கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>நரம்பியல் தொடர்பான மூன்றாண்டு பட்டப்படிப்பு

எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, நரம்பியல் தொடர்பான மருத்துவப் பரிசோதனை குறித்து, மூன்றாண்டு பட்டப் படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது.
"பி.எஸ்சி., - நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி" என்ற, இந்த புதிய மூன்றாண்டு பட்டப் படிப்பை, தமிழகத்தில் முதன்முறையாக, எம்.ஜி.ஆர்., மருத்துவப்பல்கலை துவக்குகிறது. மூளை நரம்பியல் செயல்பாட்டை, துல்லியமாக அறிவது; முதுகுத் தண்டுவடப் பகுதி மற்றும் முக்கியப் பகுதிகளில் உள்ள தசைப் பகுதிகளை ஆய்வு செய்வது தொடர்பாக, இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப் பட்டு உள்ளது.
தசைப் பகுதிகளின் பலவீனத்தை அறிவது, தூக்கத்தில் திடீரென வலிப்பு ஏற்படுவது உள்ளிட்ட பிரச்னைகளை, இந்தப் படிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்தப் படிப்பு, முன்னணி மருத்துவமனை வழியாக, மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் என, பல்கலை தெரிவித்துள்ளது.
பொதுவான நரம்பியல் மருத்துவம் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை குறித்த பிரச்னைகள் குறித்தும், மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்படும். ஆபத்தான நேரங்களில், நோயாளிகளை எப்படி கையாள்வது என்பது குறித்தும், பயிற்சி அளிக்கப்படும். படிப்பை முடித்ததும், உடனடியாக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் எனவும், பிளஸ் 2வில், உயிரியல், இயற்பியல்மற்றும் வேதியியல் பாடங்களை படித்த மாணவ, மாணவியர், இந்தப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், பல்கலை தெரிவித்துள்ளது.
சென்னையில், விஜயா மருத்துவமனையில் உள்ள, விஜயா கல்வி அகடமி மூலம், இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. இங்கு, அக்., 15ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

>>>அழகப்பா பல்கலையின், 25ம் ஆண்டு பட்டமளிப்பு விழா

காரைக்குடி அழகப்பா பல்கலையின், 25ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, கல்லூரி கலையரங்கில் வரும் 8ம்தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. தமிழக கவர்னர் ரோசய்யா பட்டங்களை வழங்குகிறார்.
துணைவேந்தர் சேது சுடலைமுத்து கூறியதாவது: பட்டமளிப்பு விழாவில், பல்கலை பல்வேறு துறைகள், மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் பயின்று தேர்ச்சி பெற்ற, 1035 மாணவ, மாணவிகளுக்கும், பல்கலை கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில், பயின்று தேர்ச்சி பெற்ற 7075 மாணவர்களுக்கும், இணைவு கல்வி திட்டத்தின் கீழ் பயின்று தேர்ச்சி பெற்ற 648 மாணவ, மாணவிகளுக்கும், தொலை தூர கல்வி வாயிலாக பயின்று தேர்ச்சி பெற்ற, 27571 மாணவ, மாணவிகளுக்கும் என, மொத்தம் 36 ஆயிரத்து 329 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட உள்ளது.
இவர்களில் மாணவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 603,மாணவிகள் 20,726. முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட, 112 ஆய்வு மாணவர்களும்,எம்.பில்., ஆராய்ச்சி பட்ட ஆய்வில் முதல் இடம் பெற்ற 14 மாணவர்கள், முதுகலை பட்ட படிப்பில் முதல் இடம்பெற்ற, 28 மாணவர்கள் தங்க பதக்கங்களை,கவர்னரிடம் நேரிடையாக பெறுகின்றனர்.
இணைப்பு கல்லூரிகளில் முதலிடம் பெற்ற 46 மாணவர்கள், இணைவு கல்வி தட்டத்தின் கீழ் பயின்று முதலிடம் பெற்ற 10 மாணவர்களுக்கு நேரிடையாக சான்றிதழ்களை வழங்குகிறார், என்றார்.

>>>நிதித்துறை அமைப்புகள் வழங்கும் படிப்புகள்

நிதித் துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் நபர்களுக்காக, நிதித்துறை நிறுவனங்கள், பலவிதமான டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்குகின்றன. தேசிய ஸ்டாக் எக்ஸ்சேன்ஞ் மற்றும் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேன்ஞ் போன்றவை அவற்றுள் முக்கியமானவை.
அத்தகைய நிறுவனங்கள் வழங்கும் படிப்புகளைப் பற்றி காணலாம்.
1. நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேன்ஞ்(NSE)
பைனான்சியல் மார்க்கெட் தொடர்பான முதுநிலைப் படிப்பை இந்நிறுவனம் வழங்குகிறது. வாரநாள் மற்றும் வார இறுதிநாள் முறையில் இப்படிப்பு வழங்கப்படுகிறது. இப்படிப்பானது, பைனான்சியல் மேலாண்மைக்கான தேசிய கல்வி நிறுவனத்தின்(NIFM) ஒத்துழைப்புடன் நடத்தப்படுகிறது.

>>>கல்விக்கு உலக வங்கி உதவி

இந்தியாவில் பள்ளி கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக உலக வங்கி சுமார் 500 மில்லியன் டாலர் அளவிற்கு கடன் உதவி அளி்க்க உள்ளது.
இந்தியாவில் பள்ளி உயர்கல்வி திட்டத்தை மேம்படுத்தும் வகையில் ராஷ்டீரிய மத்யமி்க் சி்‌க்ஷா அபியான் (ஆர். எம்.எஸ். ஏ) திட்டத்திற்கு சுமார் 500 மில்லியன் டாலர் அளவிற்கு கடன் உதவி வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் புதுடில்லியில் வெள்ளி்‌க்கிழமை கையெழுத்தானது.
நிதியமைச்சகத்தின் இணை செயலாளர் பிரமோத் சக்சேனா மற்றும் உலக வங்கிக்கான இந்திய இயக்குனர் ஓனோ ரூல் ஆகியோரிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. உலக வங்கி மூலம் பெறப்படும் நிதி கல்விதுறை வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

>>>ஆரம்ப பள்ளிகளில் பழைய முறையிலேயே பாடங்கள்

ஆரம்ப பள்ளிகளில் "செயல்வழி" கற்றல் முறைக்கு குட்பை சொல்லி, பழைய முறையில் பாடங்கள் நடத்தி வருகின்றனர்.
செயல்வழி கற்றல் அட்டைகள் வழங்காததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பல்வேறு புதிய முறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அனைவருக்கும் கல்வி, இடைநிற்றல் கல்வி, செயல்வழி கற்றல், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு என பல முறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக பழைய முறையை தவிர்த்து, ஒவ்வொரு மாணவ, மாணவியரும் திறமைக்கேற்ப, எளிதாக புரிந்து படிக்கும் முறையில் மாற்றியமைக்கப்பட்டது. முதல் ஐந்து வகுப்புகளுக்கு செயல்வழி கற்றல் முறை அறிமுகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு வகுப்பிற்கும் செயல்வழி கற்றல் அட்டைகள் வழங்கப்பட்டன.
மாணவ மாணவிகள், அட்டைகளை எடுத்து படித்துக் கொள்ளலாம். அவரவர் திறமைக்கேற்றவாறு, முடிந்த அளவு படிக்கலாம். நான்கு மாதங்களாக செயல்வழி கற்றல் அட்டைகள் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனால், ஆரம்ப பள்ளிகளில் செயல்வழிகற்றல் முறையில் பாடங்கள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மாறாக, பழைய முறையில் மீண்டும் வாசித்தல், கரும்பலகையில் எழுதி படித்தல், மனப்பாடம் செய்தல் முறைகள் பின்பற்றப்படுகின்றன.

>>>ஜவ்வாக இழுக்கும் 1,100 பேர் பணி நியமனம் : தேர்வாணையத்திற்கு உயர்கல்வி துறை உத்தரவு

ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கும், 1,100 உதவி பேராசிரியர் பணி நியமனத்தை, விரைந்து முடிக்குமாறு, ஆசிரியர் தேர்வாணையத்திற்கு (டி.ஆர்.பி.,), உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், உயர் கல்விக்கான பணி நியமனங்களை உடனுக்குடன் முடிப்பதற்கு வசதியாக, அத்துறையில், மண்டல இணை இயக்குனர் அந்தஸ்தில், ஒரு அதிகாரியை நியமனம் செய்ய, உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பள்ளிக் கல்வித் துறைக்கு தேவையான ஆசிரியரை தேர்வு செய்வதே, பெரும் பணியாக, தேர்வாணையத்திற்கு இருந்து வருகிறது. தற்போது, கூடுதலாக, ஆசிரியர் தகுதி தேர்வும் (டி.இ.டி.,) சேர்ந்து விட்டதால், பணிப்பளு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, உயர் கல்வித் துறைக்கு தேவையான ஆசிரியரை தேர்வு செய்யும் பணி, குறித்த காலத் தில் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நியமனம் செய்ய, 1,100 உதவி பேராசிரியரை தேர்வு செய்யும் பணி, ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு, இதுவரை தேர்வு செய்யப்படவில்லை. கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்ற, "நெட்' அல்லது "ஸ்லெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்ற நிலையில், அவர்களுக்கும் கூடுதலாக ஒரு தகுதித் தேர்வை நடத்தலாமா என, உயர் கல்வித் துறையிடம், டி.ஆர்.பி., ஆலோசனை கேட்டுள்ளது. அதை, உயர் கல்வித் துறை நிராகரித்து விட்டது.

இது குறித்து, உயர் கல்வி வட்டாரங்கள் கூறியதாவது: கல்லூரி ஆசிரியர் பணிக்கு வருபவர்கள், ஏற்கனவே, "நெட்' அல்லது "ஸ்லெட்' என்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுத் தான் வருகின்றனர். எனவே, அவர்களுக்கு மேலும் ஒரு தகுதித் தேர்வு தேவையில்லை. உயர் கல்வித் துறைக்கு தேவையான தேர்வுப் பணிகள், தொடர்ந்து தாமதமாகி வருகின்றன. எனவே, உதவி பேராசிரியர் தேர்வுப் பணியை, விரைந்து முடித்து, தேர்வுப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி.,யை வலியுறுத்தியுள்ளோம். பட்ஜெட் கூட்டத்தொடர் வருவதற்குள், ஏற்கனவே அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனவே, 1,100 உதவி பேராசிரியர் பணி நியமனம் விரைவில் நடக்கும். அத்துடன், உயர் கல்வித் துறைக்கு தேவையான பணி நியமனங்களை, உடனுக்குடன் கவனித்து நிறைவேற்றுவதற்கு வசதியாக, தனி அதிகாரியை வழங்குமாறு, டி.ஆர்.பி., கேட்டுள்ளது.
அதன்படி, மண்டல இணை இயக்குனர் நிலையில், ஒரு அதிகாரி, அங்கு நியமிக்கப்படுவார். அவர், உயர் கல்வித் துறைக்கு தேவையான பணி நியமனங்களை, விரைந்து முடிக்க, உதவுவார். இவ்வாறு உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு தமிழகத்தில் 712 பேர் பங்கேற்பு

நாடு முழுவதும், சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு, நேற்று துவங்கியது; தமிழகத்தில், 712 பேர் எழுதுகின்றனர். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பதவிகளில், காலி பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆண்டுதோறும், போட்டித் தேர்வுகளை மத்திய தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., நடத்துகிறது. நடப்பு ஆண்டுக்கான முதல்நிலை தேர்வு, மே மாதம் நடந்தது. இதில், நாடு முழுவதும், மூன்று லட்சம் பேர் பங்கேற்றனர். இதில், தேர்வர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், தகுதி பெற்றவர்கள், மெயின் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். தமிழகத்தில், 17 ஆயிரம் பேர், முதல்நிலைத் தேர்வு எழுதியதில், 712 பேர், மெயின் தேர்வுக்கு தகுதி பெற்றனர். நாடு முழுவதும், மெயின் தேர்வு நேற்று துவங்கியது. தமிழகத்தில், மெயின் தேர்வை நடத்தும் பொறுப்பு, அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில், கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஆகிய இரு மையங்களில், நேற்று துவங்கிய மெயின் தேர்வில், 712 பேரும் பங்கேற்கின்றனர். 26ம் தேதி வரை, தேர்வுகள் நடக்கின்றன. ஒவ்வொரு தேர்வரும், ஒன்பது தேர்வுகளை எழுத வேண்டும். ஒவ்வொரு தேர்வுக்கும், தலா, 300 மதிப்பெண்கள். இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், தகுதி வாய்ந்த தேர்வர், டில்லியில் நடக்கும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.மெயின் தேர்வு முடிவுகள், இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திலோ வெளியாகும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ...