பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ₹2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக் கரங்கள்” திட்டம் - முதலமைச்சர் நாளை (15.09.2025) தொடங்கி வைக்கிறார் - தேர்வு செய்யப்பட்டுள்ள குழந்தைகள் பட்டியல்
பெற்றோரை இழந்த குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ₹2,000 உதவித்தொகை வழங்கிடும் “Anbu Karangal” Scheme - முதலமைச்சர் நாளை (15.09.2025) தொடங்கி வைக்கிறார்
அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வணக்கம்
முதன்மைக் கல்வி அலுவலக செய்தி
நாளை 15/09/2025 திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வாட்ஸ் அப் குரூப்பில் பகிரப்பட்டுள்ள தாய் தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு அன்பு கரங்கள் திட்டத்தின் மூலம் மாதம் தோறும் ரூபாய் 2000 வழங்கும் திட்டத்தை தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் துவங்கி வைக்க உள்ளதால் தங்கள் வட்டாரங்களின் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு மாணவர்களை பாதுகாப்பாக பள்ளி ஆசிரியர் மற்றும் பாதுகாவலர் துணைக் கொண்டு அழைத்து வந்து கலந்து கொள்ள அறிவுறுத்த அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நன்றி
முதன்மைக் கல்வி அலுவலர் , தஞ்சாவூர்
>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
>>> தேர்வு செய்யப்பட்டுள்ள குழந்தைகள் பட்டியல் - குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் கடிதம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.