தமிழ்நாடு அரசு - குறள் வார விழா 2026 - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான குறளாசிரியர் மாநாடு - சிறப்பு திருக்குறள் வினாடி வினா நிகழ்ச்சி - ரூ.4,00,000க்கும் மேற்பட்ட பரிசுத்தொகை அறிவிப்பு
>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
>>> ஜனவரி 2026 நிலவரப்படி, சிறந்த மொபைல் போன்களின் விவரங்கள்...
குறளாசிரியர் மாநாடு
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான குறளாசிரியர் மாநாடு- 2026
தமிழ்நாடு அரசு
தமிழ் வளர்ச்சித் துறை
குறள் வார விழா 2026
குறளாசிரியர் மாநாடு
சிறப்பு திருக்குறள் வினாடி வினா நிகழ்ச்சி
I) பாடத்திட்டம்
II) பாடத்திட்ட தலைப்புகள்:
+ சமயச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்.
+ அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை.
மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்.
திருக்குறளும் மாறாத விழுமியங்களும் - சமத்துவம், மனிதநேயம் முதலானவை.
+ சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு.
திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்.
பல்வேறு அறிஞர்களின் உரைகள்.
மொழிபெயர்ப்பு: ஜி.யு. போப், சுந்தரம் தாமஸ்கிட்டோச்சி.
+ குறள் சார்ந்த நூல்கள்:
(எ.கா.) குறளோவியம், குறள்வானம், வாழும் வள்ளுவம் போன்றவை.
பிற்கால இலக்கியம் / திரைப்படங்களில் திருக்குறளின் தாக்கம்.
தமிழ்நாடு அரசும் திருக்குறளும்.
III) வழிகாட்டு நெறிமுறைகள்
அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டினை முன்னிட்டு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்புகளின் படி திருக்குறள் வார விழா 2026 தமிழ்நாடு அரசால் பல்வேறு நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்படுகின்றன. தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான வினாடி வினா நிகழ்வு வரும் ஜனவரி 21 அன்று திருப்பூரில் நடைபெறவுள்ளது. 38 மாவட்டங்களிலிருந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2 குழுக்கள் வீதம் மொத்தம் 76 குழுக்கள் பங்கேற்கின்றன.
மாவட்ட அளவிலான போட்டி:
மாவட்ட அளவில் முதல்நிலை எழுத்து தேர்வு (கொள்குறி வகை) நடத்தி அதில் சிறந்த மதிப்பெண் பெறும் 6 நபர்களை 2 குழுக்களாக இணைந்து இறுதிப் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
மாவட்ட அளவிலான முதல்நிலைத் தேர்வு, அந்தந்த மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் கூடத்தில் 09/01/2026 (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் 02.00 மணிக்கு போட்டியாளர்கள் அனைவருக்கும் தேர்வு தொடங்கப்பட வேண்டும். ஒரு மணி நேரம் தேர்வு நடத்தப்பட்டு சரியாக 03.00 மணிக்கு தேர்வு முடிக்கப்படும்.
போட்டித் தேர்வில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் கைபேசி /ஸ்மார்ட் கைகடிகாரம் போன்ற எலக்ட்ரானிக் உபகரணங்களை பயன்படுத்தக் கூடாது.
போட்டியாளர்களில் எவரேனும் விழி சவால் மாற்றுத்திறனாளி இருந்தால் விதிமுறைகளின் படி எழுத்தாளர் (Scribe) நியமித்து கூடுதல் நேரம் (1 மணி நேரம் 20 நிமிடம்) வழங்கலாம்.
மாநில அளவிலான போட்டி:
இறுதிப் போட்டியில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 2 அணிகள் பங்கேற்கலாம். ஒவ்வொரு அணியும் 3 பேர் கொண்ட குழுக்களாக இருக்க வேண்டும். 3 பேர் குழுவில் ஒரு நபர் கட்டாயம் ஆசிரியர் அல்லாத அரசு ஊழியராக இருக்க வேண்டும்.
மாநில அளவிலான வினாடி வினா போட்டியானது 21/01/2026 அன்று திருப்பூர் மாவட்டம். அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கில் நான்கு நிலைகளாக நடத்தப்படும் (தொடக்கநிலை, கால் இறுதி, அரை இறுதி, இறுதிச் சுற்று).
தொடக்க நிலையில் 25 வினாக்கள் (கொள்குறி வகை) கேட்கப்படும். இதில் முதல் 40 இடங்கள் பெறும் அணிகள் காலிறுதியில் பங்கு பெற தகுதி பெறும்.
கால் இறுதி போட்டியில் 50 வினாக்கள் (ஒரு வார்த்தையில் பதில்) கேட்கப்படும்.
அரை இறுதி மேடையில் 4 சுற்றுகளாக நடத்தப்படும். இதில் சிறந்த அணிகள் இறுதிப் போட்டியில் பங்கு பெறும்.
இறுதிப்போட்டி ஆறு அணிகளுக்கு இடையே நடைபெறும். முதல் இடம் பெற்ற அணிக்கு ரூ.1,50,000/- இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு ரூ.1,20,000/-மூன்றாம் இடம் பெற்ற அணிக்கு ரூ.90,000/- பரிசாக வழங்கப்படும். போட்டியில் பங்கு பெற்ற மீதமுள்ள அணிகளுக்கு ஊக்க பரிசாக ரூ.15,000/- வழங்கப்படும்.
தகுதிகள் மற்றும் விதிமுறைகள்:
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துத் துறை /அனைத்து நிலை அலுவலர்களும். அரசு / அரசு உதவி பெறும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வகை தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்களும் கலந்து கொள்ளலாம்.
முதல்நிலைத் தேர்விற்கும் / இறுதிப் போட்டிக்கும் கலந்து கொள்ள வரும் போது அலுவலக அடையாள அட்டை கட்டாயம் எடுத்து வர வேண்டும்.
தங்குமிடம் / போக்குவரத்து வசதிகள் போட்டியாளர்கள் தாங்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
போட்டியாளர்கள் அனைவருக்கும் சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.
போட்டியாளர்கள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றுகள் மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கப்படும்.
போட்டியில் நடுவர் எடுக்கும் முடிவுகளே இறுதியானது.
>>> ஜனவரி 2026 நிலவரப்படி, சிறந்த மொபைல் போன்களின் விவரங்கள்...


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.