கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Central University லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Central University லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்(Central University, Tiruvararur) உள்பட நாடு முழுவதும் உள்ள 12 மத்திய பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பில் பயில்வதற்கான நுழைவுத் தேர்வு (Common Entrance Test) குறித்த அறிவிக்கை(Announcement) வெளியீடு...

 


திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள 12 மத்திய பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பில் பயில்வதற்கான நுழைவுத் தேர்வு (Common Entrance Test) குறித்த அறிவிக்கை வெளியீடு..


>>> Click here to Download Entrance Exam Announcement...



தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் -Admission Notification...



 Tamilnadu Central University -Admission Notification...

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக மத்திய அரசால் மாநிலத்துக்கு ஒன்றென   "மத்திய பல்கலை கழகம்" என்ற பெயரிலேயே பதிமூன்று பல்கலை கழகங்கள் (சென்ட்ரல் யுனிவர்ஸிட்டிகள்) நடத்தப்பட்டு வருகின்றன.


இது போக, அஸ்ஸாம் பல்கலைகழகம், சில்சார் அஸ்ஸாம் மாநிலம்,  பாபா குலாம் ஷா பாதுஷா பல்கலை கழகம் ராஜோரி, ஜம்மு காஷ்மீர் மாநிலம், பெங்களூரு டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸ் யூனிவர்ஸிட்டி,  காலிக்கோட் பல்கலை கழகம் பேரம்பூர் ஒடிஸா மாநிலம் சர்தார் படேல் யூனிவர்ஸிட்டி ஆஃப் போலீஸ் செக்யூரிட்டி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் ஜோத்பூர் என பிற ஐந்து யூனிவர்ஸிட்டிகளும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படுகின்றன.


பொதுவாக இந்த  பல்கலைகழகங்களைப் பற்றிய விவரங்கள் தமிழ்நாட்டில் நிறைய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியவே இல்லை.  தமிழ்நாட்டில் இந்த பல்கலைகழகம் திருவாரூர் அருகே இருக்கிறது. இந்த பல்கலைகழகம் ஒவ்வொரு வருடமும் இருநூறு மாணவர்களுக்கு இண்டக்ரேட்டட் கோர்ஸூகளுக்கான அட்மிஷன் தருகிறது. Integrated MSc (Chemistry, Physics, Maths , Life Sciences) , Integrated MA ECONOMICS.  இது போக மாஸ்டர்ஸ் டிகிரி கோர்ஸ்களும் எம்பிஏ கோர்ஸுகளும் பிஎச்டி கோர்ஸ்களும் தனித்தனியே நடத்தப்படுகின்றன.


இங்கே படிக்கும் மாணவர்களில் பேர் பாதி பேர் கேரளாவைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். மீதிப்பேரில் மற்ற மாநிலத்தவர்கள் இருக்கிறார்கள் தமிழ்நாடு உட்பட.


ஒரு செமஸ்டருக்கு பீஸ் என்று பார்த்தால் முவாயிரத்திலிருந்து எட்டாயிரத்துக்குள் வருகிறது. இது போக ஆண்கள் பெண்களுக்கு  தனித்தனி ஹாஸ்டல் வசதியும் இருக்கிறது. ஹாஸ்டல் கட்டணங்களும் மிக மிக குறைவே.


ஆனால் இப்படி ஒரு கல்வி நிறுவனம் இருப்பது தமிழ்நாட்டில் நிறைய பெற்றோர்களுக்கு மாணாக்கர்களுக்கு தெரியவே இல்லை என்பது வருத்தத்துக்குரிய விசயம்.


எப்படி இந்த பல்கலை கழகங்களில் சேர்ந்து படிப்பது...


18 மத்திய பல்கலை கழகங்ளில் எந்த பல்கலைகழகத்திலும் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்க ஒட்டு மொத்தமாக ஒரே ஒரு நுழைவுத் தேர்வு தான் நடத்தப்படுகின்றது.  cucetexam. Central University common entrance exam.


+2 முடித்து அறுபது  சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலே போதுமானது. நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு  கவுன்ஸிலிங் மூலம் மாணாக்கர்களின் விருப்பத் தேர்வுகளுக்கு தக்க அட்மிஷன் வழங்கபடுகின்றன.


நேற்று முதல் இந்த தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

https://cutn.ac.in


மேலும் எல்லா விவரங்களும் இந்த தளத்தில் இருக்கின்றன. எந்தெந்த பல்கலை கழகங்களில் என்னென்ன கோர்ஸூகள் நடத்துகிறார்கள் என்பதை அறிய அந்தந்த பல்கலை கழகத்தின் இணைய தளத்தில் சென்று பார்க்கலாம்.  பல்கலை கழகங்களின் பெயர்களும் இணைய தள முகவரியுடன் மேற் சொன்ன தளத்திலேயே விவரங்கள் பெற்றுக் கொள்ளலாம்.


 https://cutn.ac.in/events/admissions-2021-2022/

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School students staged road blockade in support of suspended teacher

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...