பள்ளி மானியம் - பயனீட்டு சான்றிதழ் 2023-2024 (Composite School Grant Utilization Certificate – 2023-2024)...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
2021-2022 ஆம் நிதியாண்டு - அரசு தொடக்கநிலை/ நடுநிலை /உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு - பள்ளி மானியத் தொகைக்கான (Composite School Grant) - பயன்பாட்டுச் சான்றிதழ் (Utilization Certificate) மற்றும் அதற்கான வழிகாட்டுதல் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்ககம், செயல்முறைகள் (Financial Year 2021-2022 - Government Elementary / Middle / Secondary and Higher Secondary Schools - Composite School Grant - Utilization Certificate and Guidelines - Samagra Shiksha, State Project Directorate, Proceedings), ந.க.எண்: 8 /ஒபக/SCG/2021 நாள் 11.03.2022...
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி
மாநிலத் திட்ட இயக்ககம், சென்னை - 06
ந.க.எண்: 8 /ஒபக/SCG/2021 நாள் 11 .03.2022
பொருள்: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2021-2022 ஆம் நிதியாண்டு - அரசு தொடக்கநிலை/ நடுநிலை /உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு - பள்ளி மானியத் தொகைக்கான (Composite School Grant) - பயன்பாட்டுச் சான்றிதழ் மற்றும் அதற்கான வழிகாட்டுதல் - சார்பு.
பார்வை: 1: இவ்வியக்கக செயல்முறைகள் ந.க.எண் 8/ஒபக/ SCG (Secondary) / 2020-2021 நாள் : 21.08.2021.
2. இவ்வியக்கக செயல்முறைகள் ந.க.எண்8/ஒபக/ SCG (Secondary) / 2020-2021 நாள் : 05 .01.2022 .
3. இவ்வியக்கக செயல்முறைகள் ந.க.எண்8/ஒபக/ SCG (Elementary) / 2020-2021 நாள் : 22 .10 .2021.
4. இவ்வியக்கக செயல்முறைகள் ந.க.எண்8/ஒபக/ SCG (Elementary) / 2020-2021 நாள் : 03 .01.2022 .
அனைத்து அரசு தொடக்க, நடுநிலை/ உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதற்கும், மாணவர்கள் நல்ல சூழலில் கல்வி கற்பதற்கும் மற்றும் பள்ளி வசதிகளை பராமரிப்பதற்கும் நிதி ஆதாரமாக ஆண்டு தோறும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் பள்ளி மானியம் வழங்கப்படுகிறது.
பார்வை 1 மற்றும். 2 -ல் ஒன்றிய கல்வி அமைச்சகத்தின், திட்ட ஒப்புதல் குழு 2021-2022 ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்காக, UDISE 2019-2020 ன்படி, பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக் கேற்ப 6,177 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.3837.85 இலட்சம் பள்ளி மானியம் வழங்கப்பட்டது.
பார்வை 3 மற்றும் 4 -ல் UDISE 2019-2020 ன்படி, பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப 31214 அனைத்து அரசு தொடக்க நிலை மற்றும் நடுநிலை நகராட்சி / மாநகராட்சி/ நலத்துறைப் பள்ளிகளுக்கு ரூ.7790.3 இலட்சம் பள்ளி மானியம் வழங்கப்பட்டது.
மேலும் பள்ளி மானியத் தொகையில், மாநில திட்ட இயக்ககத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் முக்கியத்துவம் குறித்து அந்தந்த மாவட்டங்களில் கூட்டம் நடத்தி அதற்கான செலவின விவரம் மற்றும் கூட்டத்தின் தொகுப்பறிக்கையினை 18.03.2021-க்குள் மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்புதல் வேண்டும். இறுதியாக அனைத்து பள்ளிகளும் மார்ச் மாத (31.03.2022) இறுதிக்குள் செலவிடுவதை உறுதி செய்யவும், பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் செலவின விவரத்தை EMIS Portal- ல் பதிவேற்றம் செய்வதை உறுதி செய்யவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்..
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
The Chief Minister listed the educational structures of Tamil Nadu
தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...