கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

KAMARAJAR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
KAMARAJAR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15-07-2026 அன்று அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

 


15.07.2026 அன்று அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 06


ந.க.எண். 34752/எம்-1/இ2/2023, நாள். 08.07.2026.


பொருள்: பள்ளிக் கல்வி - 2026 - 27ஆம் கல்வியாண்டு - முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான 15.07.2026 அன்று அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் - அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு  பேச்சுப்போட்டி,  கட்டுரைப்போட்டி, மாணவர்களுக்கு பரிசு கவிதைப்போட்டி நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவித்தல் - சார்பு.


பார்வை :


அரசாணை (நிலை) எண். 169 பள்ளிக் கல்வி (எக்ஸ்) துறை, நாள் .06.07.2012


பார்வை 1இல் கண்டுள்ள அரசாணையில் தமிழ்நாட்டில் கல்லாமை இருளை நீக்கப் பள்ளிகள் பல திறந்து கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டுக் கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜுலை திங்கள் 15 ஆம் நாளினை " கல்வி வளர்ச்சி நாள்" என அரசு அறிவித்தும் அந்நாளில் காமராஜர் திருவுருவப்படத்தை அலங்கரித்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட அரசால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இவ்வாண்டு அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, ஓவியப்போட்டி போன்ற போட்டிகளை நடத்தி வெற்றிப்பெற்ற மாணவ/ மாணவியருக்கு பரிசு வழங்கி ஊக்குவிக்குமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியருக்கு அறிவுறுத்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தெரிவிக்கப்படுகிறது.


இணை இயக்குநர்


பெறுநர்


அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்,


அனைத்து மாவட்டம்.


பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் அரசின் சார்பில் விழா கொண்டாட DEE Proceedings



கர்மவீரர் காமராஜர் பிறந்த ஜூலை-15 ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில்  சிறப்பாக கொண்டாட தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு


தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண். 007719/சி4/2026, நாள் : 04.06.2026


பொருள்

தொடக்கக்கல்வி 2026-2027 ஆம் கல்வியாண்டு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் அரசின் சார்பில் விழா கொண்டாட அனுமதியும் சிறப்பு பரிசளிப்புத் திட்டம் மாவட்டத்திற்கு 75,000 வீதம் 38 மாவட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு வழங்கி ஆணையிடுதல் - சார்பு.


பார்வை

1. அரசாணை (நிலை) எண்.169 ப.க.(என்)துறை, நாள் 06.07.2012.


2. அரசாணை (நிலை)எண்.123 பள்ளிக்கல்வி (ப.க.5(1)த் துறை, நாள்.15.07.2013.


3 தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 006366/C-1/2026, . நாள் 16.04.2026.


4. அரசாணை (நிலை) எண்.10, பள்ளிக் கல்வி (பொது1(2) துறை, நாள் 11.01.2023.


5. அரசுக் கடிதம் (நிலை)எண். efile 11915/பொது1(2) 2023-1, நாள் .24.11.2023.


பார்வை 1-இல் காணும் அரசாணையில் பெருந்தலைவர், காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜீலை 15-ஆம் நாளினை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவது சார்ந்த. 2012-ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேற்காண் விழாவிற்கென ஒதுக்கீடு செய்யப்படும் நிதியினை கொண்டு சிறந்த பள்ளிகளை ஊக்குவிப்பதற்கான "பரிசளிப்பு திட்டம் ( (Award Scheme)" ஒன்றினை ஏற்படுத்தவும், அத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் மூன்று சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுத்து அப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்திடவும் உரிய ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைத்து அந்த மாவட்டத்தில் உள்ள சிறந்த ஒரு தொடக்கப்பள்ளி மற்றும் ஒரு நடுநிலைப்பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு தொடக்கப்பள்ளிக்கு ரூ.25,000/- (ரூபாய் இருபத்து ஐந்தாயிரம் மட்டும்) மற்றும் நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) என பரிசுத் தொகை கணக்கிட்டு 38 மாவட்டங்களில் உள்ள 38 மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு காமராசர் பிறந்த நாள் சிறப்பு பரிசளிப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.


இதனை தொடர்ந்து 2026-2027 ஆம் ஆண்டிற்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜீலை 15-ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாளாக அரசின் சார்பில் கொண்டாடும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் விழாவினை சிறப்பாக நடத்திட அனுமதியும், வருவாய் மாவட்ட அளவில் சிறந்த பள்ளிகளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து ஒரு தொடக்கப்பள்ளி மற்றும் ஒரு


நடுநிலைப்பள்ளியினை தேர்வு செய்து பரிசுகளை வழங்கிடவும், தொடக்கக் கல்வித் துறைக்காக ரூபாய் 28,50,000/- நிதி ஒதுக்கீடு செய்து பார்வை 3-இல் காணும் கடிதத்தின் மூலம் ஆணையிடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு பிரித்து வழங்கிடும் பொருட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.


பார்வை 5-இல் குறிப்பிட்ட அரசுக் கடிதத்தின்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையினை கீழ்க்கண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வாரியாக பகிர்ந்து அளித்து ஆணையிடப்படுகிறது.



>>> DEE செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Celebrating Kamarajar's birthday, July 15th, as Education Development Day - DSE & DEE Joint Proceedings

 


பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளான ஜூலை 15-ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் - DSE & DEE இணைச் செயல்முறைகள்


Celebrating Kamarajar's birthday, July 15th, as Education Development Day - DSE & DEE Joint Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




Kamarajar Birthday My School, My Pride Competitions - DSE Proceedings



பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான என் பள்ளி, என் பெருமை போட்டிகள் குறித்து - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


My School, My Pride Competitions on the birthday of Perunthalaivar Kamaraj - Kalvi Valarchi Naal July 15th - Proceedings of the Director of School Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி (15-07-2023 Kalvi Valarchi Naal) நாளாகக் கொண்டாடுதல் - அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Celebrating former Tamil Nadu Chief Minister Perunthalaivar Kamarajar's birthday on 15th July as Educational Development Day - Giving instructions - Proceedings of Director of School Education)...


>>> தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுதல் - அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Celebrating former Tamil Nadu Chief Minister Perunthalaivar Kamarajar's birthday on 15th July as Educational Development Day - Giving instructions - Proceedings of Director of School Education)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

காமராஜர் பிறந்த நாள் விழா - கல்வி வளர்ச்சி நாள் - கட்டுரை, பேச்சு போட்டிகளுக்கு பயன்படும் 111 தகவல்கள் (Kamarajar Birthday Celebration - Essay, Speech Competitions - Information)...



>>> காமராஜர் பிறந்த நாள் விழா - கல்வி வளர்ச்சி நாள் - கட்டுரை, பேச்சு போட்டிகளுக்கு தேவையான தகவல்கள் (Kamarajar Birthday Celebration - Essay, Speech Competitions - Information)...



>>> நான் விரும்பும் தலைவர் - காமராஜர்...



>>> கல்விக்கண் கொடுத்த காமராஜர்...



>>> காமராஜர் - மக்கள் தலைவர்...



>>> காமராஜரின் சீரிய சிந்தனைகள்...




பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாள் - ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Proceedings of Commissioner of School Education Regarding Celebrating 15th July as Education Development Day of Perundhalaivar Kamarajar Birthday) ந.க.எண்: 36801/ எம்/ இ2/ 2022, நாள்: 12-07-2022...



>>> பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாள் - ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Proceedings of Commissioner of School Education Regarding Celebrating 15th July as Education Development Day of Perundhalaivar Kamarajar Birthday) ந.க.எண்: 36801/ எம்/ இ2/ 2022, நாள்: 12-07-2022...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

UPI பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் நிர்ணயம்

 யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் நிர்ணயம் 📌ரூ.2 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொகைக்கு 0.4% கட்டணம் 📌அக்டோபர் 15 ஆம் தேதி முதல் நடைமுறை என அறிவ...