பள்ளி மேலாண்மைக் குழுவின் (SMC) முக்கிய நகர்வுகள்
2022 – 2024 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தற்போதைய நிலை, மேம்படுத்தப்பட்ட புதிய பெற்றோர் செயலியின் சிறப்பு அம்சங்கள் மற்றும் புதிய செயலியில் தீர்மானங்களை பதிவிடுவதற்கான வழிகாட்டுதல்கள்:
குழந்தைகளின் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (2009) கீழ் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டு கூட்டமானது மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு 2022 – 24 ஆம் ஆண்டு சிறப்பாக நடைபெற்றது. பள்ளி மேம்பாடு சார்ந்து நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் TNSED Parent App வழியாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. பள்ளி மேலாண்மைக் குழுத் தீர்மானங்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள பெற்றோர் செயலி முக்கியப் பங்காற்றுகிறது.
பள்ளி மேலாண்மைக் குழுவின் தீர்மானங்களை பதிவு செய்யும் பெற்றோர் செயலியின் பயன்பாடு மற்றும் உள்ளீடு செய்வது குறித்து, பள்ளி மேலாண்மைக் குழு மாநில ஒருங்கிணைப்புக் குழுவால் மாவட்டம் , வட்டாரம் மற்றும் பள்ளி அளவில் பயிற்சிகள் கொடுக்கப்பட்டது.
பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கிய நகர்வுகள்:
• 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற SMC மறுகட்டமைப்புக்கான பெற்றோர் விழிப்புணர்வு கூட்டங்களில் 23.2 லட்சம் பெற்றோர் பங்கேற்றனர்.
• மொத்தம் 37,519 அரசுப் பள்ளிகளில் SMC குழுக்கள் மறுக்கட்டமைக்கப்பட்டன.
• ஆகஸ்ட் 2022 முதல் அக்டோபர் 2024 வரை மொத்தம் 19 முறை SMC கூட்டங்கள் நடைபெற்றன. இந்த கூட்டங்களில் சராசரியாக 70% உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
• 35,735 பள்ளிகள், SMC பெற்றோர் செயலியின் மூலம் தீர்மானங்களைப் பதிவு செய்துள்ளனர்
• பள்ளிகளில் இருந்து 2022- ஆம் ஆண்டிலிருந்து இருந்து செயலி வழியாக நமக்குக் கிடைத்த தீர்மானங்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் மேல் ஆகும்.
• பதிவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது சார்ந்து துறைகள் நடவடிக்கை எடுப்பதற்காக கல்வித்துறைச் செயலரிடமிருந்து மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டது
• தீர்மானங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து முறையாக தகவல் பெறப்பட்டது.
• இதனைத் தொடர்ந்து, தீர்மானங்கள் மீதான நடவடிக்கைளை கண்காணிக்க , மாநில அளவிலான கண்காணிப்பு குழு (SLMC) மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு (DLMC) போன்ற குழுக்கள் அமைக்கப்பட்டது .அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது
• மேலும், மாவட்ட கல்வி மீளாய்வு(DER) கூட்டங்களில், பள்ளி மேலாண்மை குழுவின் தீர்மானங்கள் ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியரால் துறைவாரியாக ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. பள்ளியின் தேவைகள் அனைத்தும் மாவட்ட கல்வி மீளாய்வு கூட்டங்களில் விவாதிக்கப்படுகிறது.
• 2024-2026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக்கான பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் ஆகஸ்ட் 2, 2024 அன்று தொடங்கி , ஆகஸ்ட் 31, 2024 வரை அனைத்து பள்ளிகளில் மறுகட்டமைப்பு நிறைவடைந்தது. இதில் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 18.9 லட்சம் பெற்றோர் பங்கேற்றனர்
• புதிய பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கபட்ட பின்னர் , 2024 அக்டோபர் மாதம், இது வரை பதிவு செய்யப்பட்டிருந்த 3 லட்சம் தீர்மானங்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அதன் முன்னேற்றத்தையும் மற்றும் பள்ளியின் அன்றைய தேவைகளையும் அனைத்து பள்ளி மேலாண்மைக் குழுக்களும் TNSED பெற்றோர் செயலியில் பதிவேற்றம்(status update) செய்தனர்.
• தீர்மானங்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதன் முன்னேற்ற நிலையை (Status Update) TNSED பெற்றோர் செயலியில் பதிவு செய்யும் செயல்பாட்டுக்கு பின்பு 1,92,543 (24.06.2025 இந்த தேதி வரை ) தீர்மானங்கள் நமக்கு கிடைத்தன. இந்தத் தீர்மானங்களில் 1,50,421 தீர்வுகள் காணப்பட்டுள்ளன. இது மொத்தத் தீர்மானங்களில் 78% ஆகும்.
• தீர்மானங்கள் / தேவைகள் மூன்று நிலைகளில் பிரிக்கப்படுகின்றன: பள்ளி அளவில் தீர்வு காணப்பட வேண்டியவை, மாவட்ட அளவில் தீர்வு காணப்பட வேண்டியவை, மாநில அளவில் தீர்வு காணப்பட வேண்டியவை என்று பிரிக்கப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டன.
•
நிலை தீர்மானங்களின் எண்ணிக்கை சதவீதம்
Resolved 150421 78%
Unresolved 42122 22%
தீர்மானங்களின் எண்ணிக்கை சதவீதம்
பள்ளி அளவில் 60,754 91%
மாவட்ட அளவில் 88,694 71%
மாநில அளவில் 973 71%
அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மூலம் 71% தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் உதாரணத்திற்கு வேலை செய்து முடிக்கபட்ட/ தீர்வு கண்டு நிறைவு செய்யப்பட்ட சில முக்கியமான தீர்மானங்களின் தொகுப்பு இது
முக்கியமான தீர்மானங்களின் தொகுப்பு நிறைவு
உயர் மின்னழுத்தக் கம்பிகளை அகற்றுதல் 562
பழுதடைந்த கட்டடத்தை அகற்றுதல் 3269
பழுதடைந்த சுற்றுச்சுவரை அகற்றுதல் 185
புதிய இயற்பியல் ஆய்வகம் 14
புதிய உயர்-தொழிநுட்ப ஆய்வகம் 125
புதிய உயிரியல் ஆய்வகம் 14
புதிய ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகம் 39
புதிய கணித ஆய்வகம் 14
புதிய கணினி ஆய்வகம் 121
புதிய கலை ஆய்வகம் 16
புதிய கழிப்பறை 143
புதிய கழிவுநீர்த் தேக்கத் தொட்டி 237
புதிய குடிநீர் இணைப்பு 55
புதிய குடிநீர் இணைப்பு - ஊராட்சி 594
புதிய குடிநீர் இணைப்பு - போர்வெல் 197
புதிய சுற்றுச் சுவர் 2675
புதிய நீர் இணைப்பு 196
புதிய நீர் இணைப்பு - ஊராட்சி 1074
புதிய நீர் இணைப்பு - போர்வெல் 572
புதிய மின் இணைப்பு 120
புதிய மின்சார இணைப்பு 612
புதிய வகுப்பறை 1603
புதிய வேதியியல் ஆய்வகம் 12
போக்குவரத்து வசதிகளை உருவாக்குதல் 294
மாணவர்களுக்கான புதிய கழிப்பறை 2009
மாணவிகளுக்கான புதிய கழிப்பறை 1416
மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்கான புதிய கழிப்பறை 109
மாற்றுத் திறன் கொண்ட மாணவிகளுக்கான புதிய கழிப்பறை 46
மொத்தம் 16323
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.