கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

WhatsApp / Telegram - நடைமுறைக்கு வரும் புதிய விதி & பரப்பப்படும் வதந்திகள்

 


WhatsApp / Telegram பயன்பாட்டில் SIM-இணைப்பு மற்றும் 6-மணி நேரத்திற்கு ஒருமுறை லாக்அவுட் - நடைமுறைக்கு வரும் புதிய விதி & பரப்பப்படும் வதந்திகள்


அனைவருக்கும் வணக்கம். நேற்று முதல் இந்த பதிவு சமூக ஊடகங்களில் உலா வருகிறது. பயமுறுத்துகிறது. அது குறித்த சில விளக்கங்கள்...


உண்மையானவை / அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவை:


அரசு புதிய விதிகளின் மூலம் WhatsApp, Telegram போன்ற மெசேஜிங் ஆப்கள் அதே SIM-க்கு கட்டாயமாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். SIM இல்லாமல் வேலை செய்யக்கூடாது.


WhatsApp Web / Telegram Web போன்ற டெஸ்க்டாப் பயன்பாடுகள் 6 மணி நேரத்திற்கொரு முறை தானாக லாக்அவுட் ஆக வேண்டும்.


இதன் நோக்கம் மோசடி, போலி SIM, ஆபத்தான கணக்குகளைத் தடுப்பது.


பொய்யான தகவல்கள்


“அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்படும்”, 

“அனைத்து மெசேஜ்களும் அரசு சேமிக்கும்” — இவை பொய்.


WhatsApp-இல் ✔✔✔, சிவப்பு டிக், “அரசு பார்த்தது”, “அரசு நடவடிக்கை” போன்ற டிக்-மார்க் சிஸ்டம் இருப்பதாக சொல்வது முற்றிலும் பொய்.


அரசியல்/ மத செய்தி அனுப்பினால் “உடனடி கைது” — அப்படி அதிகாரப்பூர்வ விதி இல்லை.


“உங்கள் மொபைல் சாதனங்கள் அனைத்தும் அரசு கண்காணிப்பில் இருக்கும்” — இது பரப்பப்படும் வதந்தி.


“நாளை முதல் எல்லாம் அமலாகும்” — உண்மையில் இது 90 நாட்களில் படிப்படியாக அமலாகும்.


குறிப்பாகச் சொன்னால்


WhatsApp / Telegram பயன்பாட்டில் SIM-இணைப்பு மற்றும் 6-மணி நேரத்திற்கு ஒருமுறை லாக்அவுட் மட்டுமே புதிய விதி.


மீதியுள்ள “அழைப்புகள் பதிவு”, “எந்த அரசியல் மெசேஜ் அனுப்பினாலும் கைது”, “மூன்று டிக்/ அரசு பார்த்தது” போன்றவை எல்லாம் பயமுறுத்தும் போலி செய்திகள்.


Odonil Air Freshener Room Spray - 440 ml Combo (Pack of 2, 220ml each) | Lavender Mist & Jasmine Fresh 


https://amzn.to/3YkoirW



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பல ஆண்டுகளாக திருமணத்திற்காக புகழ்பெற்ற கோயிலில், இனி திருமண விழாக்கள் நடத்தப்படாது என முடிவு

 பல ஆண்டுகளாக திருமணத்திற்காக புகழ்பெற்ற கோயிலில், இனி திருமண விழாக்கள் நடத்தப்படாது என முடிவு விவாகரத்து வழக்குகளின் அதிகரிப்பு, சோழர் கால ...