கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பட்டியல் பிரிவினர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பட்டியல் பிரிவினர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

“சண்டாளர்” என்ற பெயரை பயன்படுத்த தடை...

 




⚠️⚠️⚠️


“சண்டாளர்” என்ற பெயரை பயன்படுத்த தடை...



*🔹🔸தமிழ்நாட்டில் “சண்டாளர்” என்ற சாதிப் பெயரை வசைபாடவோ, நகைச்சுவையாகவோ பயன்படுத்த கூடாது என்று தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.*



▪️. பட்டியலின சாதிப் பிரிவு பட்டியலில் 48ஆவதாக சண்டாளர் என்ற சாதிப் பெயர் உள்ளது.



▪️. எனவே, பட்டியலினத்தில் உள்ள இந்த பிரிவினரை வசை பாடுவதற்கு பயன்படுத்த கூடாது,



▪️. மீறி பயன்படுத்தினால் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளது...



'சண்டாளர்' என்ற சமூகத்தின் பெயரை நகைச்சுவைக்காகவோ, பொதுவெளியிலோ இனி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, " இந்தியாவின் சாதியக் கட்டமைப்பில் ஒவ்வொரு சாதிக்கும் வெவ்வேறு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இப்பெயர்கள் சமூக மதிப்பையும், அவமதிப்பையும் சுட்டுவதாக உள்ளன. தங்களின் சாதியின் பெயர் இழிவாக இருப்பதாகக் கருதும் சாதிகள், அப்பெயரை மாற்றிக் கொள்வதும், அதற்கு அரசு ஒப்புதல் கொடுத்து அரசாணை வெளியிடுவதும் தொடர்ந்து நிகழ்கின்றன.மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு தேவையான அடிப்படையான பொருட்களை உற்பத்தி செய்தல், சடலங்களை அடக்கம் செய்தல் போன்ற சமூகப் பயனுள்ள பணிகளை செய்யும், சமூகக் குழுக்களை இழிவான பெயர்களில் அழைப்பதும், அரசியல் மேடைகளில் பிறரை வசைபாட பயன்படுத்துவதும், கலை இலக்கியங்கள், திரைப்பட நகைச்சுவை காட்சிகளிலும், திரைப்பட பாடல்களிலும் அப்பெயர்களை பயன்படுத்துவதும் பரவலாக உள்ளது.


இது, இப்பெயர்களில் உள்ள மக்களை புண்படுத்துவதாகும். தவிர இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்ற எண்ணமும் பொதுமக்களிடம் இல்லை. மேலும், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி(Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act, 1989) பொதுவெளியில் பட்டியல் சாதிப் பெயர்களை இழிவான பொருளில் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். தமிழகத்தின் சில பகுதிகளிலும், இந்தியாவிலும் 'சண்டாளர்' என்ற பெயரில் மக்கள் உள்ளனர்.தமிழகத்தில் பட்டியல் சாதியினர் அட்டவணையில் இப்பெயர் 48-ஆவது இடத்தில் உள்ளது. அண்மைக்காலங்களில் பிறரை இழிவுபடுத்தும் நோக்கில் இப்பெயர் பொது வெளியில் சமூக ஊடகங்களில் அழுத்தமாக பேசப்படுவதை காண முடிகிறது. எனவே, இழிவுபடுத்தும் நோக்கத்திலோ, நகைச்சுவையாகவோ, அரசியல் மேடைகளிலோ சண்டாளர் என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்துவோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஆணையம் பரிந்துரைக்கிறது". இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.





பட்டியலின (SC /ST) மாணவ மாணவிகளுக்கு வருமானச் சான்றிதழ் கணக்கீட்டில் அரசு ஊழியராகப் பணிபுரியும் தாய்/ தந்தையின் ஊதியத்தில் அகவிலைப்படி (DA) மற்றும் வீட்டு வாடகைப் படி (HRA) கணக்கிடக்கூடாது என்பதற்கான நெறிமுறை - ஆதிதிராவிடர் நல இயக்குநரின் கடிதம் (Norms for Non-Caluculation of DA and HRA in income certificate calculation of Government Servant mother/father for Scheduled Castes (SC/ST) students - Letter from Director of Adi Dravidar Welfare) நே.மு.க.எண்: அய்1/ 28791/ 2015, நாள்: 01-03-2016...


அரசுப் பணியில் இருக்கும் எஸ்சி / எஸ்டி பணியாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற வருமானச் சான்று, அரசு அறிவித்த அகவிலைப்படி இல்லாமல் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் வருமானச் சான்று வழங்கும் அரசுக் கடிதம்...


>>> பட்டியலின (SC /ST) மாணவ மாணவிகளுக்கு வருமானச் சான்றிதழ் கணக்கீட்டில் அரசு ஊழியராகப் பணிபுரியும் தாய்/ தந்தையின் ஊதியத்தில் அகவிலைப்படி (DA) மற்றும் வீட்டு வாடகைப் படி (HRA) கணக்கிடக்கூடாது என்பதற்கான நெறிமுறை - ஆதிதிராவிடர் நல இயக்குநரின் கடிதம் (Norms for Non-Caluculation of DA and HRA in income certificate calculation of Government Servant mother/father for Scheduled Castes (SC/ST) students - Letter from Director of Adi Dravidar Welfare) நே.மு.க.எண்: அய்1/ 28791/ 2015, நாள்: 01-03-2016...



பட்டியலின (SC /ST) மாணவ மாணவிகளுக்கு வருமானச் சான்றிதழ் கணக்கீட்டில் தாய்/ தந்தையின் ஊதியத்தில் DA மற்றும் HRA கணக்கிடக்கூடாது என்பதற்கான நெறிமுறை....


நடுவணரசு  திட்டத்தின் கீழ் பார்வை ஆறில் குறிப்பிட்டுள்ள அரசானைப்படி 2012-13 ஆம் ஆண்டு  முதல் வருமான வரம்பு 2.50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மாநில அரசு போஸ்ட் மெட்ரிக் திட்டத்தின் கீழ் பார்வை மூன்றில் குறிப்பிட்டுள்ள அரசாணைப்படி 2012-13  ஆம் கல்வியாண்டு முதல் வருமானவரம்பு 2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


 நடுவணரசு  மெட்ரிக் உதவி தொகை திட்டத்தின்  வரைமுறைகளின் படி அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கும் போது அரசு ஊழியரின் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு வகை மூலங்களின் மூலம் அவர்கள் குடும்ப ஆண்டு வருமான கணக்கிடும் பொழுது அத்தகைய கணக்கீட்டின் மூலம் அவர் பெறும் வீட்டு வாடகை எப்படி கணக்கில் கொள்ளாமல் வருமானம் கணக்கிட வேண்டும் என்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதே போன்று மாநில அரசு ஊழியர்களின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்ட வரைமுறைகளின் படி தமிழக அரசு ஊழியரின் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு வகையை மூலங்களின் மூலம் அவர்தம் குடும்ப ஆண்டு வருமானம் கணக்கிடும் பொழுது அவர் பெரும் அகவிலைப்படியை நீக்கி வருமானம் கணக்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 இதன் மூலம் வருமானவரம்பு காரணமாக மைய அரசு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற இயலாத ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதத்தினருக்கு மாறிய ஆதிதிராவிடர் இனத்தினை சார்ந்த தமிழக அரசு ஊழியரின் பிள்ளை வேறு வருமான மூலங்கள் ஏதும் இல்லாத நிலையில் அரசு ஊழியர் பெறும் அகவிலைப்படி நீக்கி வருமானம் கணக்கிடும் பொழுது மாநில அரசு திட்டத்தின் கீழ் பயன்பெற இயலும்.



ஆதி திராவிடர் நலம் - தேவேந்திர குல வேளாளர் - 7 பட்டியலின உட்பிரிவுகள் இணைக்கப்பட்டது - அரசாணையின் படி சான்றிதழ் வழங்கக் கோரி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு ஆதி திராவிடர் நலத் துறை ஆணையர் உத்தரவு & அரசாணை...

 


ஆதி திராவிடர் நலம் - தேவேந்திர குல வேளாளர் - 7 பட்டியலின உட்பிரிவுகள் இணைக்கப்பட்டது - அரசாணையின் படி சான்றிதழ் வழங்கக் கோரி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு ஆதி திராவிடர் நலத் துறை ஆணையர் கடிதம்...

ஆதி திராவிடர் நலத் துறை ஆணையர் கடிதம் ந.க.எண்: ஏ4/ 5077/ 2019, 21-06-2021...

அரசாணை (G.O.Ms.No.: 50, Dated: 01-06-2021...) 

இணைப்பு I : இந்திய சட்டம் மற்றும் நீதித்துறை : THE CONSTITUTION (SCHEDULED CASTES) ORDER AMENDMENT ACT, 2021, No.18 of 2021, Dated: 13-04-2021...

இணைப்பு II: தமிழ்நாடு பட்டியல் பிரிவினரின் திருத்தப் பட்டியல்...


>>> இவை அனைத்தும் கொண்ட ஒருங்கிணைந்த PDF கோப்பினை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...