கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

UDISE+ - மாணவர்கள் Aadhaar Biometric Updation (MBU) தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் தகவல்

 

UDISE+  - மாணவர்கள் Aadhaar Biometric Updation (MBU) தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் தகவல்


அனைத்து வகையான பள்ளி தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள்,மாவட்டக் கல்வி அலுவலர்கள்,அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள்,வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ) மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு


* UDISE+  - மாணவர்கள் Aadhaar Biometric Updation (MBU) –Reg.


UDISE+ இணையதளத்தின் School Login பகுதியில் தற்போது வகுப்பு வாரியாக Aadhaar Biometric Updation (MBU) விவரங்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளன.


இதில்,


* MBU Updation முடித்த மாணவர்களுக்கு Not Required என்று காட்டப்பட்டுள்ளது.


* MBU Updation செய்யாத மாணவர்களுக்கு MBU pending (Age 5-7) / MBU pending (Age 15-17) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


* Verification Failed ஆகிய மாணவர்களுக்கு Aadhaar / Name / Gender / DOB mismatch எனத் தவறுகளின் காரணம் அருகில் காட்டப்பட்டுள்ளது.


மேற்கண்ட தகவல்களை பயன்படுத்தி MBU Pending எனக் காட்டப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களை அவர்களின் பெற்றோர்களுக்கு உடனடியாகத் தகவல் வழங்கி, விரைவாக Aadhaar Biometric Updation செய்து முடிக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மாணவர்கள் Aadhaar Biometric Updation செய்யும் வசதி தபால் அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட Aadhaar பதிவு மையங்கள் (Aadhaar Enrolment/Update Centres) மூலமாக கிடைக்கின்றது.


அனைத்து வகையான பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, காலாண்டு விடுமுறையை பயன்படுத்தி மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து, Aadhaar Biometric Updation பணிகளை விரைவாக முடிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.


மேலும், அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களும் (BRTE) மேற்கண்ட தகவல்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவித்து, இப்பணியை காலாண்டு விடுமுறையை பயன்படுத்தி விரைவாக முடிக்க உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.   


-- முதன்மைக் கல்வி அலுவலர், கரூர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்கறிஞர் வில்சன் MP அவர்களின் பேட்டி

TET Review Petition filed by our Tamilnadu State Govt : Advocate Wilson  தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்...