கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Annamalai University லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Annamalai University லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இணை பேராசிரியர்கள் 56 பேர் பணி நீக்கம் (56 Associate Professors of Chidambaram Annamalai University dismissed)...

 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இணை பேராசிரியர்கள் 56 பேர் பணி நீக்கம் (56 Associate Professors of Chidambaram Annamalai University dismissed)...

இணை பேராசிரியர்கள் 56 பேரை பணி நீக்கம் செய்து அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

போதிய கல்வி தகுதி இல்லாமல் பணியாற்றி வந்ததாக எழுந்த புகாரின் பேரில் நடவடிக்கை.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிதி சிக்கல் காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பல்கலைக்கழகத்தை அரசு முழுக் கட்டுப்பாட்டில் எடுத்து நிர்வகித்து வருகிறது.

அப்போது பல்கலைக்கழகத்தை சீர்படுத்தும் பணியாகத் தமிழக அரசு சார்பில் முதன்மைச் செயலாளர் சிவதாஸ் மீனா நியமிக்கப்பட்டார். அப்போது இவர் பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளில் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்தும் அவர்கள் கல்வி குறித்தும் ஆய்வு செய்தபோது பேராசிரியருக்குத் தேவையான கல்வித் தகுதி இல்லாமல் இருந்தது அதிர்ச்சி அளித்துள்ளது.

பின்னர் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் துணைவேந்தர் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் தணிக்கை குழு ஆய்வு மேற்கொண்டபோது தகுதி இல்லாத உதவி பேராசிரியர்கள் குறித்து தெரியவந்தது. தகுதி இல்லாத பேராசிரியர்கள் 56 பேரை இன்று உயர் கல்வித்துறை உத்தரவின் பேரில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் பெரும்பான்மையான அளவில் மேலாண்மைத் துறையில் பணியாற்றும் உதவி பேராசிரியர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்து திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலமாக கல்வி பயின்றும், பிஹெச்டி இல்லாமல் உதவி பேராசிரியராகப் பணியில் இருந்தும் வருகிறார்கள் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட உதவி பேராசிரியர் தரப்பில் மொத்தம் 80க்கும் மேற்பட்டவர்கள் உள்ளதாகத் தணிக்கையில் தெரியவந்தது. இதில் சிலர் எங்களுக்கு எந்த பதவி உயர்வும் வேண்டாம் இதிலேயே இப்படியே இருக்கிறோம் எனக் கடிதம் கொடுத்துள்ளதால் அவர்கள் தகுதி இல்லாமல் இருந்தும் தொடர்ந்து பணியாற்றுகிறார்கள். எல்லோருக்கும் ஒரே மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இதுபோன்று செய்வது வருத்தம் அளிக்கிறது. அதேபோல் உதவி பேராசிரியருக்குத் தகுதி இல்லாத எங்களை பணி அமர்த்தியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும். எனவே இது குறித்து நீதிமன்றத்திற்குச் சென்று முறையிட்டு வெற்றி பெறுவோம் என்கின்றனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக படிப்புகளுக்கு உண்மைத்தன்மை சான்றிதழ் பெற, அதற்கான கட்டணத்தை இனி இணையவழியில் மட்டுமே செலுத்தவேண்டும். வங்கி வரைவோலை (DD) மூலம் செலுத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாது (To get Genuineness Certificate for Annamalai University courses, you have to pay the fee online only. Payment by Bank Demand Draft (DD) will not be accepted)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அண்ணாமலை பல்கலைக்கழக படிப்புகளுக்கு உண்மைத்தன்மை பெற அதற்கான கட்டணத்தை இனி இணையவழியில் மட்டுமே செலுத்தவேண்டும். DD மூலம் செலுத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாது.

இப்பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் நலன் கருதி வரைவோலை தரகு ( D.D.Commission ) மற்றும் நேரம் விரயமாவதை தவிர்ப்பதற்காக இணையதள கட்டண முறை ( Online payment ) பின்பற்றப்பட்டு வருகிறது.

எனவே மாணவர்கள் http://coe.annamalaiuniversity.ac.in/bank/otherfec.php என்ற இணையதள முகவரியில் மட்டும் பணம் செலுத்தி , கட்டண ரசீது மற்றும் உரிய ஆவணங்களோடு தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி , அண்ணாமலைப் பல்கலைக்கழகம் , அண்ணாமலைநகர் 608002 , கடலூர் மாவட்டம் , தமிழ்நாடு என்ற முகவரிக்கு தபால் / கூரியர் மூலம் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

2002 முதல் 2014 வரை தொலைநிலைக் கல்வியில் சேர்ந்த மாணவர்களுக்கு மே 2023 மற்றும் டிசம்பர் 2023இல் சிறப்புத் தேர்வுகளை நடத்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முடிவு (Annamalai University (Distance Education Examinations) decided to conduct special examinations in May 2023 and December 2023 for DDE students enrolled from 2002 to 2014)...

அண்ணாமலை பல்கலைகழகம்  தொலைதூரக் கல்வி இயக்கத்தில் கடந்த 2002 முதல் 2014 வரை தேர்வு எழுத தவறிய மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு வருகின்ற மே மாதம் 2023 மற்றும் டிசம்பர் 2023 ஆக இரண்டு காலப்பருவ தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் பல்கலைக்கழகம் சார்பாக இணையதள வழியில் பதிவு செய்துவிட்டு "மே மற்றும் டிசம்பர் 2023 தேர்வு  எழுதலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் வாய்ப்பு அளித்திருக்கிறார்கள்  ஆகவே இதை தங்கள் நண்பர்களுக்கும் மற்றும் தெரிந்தவர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  மேலும் இந்த இணையதளத்தில் தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்வது கொள்ளுங்கள் (http://www.coe.annamalai University.ac.in/bank/splddeapp.php

03.03.2023 முதல் 31.03.2023 வரை தங்கள் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...