-2024


Report of the Director of Land Surveys and Topography in relation to the online patta change service - Tamilnadu Government Press Release No.  1896, Dated : 09-11-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தானியங்கி பட்டா மாறுதல் - வருவாய் துறை அறிவுறுத்தல்...



தானியங்கி பட்டா மாறுதல் - வருவாய் துறை அறிவுறுத்தல்...


தானியங்கி முறை பட்டா மாறுதல் பணிக்காக, பத்திரப்பதிவின்போது, 


சரியான மொபைல் போன் எண்ணை அளிக்க வேண்டும்' என, வருவாய் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


தானியங்கி பட்டா மாறுதல் திட்டத்தில், ஒரு சர்வே எண்ணுக்கு உட்பட்ட முழு சொத்தும் கைமாறும் போது, அதற்கான பத்திரப்பதிவு அடிப்படையில், பட்டா மாறுதல் செய்யப்படும்.




*தானியங்கி முறை*


பெரும்பாலான சார் - பதிவாளர் அலுவலகங்களில், இதற்கான நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. 


இதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.


இதற்கிடையில், 2024 ஜூன் 15 முதல் தானியங்கி பட்டா மாறுதல் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த, பதிவுத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 


இதற்காக சார் - பதிவாளர்கள், ஆவண எழுத்தர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


தானியங்கி முறை பட்டா மாறுதல் திட்டத்தில், பெரும்பாலான விண்ணப்பங்கள் பாதியில் முடங்குகின்றன.


இந்த விண்ணப்பங்களில், சொத்து வாங்குவோர் தங்களது சரியான மொபைல் போன் எண்ணை கொடுக்காமல் இருப்பதே, விண்ணப்பங்கள் முடங்க காரணம் என, தெரியவந்துள்ளது.


'ஆன்லைன்' முறையில் பத்திரப்பதிவுக்கு விபரங்களை உள்ளீடு செய்யும் போது, சொத்து வாங்குவோரின் உண்மையான மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய வேண்டியது அவசியம்.


எனவே, பத்திரப்பதிவு பணியின் போது, மொபைல் போன் எண் விபரத்தை சரியாக பதிவிடுவதை, சார் - பதிவாளர்கள், ஆவண எழுத்தர்கள் உறுதி செய்ய வேண்டும். 


பொது மக்களும் இதில் பொறுப்புடன் நடக்க வேண்டும்.


அப்போது தான் பட்டா மாறுதல் தொடர்பாக, எஸ்.எம்.எஸ்., தகவல்களை பெற முடியும். 


இதன் அடிப்படையிலேயே தொடர் நடவடிக்கைகள் எடுக்க முடியும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.3.1 - Updated on 18-07-2025

தற்போது TNSED Schools  App-ல் Break Fast & Noon Meal பதிவு செய்வதற்கான  புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: 0.3...