Tollgateக்கு செல்லாமலேயே பணம் பிடித்தம் செய்யும் மத்திய அரசின் NHAI - பொது மக்கள் அதிர்ச்சி
Tollgateக்கு செல்லும் முன்பே பணம் பிடித்தம் செய்யும் மத்திய அரசின் NHAI : சென்னை-பெங்களூரு சாலையில் AI Camera மூலம் பணம் பிடித்தம் - பொது மக்கள் அதிர்ச்சி
Chennai - Bangalore தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட்களை மாற்றும் MLFF என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) MLFF - Multi Lane Free Flow System என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி, பழைய டோல்பூத் முறையை மெதுவாக மாற்றத் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறையின் ஆசீர்வாதத்துடன் பொது மக்களிடம் அநியாயக் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வரும் Toll Gate நிர்வாகங்களின் இந்த புதிய அவதாரம் பொது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த புதிய முறைமையில் AI அடிப்படையிலான ANPR (தானியங்கி எண் தட்டு அங்கீகாரம்) கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இவை வாகன எண்களை தானாகப் பிடித்து, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள FASTag கணக்கில் இருந்து கட்டணத்தை கழித்துவிடும். இந்த வாகனங்கள் சுங்க சாவடியில் நிற்க வேண்டிய அவசியமே இல்லை என்று கூறப்படுகிறது. வாகனங்கள் 100 முதல் 120 கிமீ வேகத்திலும் இலகுவாக சென்று விடலாம். இதன்மூலம் பயண நேரம் குறைவதோடு, சாலை நெரிசலும் குறையும் என பகீர் கிளப்புகின்றனர்.
முதற்கட்டமாக, ஸ்ரீபெரும்புதூர் (நெமிலி), சென்னசமுத்திரம் (வேலூர் அருகே), மற்றும் பாரனூர் (ஜிஎஸ்டி பாதை) ஆகிய மூன்று இடங்களில் இந்த புதிய கேமரா முறை பரிசோதனை அடிப்படையில் தொடங்கப்படுகிறது. இதன் வெற்றியைப் பொருத்து, தமிழ்நாட்டின் மற்ற டோல்கேட்களிலும் அடுத்த கட்டங்களில் இது விரிவுபடுத்தப்படும் என மத்திய அரசின் NHAI தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.