இடுகைகள்

ஆர்பாட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உபரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி - ஆசிரியர்கள் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம்...

படம்
 அண்ணாமலைப் பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களுக்கு, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாற்றுப் பணி வழங்க எதிர்ப்புத் தெரிவித்து, கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (டிச.30) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைத் தமிழக அரசின் உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பின்னர், அங்கு ஆசிரியர்களின் எண்ணிக்கை தேவைக்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் மாற்றுப் பணி வழங்கப்பட்டது. இதற்கு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும் அரசு இதற்குச் செவிசாய்க்கவில்லை. இதையடுத்து அவர்கள் அரசுக் கல்லூரிகளில் பணியில் சேர்ந்தனர். பல ஆண்டுகளாகக் கவுரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றி வந்தவர்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டது. உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதிகளுடன் காத்திருந்தவர்களின் பணி வாய்ப்பும் கேள்விக்குறியானது. இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைத்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...