>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பணி நிரவல் கலந்தாய்விற்கு பின் இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட வேண்டிய ஆசிரியர் பணியிடங்கள்
பணி நிரவல் கலந்தாய்வு - CEO Proceedings
பணி நிரவல் கலந்தாய்வு - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு - தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
பார்வை :
1. அரசாணை எண்.525 பள்ளிக்கல்வித்துறை, நாள் : 29.12.1997.
2. அரசாணை எண்.46 பள்ளிக்கல்வித்துறை நாள்.14.05.2004.
3. அரசாணை எண்.231 பள்ளிக்கல்வித்துறை நாள்.11.08.2010.
4. அரசாணை எண்.180 பள்ளிக்கல்வித்துறை நாள்.17.07.2012.
5. அரசாணை எண்.217 பள்ளிக்கல்வித்துறை நாள்.20.06.2019.
6. அரசாணை எண்.176 பள்ளிக்கல்வித்துறை நாள்.17.12.2021.
7. அரசாணை எண்.12 பள்ளிக்கல்வித்துறை நாள்.03.02.2022,
8. அரசுக் கடித எண் .3835/1.5.5 (1) 12024-1., நாள் 29.04.2024.
9. சென்னை-06, பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்.048350/சி3/இ1/2024, நாள் : 05.08.2024.
10. சென்னை-06, பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்.037584/சி3/இ1/2025, நாள் : 26.06.2025.
=========
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பணி நிரவல் குறித்த தொடக்கக் கல்வி இயக்குநரகச் செய்தி
பணி நிரவல் குறித்த தொடக்கக் கல்வி இயக்குனரகச் செய்தி (வாட்ஸ் அப் தகவல்)
இன்று மற்றும் நாளை (03 & 04/07 / 2025/ இடைநிலை ஆசிரியர்க்கான பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற உள்ளது, பணி நிரவல் கலந்தாய்வில் பணி நிரவலுக்குட்பட்ட ஆசிரியர்களை விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி ஆணை பெறுமாறு வற்புறுத்தக்கூடாது. அது போல் வற்புறுத்தி பணிநிரவல் ஆணை ஏதேனும் வழங்கப்பட்டதாக புகார் பெறப்படின் சார்ந்த DEO மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக அறிவுறுத்தப்படுகிறது. நேற்றைய முன்தினம் மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் இது சார்ந்து குறிப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டதை கவனத்தில் கொள்ளுமாறும் DEO's கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் declaration form எதுவும் பெற வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது.
தொடக்கக் கல்வி இயக்குனர்
Deployment of surplus teachers - DSE Proceedings
2024-2025ஆம் கல்வி ஆண்டு பணியாளர் நிர்ணயத்தின் படி அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் : 050640/ டி1/ இ4/ 2024, நாள் : 06-05-2025 வெளியீடு
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை மே மாதத்திற்குள் பணி நிரவல் செய்ய பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு
Deployment of surplus teachers in government aided schools as per the staff fixation for the academic year 2024-2025 - Instructions issued - Proceedings of the Director of School Education Rc. No.: 050640/ D1/ E4/ 2024, Dated: 06-05-2025 Released
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளியில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படாமல் இருக்க EMIS வலைதளத்தில் மேற்கொள்ள வேண்டியவை (What to do on EMIS website to avoid surplus teacher posts in school)...
பள்ளியில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படாமல் இருக்க EMIS வலைதளத்தில் மேற்கொள்ள வேண்டியவை (What to do on EMIS website to avoid surplus teacher posts in school)...
பள்ளியில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படாமல் இருக்க மாணவர்கள் எண்ணிக்கையை உறுதி செய்யுங்கள்...
EMIS ENTRY
பள்ளியிலுள்ள ஆசிரியர்களை Surplusல் இருந்து தக்கவைத்துக் கொள்ள & Need Postஐ உறுதி செய்துகொள்ளத் தேவையான மாணவர் எண்ணிக்கையை EMISல் முழுமையாக 31.07.2023-ற்குள் பதிவேற்றிவிடுங்கள். இந்தத் தேதிக்கு முன்னோ / பின்னோ நீங்கள் எத்தனை மாணவர்களை admission செய்து பள்ளி ஆவணங்களிலும், MRலும் எழுதி வைத்தாலும் அதனால் எந்தப்பயனுமில்லை. EMIS தளத்தில் உள்ள எண்ணிக்கையை வைத்து மட்டுமே 01.08 Particulars (Surplus / Need) உறுதி செய்யப்படும். அந்த எண்ணிக்கையும் இயக்குநரகத்தால் (ஆகஸ்ட் மாதத்தில் ஏதேனும் ஒரு தேதியின் அடிப்படையில்) வட்டார / மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.. அந்த எண்ணிக்கையை வைத்தே வட்டார / மாவட்டக் கல்வி அலுவலர்கள் Surplus / Need Postஐ உறுதி செய்வர்.
Surplus Postஐப் பொறுத்தவரை 30:1 என்ற விகிதாச்சாரம் பின்பற்றப்படுகிறது.
Need Postஐப் பொறுத்தவரை 45:1 என்ற விகிதாச்சாரம் பின்பற்றப்படுகிறது. உதாரணமாக RTE படி 91 மாணவர்கள் இருந்தாலே 4-வது Post உண்டு. ஆனால், நடைமுறையில் 116 மாணவர்கள் இருந்தால் மட்டுமே 4-வது Post அனுமதிக்கப்படுகிறது.
இதற்கேற்ப உங்களது பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை EMISல் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உறுதிப்படுத்திய எண்ணிக்கையை ஆகஸ்ட் 15 வரை குறையவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
01-08-2022ன் படி உபரியாக கண்டறியப்பட்ட ஆசிரியர் பணியிடங்களை இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் (Director of Elementary Education Proceedings for transfer of teacher posts identified as surplus as on 01-08-2022 to Director's Common Pool)...
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை.6.
ந.க.எண்.015500/இ12022, நாள். 07.07.2023
பொருள்: தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 0108.2022-ல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் - ஆசிரியரின்றி உபரி பணியிடங்கள் (Surplus without Teacher) எனக் கண்டறியப்பட்ட இடைநிலை / பட்டதாரி / பிற வகை ஆசிரியர்கள் - இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்தல்- சார்ந்து.
பார்வை :
1 அரசாணை (நிலை) எண்:101, பக (வரவு செலவு-1)த் துறை, நாள்:18.08.2018.
2. அரசாணை (நிலை) எண்.231, பள்ளிக் கல்வி (சி2) துறை, நாள்:11.08.2010.
3 அரசாணை (1டி) எண்.217 பள்ளிக் கல்வி பக 5(1) துறை, நாள்.20.06.2019.
4 அரசாணை (நிலை) எண்:176, பள்ளிக் கல்வி (SE 5(1)த் துறை, நாள்:17:12.2021.
5 அரசாணை (நிலை) எண்:154, பள்ளிக் கல்வி (பகா(1)த் துறை, நாள்.09.09.2022.
6 சென்னை.6, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 15500/இ12022. நாள்;16.09.2022 மற்றும் 04.1.2022.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2022 அன்றுள்ளவாறு முதுகலை ஆசிரியர் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு ஆணையரின் பொதுத் தொகுப்பில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டது - IFHRMS மூலம் பதிவேற்றம் செய்தல் - அரசாணை (நிலை) எண்: 91, நாள்: 12-05-2023 வெளியீடு - இணைப்பு : பழைய மற்றும் புதிய பள்ளிகளின் விவரங்கள் (Government Higher Secondary Schools Requiring Additional Posts of Post Graduate Teachers Allowed to Schools in the Commissioner's Common Pool from Surplus Posts of Post Graduate Teachers Without Teachers as on 01.08.2022 - Uploaded in IFHRMS - G.O. (Ms) No: 91, Dated: 12-05-2023 Issued - Attachment : Old And New Schools Details)...
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை 26-05-2023க்குள் தகுதியுள்ள பணியிடத்திற்கு பணிநிரவல் செய்து ஆணை வழங்கப்பட வேண்டும் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 52157/டி1-இ4/ 2022, நாள்: 11-05-2023 (The Teachers working in surplus posts in Government Aided Schools should be Diplayement and posted to eligible posts by 26-05-2023 and issued an order - Proceedings of the Commissioner of School Education RC.No: 52157/D1-E4/ 2022, Date: 11-05-2023)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மே 26ஆம் தேதிக்குள் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - Govt-aided schools to deplayement surplus teachers by 26th - School Education Department orders
பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2022-23-ம் கல்வி ஆண்டுக்கு 1.8.2022 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்து பள்ளிகளுக்கு 15.10.2022-க்குள் ஆணை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்ட அறிக்கையின்படி, உபரி பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை வருவாய் மாவட்டத்துக்குள் தகுதியுள்ள காலிப்பணியிடங்களில் பணிநிரவல் செய்தும், கூடுதலாக உள்ள உபரி ஆசிரியர்களைத் தேவையுள்ள அரசுப் பள்ளிகளுக்கு மாற்றுப்பணி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மாணவர்கள் நலன் கருதி கல்வி ஆண்டின் இடையில் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்யாமல் ஆண்டின் இறுதியில் பணிநிரவல் மேற்கொள்ளப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை 2022-23-ம் கல்வி ஆண்டின் இடையில் பணிநிரவல் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது தேர்வுகள் முடிவடைந்த நிலையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2023-24ஆம் கல்வி ஆண்டில் ஜூன் முதல் தேதியிலிருந்து பணிபுரியும் வகையில் உபரி ஆசிரியர்களைத் தகுதியுள்ள இடத்துக்கு மே மாதம் 26-ஆம் தேதிக்குள் பணிநிரவல் செய்து அதன் அறிக்கையை ஆணையரகத்துக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியரின்றி காலியாக உள்ள உபரி இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஆணையரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education to hand over the Surplus Secondary Grade Teacher / B.T.Assistant posts without Persons to the Commissioner) ந.க.எண்: 040678/ சி3/ இ1/2021, நாள்: 03-05-2022...
பட்டதாரி ஆசிரியர்கள் - பாட வாரியான காலிப்பணியிடங்கள், கூடுதல் தேவைப்பணியிடங்கள், உபரி ஆசிரியர்கள், நிகர காலிப்பணியிடங்கள் விவரம் ( B.T.Assistants (Graduate Teachers) - Subject wise Vacancies, Need Posts, Surplus Teachers, Net Vacancies Details)...
பட்டதாரி ஆசிரியர்கள் - பாட வாரியான காலிப்பணியிடங்கள், கூடுதல் தேவைப்பணியிடங்கள், உபரி ஆசிரியர்கள், நிகர காலிப்பணியிடங்கள் விவரம் ( B.T.Assistants (Graduate Teachers) - Subject wise Vacancies, Need Posts, Surplus Teachers, Net Vacancies Details)...
தமிழ்
காலிப்பணியிடம்- 1417
கூடுதல் தேவைப்பணியிடம்-1696
மொத்தம்-3113
உபரி ஆசிரியர்கள்- 316
நிகர காலிப்பணியிடங்கள்- 2797
ஆங்கிலம்
காலிப்பணியிடம்- 878
கூடுதல் தேவைப்பணியிடம்- 1950
மொத்தம்- 2828
உபரி ஆசிரியர்கள்- 500
நிகர காலிப்பணியிடங்கள்- 2328
கணிதம்
காலிப்பணியிடம்- 860
கூடுதல் தேவைப்பணியிடம்- 1208
மொத்தம்- 2068
உபரி ஆசிரியர்கள்- 1005
நிகர காலிப்பணியிடங்கள்- 1063
அறிவியல்
காலிப்பணியிடம்- 1681
கூடுதல் தேவைப்பணியிடம்-1812
மொத்தம்- 3493
உபரி ஆசிரியர்கள்- 827
நிகர காலிப்பணியிடங்கள்- 2666
சமூக அறிவியல்
காலிப்பணியிடம்- 1175
கூடுதல் தேவைப்பணியிடம்- 1458
மொத்தம்- 2633
உபரி ஆசிரியர்கள்- 392
நிகர காலிப்பணியிடங்கள்- 2241
பள்ளிக்கல்வித்துறை - 2022 உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விவரம் (பாட வாரியாக) - DSE - Surplus B.T.Assistants List (Subject wise)...
பள்ளிக்கல்வித்துறை - 2022 உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விவரம் (பாட வாரியாக) - DSE - Surplus B.T.Assistants List (Subject wise)...
உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணை (G.O.Ms.No.12, Dated: 03-02-2022) வெளியீடு (School Education - Announcement for the year 2021-2022 General Transfer Counselling Policy for Teachers working in Government / Panchayat Union / Municipal / Primary and Middle schools and Government/Municipal High / Higher Secondary Schools - Orders issued - Amendment - lssued -School Education [SE5(1)] Department G.O.(Ms) No. 12 Dated: 03.02.2022)...
தென் மாவட்டங்களில் உள்ள உபரி ஆசிரியர்கள் வட மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு மாற்றப்படுவார்கள் - கல்வி அமைச்சர் தகவல்...
தென் மாவட்டங்களில் உள்ள உபரி ஆசிரியர்கள் வட மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு மாற்றப்படுவார்கள் - கல்வி அமைச்சர் தகவல்...
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2019 நிலவரப்படி 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 90 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் சரண் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு செயல்முறைகள்(Surrendering 90 Post Graduate Teacher Posts in Government Higher Secondary Schools based on the Number of students in 11th and 12th Standards as on 01.08.2019 - Proceedings of the Director of School Education) ந.க.எண்:048332/டபிள்யு2/இ3/2019, நாள்: 04-02-2021...
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2019 நிலவரப்படி 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 90 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் சரண் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு செயல்முறைகள் ந.க.எண்:048332/டபிள்யு2/இ3/2019, நாள்: 04-02-2021...
7,100 உபரி ஆசிரியர்கள் உள்ளனர் - பிப்.13-ம் தேதிக்குள் TRB மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் _ அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி...
சிவகங்கையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
’’அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னோடியாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியுள்ளார். தமிழகத்தில்தான் கல்வி முறை சிறப்பாக உள்ளது எனக் கல்வியாளர்கள், மற்ற மாநிலத்தவர் தெரிவித்துள்ளனர். 742 அடல் டிங்கரிங் லேப் திட்டம் அடுத்த மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும். பள்ளிகளில் 7,500 ஸ்மார்ட் வகுப்புகள், 80 ஆயிரம் ஸ்மார்ட் போன்களை வழங்க மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளிலும் ஷூ, சாக்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும். காலத்திற்கு ஏற்ப ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை நீக்கி விட்டோம். ஏற்கனவே 7,100 பேர் உபரி ஆசிரியர்களாக உள்ளனர். அவர்களைக் காலிப் பணியிடங்களில் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு ரூ.1,400 கோடி நிதிச் சுமை ஏற்படும்.
மேலும் சிலர் வழக்குத் தொடர்ந்துள்ளதால் ஆசிரியர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒத்துழைத்தால் பிப்.13-ம் தேதிக்குள் பட்டியல் வெளியிட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். மற்ற வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை நீக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
உபரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி - ஆசிரியர்கள் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம்...
அண்ணாமலைப் பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களுக்கு, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாற்றுப் பணி வழங்க எதிர்ப்புத் தெரிவித்து, கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (டிச.30) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைத் தமிழக அரசின் உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பின்னர், அங்கு ஆசிரியர்களின் எண்ணிக்கை தேவைக்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் மாற்றுப் பணி வழங்கப்பட்டது.
இதற்கு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும் அரசு இதற்குச் செவிசாய்க்கவில்லை. இதையடுத்து அவர்கள் அரசுக் கல்லூரிகளில் பணியில் சேர்ந்தனர். பல ஆண்டுகளாகக் கவுரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றி வந்தவர்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டது. உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதிகளுடன் காத்திருந்தவர்களின் பணி வாய்ப்பும் கேள்விக்குறியானது.
இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைத் துறையில் பணியாற்றி வரும் உபரி ஆசிரியர்களுக்கு, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாற்றுப் பணி வழங்க உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணிக்காகக் காத்திருப்பவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
“அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைத் துறையில் பணியாற்றும், 59 உபரி ஆசிரியர்களை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் மாற்றுப் பணி அளிப்பதற்கு உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக அறிகிறோம்.
இதற்காக வேளாண்மைப் பல்கலைக்கழகத் துறைகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்களை, உயர் கல்வித்துறை கோரியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பணி வாய்ப்புக்காக சுமார் 2,500 பேர் காத்திருக்கிறோம். குறைந்த ஊதியத்தில் தனியார் வேளாண்மைக் கல்லூரிகளில் பணியாற்றி வருகிறோம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களுக்கு அளிக்க உள்ள வாய்ப்பு எங்களுக்கானது. உயர் கல்வித்துறையின் இந்த முடிவால் நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவோம். 2013-ம் ஆண்டுக்குப் பிறகு, வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்குப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படவில்லை. எனவே, அண்ணாமலைப் பல்கலைக்கழக உபரிப் பேராசிரியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கும் முடிவைக் கைவிட்டு, அப்பணியிடங்களுக்குத் தகுதியுள்ள எங்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், வேலைவாய்ப்புத் தேர்வு நடத்தப்பட வேண்டும்’’.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தரப்பில், “அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு, இப்பல்கலைக்கழகத்தில் மாற்றுப் பணி வழங்குவது குறித்து அரசிடம் இருந்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வரவில்லை. உங்கள் பிரச்சினை குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்” என்று விளக்கம் அளிக்கப்பட்டவுடன், அனைவரும் கலைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Every Problem is an Opportunity - Today’s Short Story
ஒவ்வொரு பிரச்சனையும் ஒரு வாய்ப்பு - இன்று ஒரு சிறுகதை Every Problem is an Opportunity - Today’s Short Story தினம் ஒரு குட்டி கதை - "ஒ...










