இடுகைகள்

முதிர்வுத் தொகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

என்பிஎஸ்: இனி முழு பணப் பலன் கிடைக்கும்...

படம்
 தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (என்பிஎஸ்) பயனாளா்கள் தங்கள் சேமிப்புத் தொகையிலிருந்து 40 சதவீதத்தை ஓய்வூதிய நிதி சேமிப்பாக முதலீடு செய்வது கட்டாயமில்லை  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பயனாளா்களுக்கு இனி முழு பணப் பலனும் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை வளா்ச்சி ஆணையத்தின் (பிஎஃப்ஆா்டிஏ) தலைவா் சுப்ரதீம் பந்தோபாத்யாய கூறுகையில்,  ‘‘என்பிஎஸ் பயனாளா்கள் தங்கள் சேமிப்புத் தொகையிலிருந்து 40 சதவீதத்தை ஓய்வூதிய நிதி சேமிப்பாக முதலீடு செய்ய வேண்டியது சட்டத்தின்படி கட்டாயமாக இருந்தது. அத்தொகையானது சந்தை சாா்ந்த வட்டி விகிதத்துக்கு ஏற்ப மாதந்தோறும் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள 60 சதவீத தொகையை ஒரே நேரத்தில் அவா்கள் பெற்றுக் கொள்ளலாம்.  வட்டி விகிதம் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் முதலீடு செய்யப்படும் தொகையின் வாயிலாக கிடைக்கும் லாபம் குறைந்துள்ளது. எனவே, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் பயனாளா்கள், சேமிப்புத் தொகையிலிருந்து 40 சதவீதத்தை முதலீடு செய்ய வேண்டியது  இனி கட்டாயமில்லை. முழு பணத்தையும் அவா்கள் பெற்றுக் கொள்ளலாம். இதன்படி,

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...