பாரத ஸ்டேட் வங்கியில் சம்பளக் கணக்கு வைத்திருப்போர் தங்களது கணக்கை "SBI RISHTEY எஸ.பி.ஐ. ரிஸ்டே" கணக்காக மாற்றுவதால் அவர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் கிடைக்கும் நன்மைகள்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பாரத ஸ்டேட் வங்கியில் சம்பளக் கணக்கு வைத்திருப்போர் தங்களது கணக்கை "SBI RISHTEY எஸ.பி.ஐ. ரிஸ்டே" கணக்காக மாற்றுவதால் அவர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் கிடைக்கும் நன்மைகள்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தபால் அலுவலக சேமிப்புகளில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.
இந்திய தபால் நிலையங்களில் உள்ள அடிப்படை சேமிப்பு கணக்கில் இனி மாதத்திற்கு நான்கு முறை மட்டுமே இலவசமாகப் பணம் எடுக்க முடியும். அதன் பிறகு எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் விதிக்கப்படும். இந்தக் கட்டணமானது 25 ரூபாய் அல்லது எவ்வளவு பணம் எடுக்கிறீர்களோ அதில் 0.5 சதவீதமாக இருக்கும். இருந்தாலும் டெபாசிட்டுகளுக்கு எந்த கட்டணமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
நடப்பு கணக்கு
சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கில் மாதத்துக்கு ரூ.25,000 வரையில் பணம் எடுக்க எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. அதைத் தாண்டி எடுக்கப்படும் பணத்திற்கு கட்டணம் விதிக்கப்படும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 25 ரூபாய் அல்லது எவ்வளவு பணம் எடுக்கிறீர்களோ அதில் 0.5 சதவீதம் கட்டணம் இருக்கும். இந்தக் கணக்குகளில் 10,000 ரூபாய் வரையிலான டெபாசிட்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை. அதன் பிறகு ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்; அல்லது டெபாசிட் தொகையில் 0.50 சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படும்.
AePS கணக்கு
இந்திய அஞ்சல் கணக்கின் மூலம் ஆதார மூலமான பரிவர்த்தனைகளை (AePS) மேற்கொள்ளலாம். இதில் எந்தவொரு வங்கி வாடிக்கையாளரும் தங்களது ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பணம் பெறுதல், பிற வங்கிக் கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் செய்தல், இருப்பு விசாரணை, மினி ஸ்டேட்மெண்ட் போன்ற இலவச சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் AePS கணக்கில் இதுவரையில் இலவச சேவைகளாக இருந்த நிலையில், இனி இதற்கும் கட்டணம் விதிக்கப்படுகிறது. IPPB நெட்வொர்க்குகளுக்கு இலவசமாக பரிவர்த்தனை செய்யலாம் என்றாலும், IPPB அல்லாத பரிவர்த்தனைகளில் மூன்று பரிவர்த்தனைகளுக்கு மட்டும் இலவசம்.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...