ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கும், 1,100 உதவி பேராசிரியர் பணி நியமனத்தை,
விரைந்து முடிக்குமாறு, ஆசிரியர் தேர்வாணையத்திற்கு (டி.ஆர்.பி.,), உயர்
கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், உயர் கல்விக்கான பணி நியமனங்களை
உடனுக்குடன் முடிப்பதற்கு வசதியாக, அத்துறையில், மண்டல இணை இயக்குனர்
அந்தஸ்தில், ஒரு அதிகாரியை நியமனம் செய்ய, உயர் கல்வித் துறை முடிவு
செய்துள்ளது. பள்ளிக் கல்வித் துறைக்கு தேவையான ஆசிரியரை தேர்வு செய்வதே,
பெரும் பணியாக, தேர்வாணையத்திற்கு இருந்து வருகிறது. தற்போது, கூடுதலாக,
ஆசிரியர் தகுதி தேர்வும் (டி.இ.டி.,) சேர்ந்து விட்டதால், பணிப்பளு
அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, உயர் கல்வித் துறைக்கு தேவையான ஆசிரியரை தேர்வு செய்யும் பணி, குறித்த காலத் தில் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நியமனம் செய்ய, 1,100 உதவி பேராசிரியரை தேர்வு செய்யும் பணி, ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு, இதுவரை தேர்வு செய்யப்படவில்லை. கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்ற, "நெட்' அல்லது "ஸ்லெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்ற நிலையில், அவர்களுக்கும் கூடுதலாக ஒரு தகுதித் தேர்வை நடத்தலாமா என, உயர் கல்வித் துறையிடம், டி.ஆர்.பி., ஆலோசனை கேட்டுள்ளது. அதை, உயர் கல்வித் துறை நிராகரித்து விட்டது.
இது குறித்து, உயர் கல்வி வட்டாரங்கள் கூறியதாவது: கல்லூரி ஆசிரியர் பணிக்கு வருபவர்கள், ஏற்கனவே, "நெட்' அல்லது "ஸ்லெட்' என்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுத் தான் வருகின்றனர். எனவே, அவர்களுக்கு மேலும் ஒரு தகுதித் தேர்வு தேவையில்லை. உயர் கல்வித் துறைக்கு தேவையான தேர்வுப் பணிகள், தொடர்ந்து தாமதமாகி வருகின்றன. எனவே, உதவி பேராசிரியர் தேர்வுப் பணியை, விரைந்து முடித்து, தேர்வுப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி.,யை வலியுறுத்தியுள்ளோம். பட்ஜெட் கூட்டத்தொடர் வருவதற்குள், ஏற்கனவே அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனவே, 1,100 உதவி பேராசிரியர் பணி நியமனம் விரைவில் நடக்கும். அத்துடன், உயர் கல்வித் துறைக்கு தேவையான பணி நியமனங்களை, உடனுக்குடன் கவனித்து நிறைவேற்றுவதற்கு வசதியாக, தனி அதிகாரியை வழங்குமாறு, டி.ஆர்.பி., கேட்டுள்ளது.
அதன்படி, மண்டல இணை இயக்குனர் நிலையில், ஒரு அதிகாரி, அங்கு நியமிக்கப்படுவார். அவர், உயர் கல்வித் துறைக்கு தேவையான பணி நியமனங்களை, விரைந்து முடிக்க, உதவுவார். இவ்வாறு உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.